Reply – Re: How the name Gourawar came?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: How the name Gourawar came?
— by Ramesh Ramesh
திரு.மாணிக்கவேல் அவர்களுக்கு,

குருவின் வம்சத்தில் பிறந்ததால் கௌரவர்கள் என்று அழைக்க படுவதாகத்தான் நான் படித்திருக்கிறேன், நீங்கள் சொல்லும் தகவல் வேறு ஏதும் புராணத்தில் உள்ள தகவலாக இருக்கலாம்.


வடமொழியில் வம்ச மூதாதையர் பெயரின் மூலம் ஒருவரை அழைக்கும் பொது அந்த பெயர் சற்று மருவி அழைப்பது வழக்கம், உதாரணத்திற்கு துரோணருக்கு பாரத்வாஜர் என்ற பெயர் உண்டு, அதாவது பரத்வாஜர் புத்திரன் பாரத்வாஜர், கண்ணன் வசுதேவர் புத்திரன் என்பதால் வாசுதேவர் என்று பெயர் உண்டு, அர்ஜுனன் குந்தி புத்திரன் என்பதால் அவனுக்கு கௌதேயன் என்ற பெயர் உண்டு. குந்தி புத்திரனை எப்படி கௌதேயன் என்று அழைக்கிறார்களோ, அதே போல் குரு வம்சத்தில் பிறந்தவர்களை கௌரவர்கள் என்று அழைத்தார்கள்.

             மேலும் பாண்டவர்களும், துரியோதனாதிகளும் எப்படி குரு வம்சத்தவர்கள் ஆனார்கள்  என்பதை "சந்திர வம்சமா? குரு வம்சமா?" என்ற விவாத திரியில் திரு.தாமரை அவர்களின் விளக்கத்தை படித்தால் தெரிந்து கொள்ளலாம்.