Reply – Re: சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
— by சதீஷ் சண்முகம் சதீஷ் சண்முகம்
காயத்ரி,

வாய்மொழியாக சொல்லப்பட்டு வந்த மகாபாரதம் பல்வேறு இடைசொருகல்களுக்கு உட்பட்டு குப்தர்களின் ஆட்சிகாலத்தில் சமஸ்கிருத மொழியில்  எழுத்தாக்கம் பெற்றது. வியாசர் போதித்த 'ஜெய' (ஆரம்பகாலத்தில் அழைக்கபட்டது. பரிணாமம்: ஜெய - விஜய - பரத - மகாபாரத ) 8800 சுலோகங்களுடன் பல்வேறு காலகட்டத்தில் மெருகேறி தற்போது ஒரு லட்சத்திற்கும் மேலாக  ஸ்லோகங்கள் கொண்டிருக்கிறது தற்கால மகாபாரதம்.

ஆகவே, தாங்கள் சபா பர்வத்தை ஒரு முறை படித்துவிடுங்கள்.

திரௌபதி துகில்லுரிப்பின் பொது கர்ணன் கூறியது:

\\ O Dussasana, this Vikarna speaking words of (apparent) wisdom is but a boy. Take off the robes of the Pandavas as also the attire of Draupadi. Hearing these words the Pandavas, O Bharata, took of their upper garments and throwing them down sat in that assembly. Then Dussasana, O king, forcibly seizing Draupadi's attire before the eyes of all, began to drag it off her person.\\

மொழிபெயர்ப்பில்:

\\ ஓ துச்சாசனா, நீதி மொழிகள் பேசும் இந்த விகர்ணன் சிறுவனே. பாண்டவர்களின் உடைகளையும், திரௌபதியின் உடையையும் களைந்து விடு" என்றான் {கர்ணன்}. இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், ஓ பாரதா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் தங்கள் மேலாடைகளைக் களைந்து, கீழே தூக்கி எறிந்து அந்தச் சபையில் அமர்ந்தார்கள். பிறகு துச்சாசனன், ஓ மன்னா {ஜனமேஜயா}, அனைவர் முன்னிலையிலும் திரௌபதியின் ஆடைகளை வலுக்கட்டாயமாகப் பற்றி களைய ஆரம்பித்தான்.\\

இதை தவிர மகாபாரதத்தில் திரௌபதியின் ஆடை களைத்தல்  வேறெங்கும் பேசப்படவில்லை, விவாதிகபடவுமில்லை.

மேலும் திரு. அருட்செல்வ பேரரசன் அவர்களின் பதிவை மறுபதிவிடுகிறேன்.

\\ இது ஏற்கனவே பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருவதுதான். இது சம்பந்தமாக ஏற்கனவே நனது விவாதே மேடையில் திரு.மெய்யப்பன் அருண் அவர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section67.html மானம் காத்த மாயவன் சபாபர்வம் பகுதி 7அ என்ற பகுதியில் திரௌபதியின் துகிலரிப்பு சம்பவம் வருகிறது.

http://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section12b.html கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா! வன பர்வம் பகுதி 12 ஆ என்ற பகுதியில் சபையில் நடந்த சம்பவங்களைப் பற்றி கிருஷ்ணனிடம் பாஞ்சாலி விவரிக்கிறாள். அதில் துகிலுரிப்பு குறித்து அவள் பேசவில்லை.

இது தவிரவும் பல இடங்களில் பழிதீர்க்கும் வசனங்கள் பேசப்படும்போதெல்லாம் திரௌபதியின் துகிலுரிப்பு பேசப்படவில்லை.

இது சம்பந்தமாக ஆங்கிலத்தில் ஒரு சுட்டியைக் கவனிக்கவும் :Was Draupadi Disrobed in the Dice Hall of Hastinapura? - See more at: http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=1766

இதனால் மகாபாரதத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதற்கு வேறு ஆதாரம் இல்லை என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. அதில் ஓரளவு நியாயம் இருந்தாலும்,  சபைக்கு வராத ஒரு பெண்ணை அவளுடைய மாதவிடாய்க்காலத்தில் இரத்தக் கறையுடன் அழைத்து வந்தது; அல்ல அல்ல இழுத்து வந்தது கௌரவர்கள் பாண்டவர்களுக்கு இழைத்த பெரும் அநீதியும் அவமதிப்புமே ஆகும். \\

நன்றி.