Reply – Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
— by சதீஷ் சண்முகம் சதீஷ் சண்முகம்
ஏற்கிறேன். துருபதன் மற்றும் தருமனையும் தாங்கள் ஒப்பிடுவதால் இதை பதிவிடுகிறேன்.

துருபதன் நியதியை பின்பற்றியே அவர் கடமையை செய்தார். ஆனால் எவ்விதத்திலும் திரௌபதியின் விருப்பத்திற்கு மாறாக அவர் நடக்க முற்படவில்லை. ( திரௌபதி அர்ஜுனனை மணமுடிக்கவேண்டும் என்பது விதியென்று ஒரு பக்கம் இருந்தாலும் )... ஒருவேளை திரௌபதி அர்ஜுனனை நிராகரித்திருந்தால் சுயம்வரமானது நடந்தேறிருக்காது.

சுதந்திரம் இதுவே இந்து மதத்தின் தனித்துவம். இதனடிப்படையில் தர்மர் செய்தது சரியா..?

என்ன தான் மனைவி மற்றும் தம்பியர் பாசத்திற்கு கட்டுப்பட்டு இருத்தாலும் சூதில் அவர்களை பணயம் வைத்தது தவறு. குறிப்பாக மனைவியிடம் அனுமதி வேண்டினாரா...

தர்மம் மிகவும் சுட்சுமமானது தான்...