Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by தாமரை தாமரை
அருட்செல்வப் பேரரசே அவர் நான் சொன்ன கருத்துக்களுக்காக அப்பதிவை இட்டு இருக்கிறார் என எண்ணுகிறேன்.

இலக்கியம், காவியம் என்று வரும்பொழுது இது போன்ற கருத்துகள் தவிர்க்க முடியாதது.

புகழும்பொழுது நம் கவிஞர்கள் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து விடுவர். அதனால் ஒப்பீடுகள் என்று வரும்பொழுது நிகழ்வுகளை கூர்ந்து நோக்க வேண்டியதாகவே இருக்கிறது.

பல இடங்களில் பாரதத்த்ல் பல வீரர்கள் புகழப்படுகின்றனர். அந்தப் புகழ்ச்சியை அப்படியே ஏற்றுக் கொள்ளவா அல்லது அவர்களது சாதனைகளையும் செயல்களையும் உற்று நோக்கி உண்மைத் திறன் அறியவா? இதில் எது சரி. உண்மைத் திறன் அறிதலே முக்கியமானதாகும்.

கர்ணன் வஞ்சகனா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது என் நிலை கர்ணன் வஞ்சகன் அல்ல, வஞ்சகத்திற்கு துணை போன்வன என்று வேண்டுமானால் இருக்கலாம் என்றேன்.

கண்ணன் வஞ்சகனா என்ற கேள்விக்கு, கண்ணன் வஞ்சகம் செய்யவில்லை, அவன் தர்மத்தை அப்படியே ஏற்றுக் கொண்டவன் என்பதையும் ஒப்புக் கொண்டேன்.

இடையில் கர்ணன் அர்ச்சுனனை விட மாவீரன் (கவனிக்க - இங்கே ஒப்பீடு வருகிறது... எள்ளளவு என்றாலும் இவர்தான் உயர்ந்தவர் என்றே பதிலளிக்க முடியும். ஒப்பிடல் என்பது இதனாலேயே முழு உண்மைகளையும் சொல்லாது. தர்க்கம் என்று வரும்பொழுது, தம் கட்சியின் உயர்வுகளைக் கூறல் எதிர் கட்சியின் குறைகளைக் கூறல், ஒப்பிட்டு விளக்கல் என பலகோணங்களிலும் ஒரே நிகழ்வு அலசப்படத்தான் செய்யும்) என்ற விவாதப் புள்ளி வரவேதான் இந்த ஒப்பீடுகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் மஹாபாரதத்தில் வரும் நிகழ்வுகள் மட்டும்தான்.  நிகழ்வுகளை ஆழ நோக்கும்பொழுது மனதில் தோன்றுபவையை மட்டுமே எழுதுகிறேன்.

எல்லோரும் உயர்ந்தவர்களாகவே இருந்திருந்தால் மகாபாரதம் என்ற காப்பியமே உண்டாகி இருக்காதே.

தர்மத்தின் புரிதல்கள் முரண்படுவதால் பேரழிவு உண்டாக்கும் என்பதே மகாபாரதத்தின் சுருக்கம். அவரவர் அளவில் அவரவர் செய்தது சரிதான் என்று நின்றுவிடக்கூடாது என்பதே அதன் தத்துவம். தர்மம் எந்த மனிதரோடும் கட்டப்பட்டதல்ல. தர்மத்துடன் மனிதர்கள் தங்களை பிணைத்துக் கொள்ளவேண்டும் என்பதை இக்காவியம் மிக அழகாக காட்டும்.

இக்காவியத்தை கண்ணன் நமக்குச் சொன்னதாக வியாசர் சொன்னதாகச் சொன்னதை தொகுக்கச் சொன்னால் பகவத் கீதையை தாண்டாது பலரின் ஆய்வு. ஆனால் என் போன்ற சிலர் அவருடைய ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிய முற்பட்டு ஆழக் குளிப்பவர்கள் ஆவோம். அதில் கிடைக்கும் முத்துகள் பல. அவற்றை எளிய கேள்விகள் மூலம் பெரும் வாய்ப்புகள் இருந்தாலும் தங்கள் மனதில் இருக்கும் பிம்பங்கள் உடைவதை விரும்பாத காரணத்தால் மட்டுமே அவற்றை ஒதுக்குவது யாருக்கு நஷ்டம் என்பது உங்களுக்கே புரியும்.

//கர்ணன்  அவன் பாண்டவர்களின் அண்ணன் அவன் நினைத்திருந்தால் அவர்களுடன் இணைந்து அஸ்தினாபுரம் இந்திரப்பிரஸ்தம்  இரண்டையும் ஆண்டிருக்கலாம் ஆனால் அவன் செஞ்சொற்று கடன் தீர்க்கவே முயன்றான்.//

செஞ்சோற்றுக் கடன் தவறு என்பதற்கான விளக்கம் இங்கே

http://x.2334454.n4.nabble.com/-tp30p313.html
///கர்ணன் பெயர்  இன்னும் நிலைத்திருக்க கிருஷ்ணரின் ஆதரவும் தர்மமுமே காரணமாகும். ///

http://x.2334454.n4.nabble.com/-tp32p356.html


////ஏன் பிற  மதத்தினரை  போன்று அவனை பார்க்குறீர்கள்.  அவன் இல்லாத  மகாபாரதம்  உப்பில்லா பண்டம் போன்றது ////

