Reply – Re: சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
— by சதீஷ் சண்முகம் சதீஷ் சண்முகம்
திரு. செந்தில்,

போர் நடக்க திரௌபதி துகிலுரிய வேண்டும் என்ற அவசியமில்லை.

கற்பொழுக்கம் மிக்க பெண்கள் காரணமில்லாமல் பொதுசபையில் பிரவேசிக்காத காலகட்டத்தில்,

மாதந்திர காலத்தில் ஒற்றை ஆடை உடுத்திருக்கும் ஒரு பெண்ணை, கூந்தலை பிடித்து வலுகட்டாயமாக இழுத்து வருவது, பொதுசபையில் நிறுத்துவது, வேசி, அடிமை என இகழ்வது, கணவனாக ஏற்க சொல்வது, தொடையை காட்டி அமர சொல்வது... அவமானமெற்றகாதா...??

ஒருவனின் உச்சபட்ச அவமானம், அவன் குடும்ப பெண்களை வசைபாடுவது. தங்களுக்கு அநியாயமும் அவமானமும் நேரும்போதெல்லாம் அமைதி காத்த பாண்டவர்கள், திரௌபதியை அவமானபடுத்திய போது வெகுண்டேழுந்தனர். (பீமனை அவமதிக்கவே திரௌபதியின் ஆடை களையச் செய்தான் கர்ணன்).