Reply – Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?
— by தாமரை தாமரை
விஷம் கொடுத்த காலகட்டம் கௌரவர்களும் பாண்டவர்களும் குருகுல வாசம் செல்லும் முன்பு என்பதுதான் இடிக்கிறது.

அப்படியெனில் கர்ணன் அத்தினாபுர அரண்மனையில் துரியோதனனுக்கு நண்பனாக இல்லாவிட்டாலும் ஒரு பணியாளனாக இருந்து கொண்டு  வந்திருந்தால் மட்டுமே, முக்கியமாக சகுனியுடன் தொடர்புள்ளவனாக இருந்திருந்தால் மட்டுமே சதியில் பங்கெடுத்து இருக்க முடியும்.

அதாவது, கிருபரிடம் பயிற்சி பெற்றுக் கொண்டே அரண்மனையில் பணியாற்றி இருக்க வேண்டும். அவன் திறமை கண்டு சகுனி இளவரசர்களுடன் அவனை நெருங்கிப் பழக வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்க வேண்டும். முக்கியமாக பாண்டவர் வரவிற்கு பின்....

அதனால் கௌரவர்கள் கிருபரிடம் குருகுல வாசம் சென்றபோது அவர்களுடனேயே கர்ணன் கிருபரிடம் சேர்ந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியே துரோணருடனும் துரியோதனனின் பணியாளனாகவே தொடர்ந்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கும்.

கிருபரிடம் செல்லும் முன்பு சூரியனை மானசீக குருவாக கொண்டு பயிற்சி எடுத்திருக்க வேண்டும். அரங்கப் போட்டிக்குப் பின் பரசுராமரிடம் சென்றிருக்க வேண்டும்.

கர்ணனின் ஆரம்ப காலம் இப்படித் தெளிவில்லாமல்தான் மஹாபாரதத்தில் இருக்கிறது. சில மஹாபாரத கதைகளில் பீஷ்மரால் கர்ணன் மகத நாட்டுக்கு அனுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதனால் அரங்கப் போட்டிக்கு மகத நாட்டில் இருந்து கர்ணன் வந்ததாகக் கொண்டால் கர்ணனை அடையாளம் தெரியாமல், பின்பு துரியோதனன் கண்டுகொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.