என் மதம் என்பதால்தான் என் மத இலக்கியங்களில் ஆழ மூழ்கி ஆராய்கிறேன். பிற மதங்களில் நான் அப்படித் தலையிடுவது கிடையாது. கர்ணன் இல்லா மகாபாரதம் சுவையில்லாமல் போகுமா என்பது இன்னொரு விவாதமாகும். கர்ணனின் பங்கை குறைத்து மதிப்பிட இயலாது. அதேசமயம், ஒப்பிடுதல் என்று வரும்பொழுது பலகோணங்களில் ஆராய்தல் என்பதைத் தவிர்க்க முடியாது. ஆராயவே கூடாது என்றால் இதிகாசம் படிப்பது வீண்.


//// கண்ணனே வந்து கர்ணனை புகழ்ந்தாலும் நீர் அதனை ஏற்க மாட்டிர்கள். சகல கதா பாத்திரங்களும்  தன்னிறைவை  கொண்டது.இந்த  மஹாபாரதம் கடவுளின் முன் ஏட்பாடு அது அழகாக தான் இருக்கும்.வியாசர் மஹாபாரத்திட்கும்  கங்குலி மஹாபாரத்திட்கும் எவ்வளவு வித்தியாசம் என முதலில் படித்து உணருங்கள்         நேரில்  நின்று பார்த்தது   போல எழுதுகிறீர்கள். இதனை மொழி பெயர்ப்போர்  தமக்கு தமக்கு பிடித்த கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இருக்கின்றனர் அது போல தாங்களும் செய்தால் மிக விரைவாக மஹாபாரத்தினை அனைவரும் வெறுப்பார்கள். ////

கண்ணன் யாரைப் புகழ்வதிலும் வஞ்சனை செய்வதில்லை. அவர் எல்லோரையுமே எதாவது ஒரு கட்டத்தில் புகழ்ந்து இருக்கிறார்.  வியாசர் மஹாபாரதமே எத்தனை இடைச்செருகல் கொண்டது என நாமறியோம். சமஸ்கிருதப் புலமையும் கிடையாது. ஆனால் இங்கு அருட்செல்வப் பேரரசு பலரின் மொழிபெயர்ப்புகளையும் படித்து ஒப்பிட்டு திருப்தி ஏற்பட்டவுடன் எழுதுகிறார், கூடவே இன்ன பதிப்பில் இப்படியும் சொல்லப்பட்டிருக்கிறது என பின் குறிப்பும் சேர்க்கிறார். ஆக தன் பார்வையை இப்புத்தகத்தில் அவர் சொல்லவே இல்லை.

மஹாபாரதத்தைப் பற்றி இவ்வளவு ஆழமாக நான் விவாதித்த இடங்கள் இரண்டுதான். ஒன்று தமிழ்மன்றம். இன்னொன்று இந்தத் தளம். இந்தத் தளத்தின் பதிவுகளைப் படித்து பலரும் சிலாகித்து இருக்கின்றனர். அப்படி இருக்க மகாபாரத்தின் ஆழம் தெரியத் தெரிய அதன் வீச்சு அதிகரிக்குமே தவிர குறையாது.

//// ஒரே பானையில் சமைத்த உணவு வேறு வேறு சுவையை கொண்டதாய் இருக்கும் என்பது உமது கருத்து   (அத்தாவது  குந்தி மைந்தர்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்).அவதாரமான பரசுராமரின் சீடனை குறை கூறுவது பரசுராமரை குறைகூறுவது போன்றது  அத்தாவது கடவுளை.   பரசுராமர்  முக்காலமும் உணர்ந்தவர் அப்படி இருந்தும் தேவை அறிந்தே கர்ணனுக்கு குருவாக திகழ்ந்தார்  நீர்    கர்ணனின்     வீரத்தினை குறைசொல்லவில்லை.  பரசுராமரின் போதனையை குறை சொல்கிறீர்கள்.  பரசுராமர்  கிருஷ்ணரின் அவதாரம் என்பதை முதலில் உணருங்கள். ////

பாரதப் போரில் மூன்று முக்கியமானவர்கள்

1. பீஷ்மர் - பரசுராமரின் சீடர்
2. துரோணர் - பரசுராமரிர் அனைத்து அஸ்திரங்களையும் தானமாகப் பெற்றவர்
3. கர்ணன் - பரசுராமரின் சீடர்.

இவர்கள் மூவரையும் நம்பியே போரில் இறங்கினான் துரியோதனன்.
 
ஆக பரசுராமரின் சீடர்கள் மூன்று பேருமே எந்தப்பக்கம் நின்றார்கள் என நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  ஆக பரசுராமர் தவிர்க்கப்பட முடியாத பாத்திரமே...

பாயாசம், சாம்பார், பாகற்காய் என ஒரே பாத்திரத்தில் பலதையும் சமைக்கலாம். சுவை வெவ்வேறாக இருக்கும். பழைய சமைத்தலின் வாசனை மட்டுமே பாதிக்குமே தவிர ருசி அல்ல.

எல்லோருள்ளும் கடவுள் இருக்கத்தான் செய்கிறார்.