Reply – Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: திரௌபதி ஸ்வயம்வர போட்டியில் கர்ணன் நிஜமாகவே வென்றானா?
— by தாமரை தாமரை
யுகாதிஸ்,

நான் வேடிக்கையாக குறிப்பிட்டதை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டீர்கள். இருந்தாலும் அதில் சில உள்குத்துகள் உண்டு.

ஒரு பெண் தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும்பொழுது தன் தந்தையின் சாயலை அவனிடம் எதிர்பார்க்கிறாள். இது சிக்மண்ட் ஃப்ராய்ட் என்னும் உளவியல் தந்தையின் ஆய்வு முடிவு.

தன் கணவனிடம் தன் தந்தையிடம் பெற்ற அதே பாதுகாப்பு உணர்வை பெறத்தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புகிறாள்.

மேலும் தன் தந்தையுடன் கணவனை ஒப்பிட்டுப் பேசாத பெண்கள் மிகமிகக் குறைவு. தந்தையை விட மனைவியிடம் அதிக உரிமை படைத்தவன் கணவன். தந்தை தன் மகளை இன்னொருவருக்கு அளிக்க கடமைப்பட்டவன். கணவன் தன் மனைவியை யாருக்கும் விட்டுத்தரக்கூடாது. இதுதான் இங்கே வித்தியாசம். இதனால் துருபதன் செய்ததைவிட தர்மன் செய்தது அதிமோசம் என இங்குதான் நிர்ணயமாகுகிறது.

சுயம்வரப் போட்டி என்பதே முரணான பெயராகும். சுயம்வரம் என்றால் ஒரு பெண் தன் விருப்பத்தின் பேரில் கணவனைத் தேர்ந்தெடுப்பதாகும். ஆனால் போட்டி என்று வந்தால் அங்கே சுயம் அடிபட்டுப் போகிறதல்லவா?

சூதாட்டம் என்றால் என்ன? அதற்கான வரையறை என்ன? ஏமாற்று முறையில் விளையாடுவது சூதாட்டம் என்று மேம்போக்காய் பாராதீர்கள்.

உடலின் திறமையை சோதிக்கும் பல பந்தயங்கள் உண்டு
அறிவின் திறமையை சோதிக்கும் பல பந்தயங்கள் உண்டு

இப்படி திறமையால் வெற்றி பெறுவதாக அல்லாமல், வெற்றி தோல்வி என்பது அதிர்ஷ்டத்தால் நிர்ணயிக்கப்படுவதாக இருப்பதாயின் அந்த விளையாட்டிற்குப் பெயர்தான் சூதாட்டம்.

இந்த விளையாட்டில் சகுனி தன் திறமையாலும், தந்திர சக்தியாலும் வென்றானா அல்லது அதிர்ஷ்டவசமாக வென்றானா?

நிற்க...

பந்தயப் பொருளாய் பெண் இருக்கலாமா கூடாதா?

இதற்கு பதில் என்ன? சூதாட்டமோ வேறு ஆட்டமோ. பந்தயப் பொருளாய் பெண்ணை வைக்கலாமா? இந்தக் கேள்வியை மட்டுமே கேட்டேன்....