Reply – Re: மஹா விஷ்ணு அவதாரம்..
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: மஹா விஷ்ணு அவதாரம்..
— by தாமரை தாமரை
இந்த பதில் உங்களில் பலருக்கு வெகு அதிர்ச்சி தருவதாக இருக்கும். ஏனெனில் சாதாரண மக்களுக்கு தெரிந்த வரிசை

1. மச்ச அவதாரம்
2. கூர்ம அவதாரம்
3. வராக அவதாரம்
4. நரசிம்ம அவதாரம்
5. வாமன அவதாரம்
6. பரசுராம அவதாரம்
7. இராம அவதாரம்
8. பலராம அவதாரம்
9. கிருஷ்ண அவதாரம்
10. கல்கி அவதாரம்.

ஆனால் முதல் அதிர்ச்சி - முதல் அவதாரம் மச்ச அவதாரம் அல்ல. வராஹ அவதாரமே முதல் அவதாரம் ஆகும்.

பிரம்மனின் படைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஸ்வாம்பிய மனு, சப்தரிஷிகள், பிரஜாதிபதிகள், தேவர்கள் என்று மேல்நிலைப் படைப்புகள் படைக்கப்பட்டு புவியில் உயிர்கள் படைக்கப்பட தேடியபோது பூமி இல்லை. வெறும் நீர்தான் இருந்தது.

காரணம் இரண்யாட்சன் பூமியை கடலில் மூழ்கடித்து வைத்திருந்தான்.

அந்த பூமியை மீட்டெடுக்க, இரண்யாட்சனை ஒழிக்க உருவெடுத்த அவதாரமே வராஹ அவதாரம் ஆகும். இவர் பெயரிலேயே இந்தக் கல்பம் ஸ்வேத வராஹ கல்பம் என அழைக்கப்படுகிறது. இவர் இரண்யாட்சனை ஒழித்து பூமியை மீட்டு மணந்தார். அதாவது பூமாதேவியே விஷ்ணுவின் முதல் மனைவி ஆவார். திருமகளான இலக்குமி பின்னர் மணந்து கொள்ளப்பட்டவர்.

அடுத்து எடுத்த அவதாரம்? அது நரசிம்ம அவதாரம் ஆகும்.

இரண்யாட்சனின் சகோதரன் இரணிய கசிபு அண்ணனைக் கொன்ற விஷ்ணுவின் மேல் கடுங்கோபம் கொண்டு அவரை வெறுத்தான். பிரம்மனை நோக்கி தவம் புரிந்து பல சக்திகளையும் பெற்றான். சாகாவரம் கேட்டான். பிரம்மன் கொடுக்க இயலாத வரம் சாகாவரம். காரணம் பிரம்மனின் படைப்புகள் அனைத்துமே நிரந்தரமற்ற மாயை ஆகும். பிரம்மையை செய்வதாலேயே பிரம்மன் என்று அழைக்கப்படுகிறார் அவர். அவரே சாகாவரமற்றவர் என்னும் பொழுது அவரால் சாகாவரத்தை கொடுக்க இயலாது. அதனால் பல சாத்தியக்கூறுகளைக் கோர்த்து ஒரு வரமாய் பெற்றான் இரணிய கசிபு. ஆனால் இன்றைய வக்கீல்களைப் போல அத்தனை கோர்ப்புகளிலும் ஓட்டைகளைக் கண்டுபிடித்து அவனை மாய்த்து பிரகலாதனுக்கு அருளினார் விஷ்ணு.

மூன்றாவது அவதாரம், கூர்ம அவதாரமாகும். இது பிரகலாதனின் பேரன் மஹாபலியின் ஆரம்ப காலத்தில் எடுக்கப்பட்டது. தேவர்களின் ஆணவத்தினால் அவர்கள் துர்வாசரால் சபிக்கப்பட்டு சக்தியிழந்தனர். அனைத்து செல்வங்களும் பாற்கடலில் மறைந்தன. தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைய அவர் அளித்த உபாயத்தின் படி மந்தார மலையை மத்தாகவும் வாசுகியைக் கயிறாகவும் கொண்டு அசுரர்களுடன் ஒப்பந்தமிட்டு பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது கூர்ம வடிவெடுத்து மலையை நிலை நிறுத்தினார் இறைவன். முதலில் வெளிவந்தது ஜேஷ்டா தேவி எனப்படும் மூதேவி.. அடுத்து வாசுகி ஆலகால விஷத்தைக் கக்க அதை சிவன் உண்டார். பின்னர் உச்சைஸ்ஸ்வ்ரம் என்னும் குதிரை, ஐராவதம், சந்திரன், மஹாலஷ்மி, கௌஸ்துப மணி இப்படி பலசெல்வங்கள் வெளிவந்தன. தேவர்களும் அசுரர்களும் செல்வங்களைப் பிரித்துக் கொள்ள விஷ்ணு மகாலஷ்மியை மணந்தார். பின்னர் தேவாசுரர்கள் சோர்ந்துவிட விஷ்ணு அபராஜித அவதாரம் எடுத்து ஆயிரம் கைகளால் தாமொருவருவராகவே கடைய தன்வந்திரி அமுதகலசத்துடன் வெளிப்பட்டார். பின்னர் மோகினி வடிவம் எடுத்து அசுரர்களுக்கு அமுதம் சேராமல் காக்க தேவாசுர யுத்தம் நடந்தது. இதில்  பிரஹலாதனின் மகனும், பேரன் மஹாபலிச் சக்ரவர்த்தியும் அசுரர்கள் சார்பில் போரிட்டு தோற்றனர்.

