Reply – Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
— by தாமரை தாமரை
உண்மைதான்.

ஜல்லிக்கட்டுக்குப் பின்னாலும் இதுபோன்ற அறிவியலே இருக்கிறது. வம்ச விருத்தி செய்யும் காளைகள் ஆரோக்கியமாக வீரம் நிறைந்ததாக சிறந்த பண்பணுக்கள் கொண்டதாக இருக்கவேண்டும் என்னும் நோக்கமே ஜல்லிக்கட்டுக்கும் பின்னணி. பண்டைத்தமிழன், மாட்டுக்கும், மகளுக்கும் ஒரு சேர வாழ்க்கையைத் தேடினான் என்பதற்கு ஆதாரம் அது.

துருபதன் சுயம்வரப் போட்டியை வைக்கக் காரணம் அர்ச்சுனன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்ற சந்தேகமே ஆகும். திரௌபதியை அர்ச்சுனனுக்கு மணம் முடிக்கவே பெற்றான் துருபதன் என்னும் பொழுது பொதுவான காரணமான நீங்கள் சொன்ன அறிவியல் அடிபட்டுப் போகிறது. அதாவது அர்ச்சுனனை கண்டறியத்தான் போட்டி நடந்தது என்று நேரடியாகச் சொல்லலாம்.திரௌபதிக்கு வென்ற வீரனை வேண்டாம் என்றும் சொல்லும் உரிமை பறிக்கப்படவில்லை.