நான்காவது  அவதாரம் வாமன அவதாரம்

தேவாசுர யுத்தத்தில் தோற்ற மஹாபலி பல தவங்கள் செய்து வலிமை பெற்று மூவுலகையும் வென்று நூறு அஸ்வமேத யாகங்கள் செய்யத் திட்டமிட்டு 99 யாகங்களை முடித்து விட்டான். 100 வது யாகத்தின் போது கஸ்யபரின் மகனாக உபேந்திரன் என்ற பேரில் பிறந்து வளர்ந்த குள்ளரான வாமனர், மூன்றடி மண் கேட்டு மஹாபலியை ஆட்கொண்டார். அடுத்த இந்திரனாக இந்த மஹாபலியே பட்டமேற்பார். அதுவரை இவர் பாதாளத்தில் இருப்பார் என்பது புராணம்

ஐந்தாவது அவதாரம் மச்ச அவதாரம்.

மச்ச அவதாரம் 7 வது மனுவான வைவஸ்வத மனு காலத்தில் எடுத்த அவதாரமாகும். வைவஸ்வத மனுவின் உண்மையான பெயர் சத்தியவிரதன். இவன் சூரியனின் மகன் ஆவான். அதனால் இவன் குலமே சூரிய குலம் ஆயிற்று. இவன் கோதாவரி நதிபாயும் திராவிட நாட்டின் பகுதியை ஆண்டவன். இதற்கு முந்தைய சாக்ஷூச மனுவந்தரம் முடிந்ததால் பிரளயம் உண்டாகி பூமி நீரில் மூழ்கியது. அப்பொழுது பிரம்மன் நித்திரைக்கு போக அவர் கையில் இருந்த வேதங்களை அசுரன் திருடிக் கொண்டு கடலில் பதுங்கினான். சிறு மீனாக சத்தியவிரதனுக்கு கிடைத்த மீன் நாளுக்கு நால் பெரிதாக அதை கடலில் விட்ட சத்தியவிரதனை பெரிய கப்பல் கட்டி சப்த ரிஷிகள் மற்றும் தாவரங்கள் மற்றும் அனைத்து உயிரினங்களோடு கடலில் செல்லச் சொல்லி விட்டு அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார். அலைகளில் தத்தளித்த கப்பலை  நிலை நிறுத்தி பிரளயம் ஓய்ந்த பின் கரைசேர்த்தார். அந்த சத்தியவிரதனே வைவஸ்வத மனு ஆக ஆக்கப்பட்டார். இவரை சிரார்த்த தேவர் என்றும் சொல்வார்கள்.

ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.

இந்த வைவஸ்வத மனுவின் வழியே வந்த சூரிய குலத் தோன்றலே பரசுராமர் ஆவார். பரசுராமரின் கதை அனைவருக்கும் தெரிந்ததே.

இதன்பிறகு இராம அவதாரம், பலராம அவதாரம் கிருஷ்ண அவதாரம் என்பவை இந்த சதுர்யுகத்தைச் சார்ந்தது என்பதால் நம் அனைவருக்கும் வரிசை தெரியும். கல்கி அவதாரம் கலி-கி அவதாரம் அதாவது கலியுகத்தின் அவதாரம் என்று பொருள்படும். அதே சமயம் கல் - கி அவதாரம் அதாவது நாளைய அவதாரம் என்றும் பொருள்படும்.

விஷ்ணு பலப்பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.

சனத்குமாரர், கபிலர், நாரதர், வியாசர், கார்த்தவீர்யாச்சுனன், ரிஷப நாதர் (சமண மதத்தின் முதல் தீர்த்தங்கரர்) புத்தர், நர-நாராயணர், தத்தாத்ரேயர் இப்படி 22 அவதாரங்கள் பாகவத புராணத்திலும் விஷ்ணு புராணத்திலும் சொல்லப்படுகின்றன.

இப்பொழுது இரண்டு முக்கிய தத்துவங்களைச் சொல்லப் போகிறேன்