Reply – Re: தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது ...
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: தர்மன் தன் மனைவியை சூதாட்ட போட்டிக்கு பந்தயப் பொருளாய் அறிவித்தர்? இது தர்மமா?????
— by தாமரை தாமரை


http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section58.html


தர்மன் சூதாடியதற்குக் காரணம் அவன் மேற்கொண்ட நோன்பே காரணமாகும். அவன் சூதாட்டத்தை விரும்பாவிட்டாலும் அத்தனை வஞ்சனைகளுக்கும் தன்னைப் பலியாக்கிக் கொள்ளக் காரணம் இருந்தது. இந்தப்பகுதியை தெளிவாகப் படியுங்கள்.

வைசம்பாயனர் சொன்னார், "வேள்விகளில் முதன்மையான, சாதிப்பதற்குக் கடினமான ராஜசூய வேள்வி முடிவடைந்ததும், வியாசர் தனது சீடர்களுடன் யுதிஷ்டிரனிடம் வந்தார். அவரைக் கண்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் எழுந்து தனது பாட்டனான அந்த முனிவரை {வியாசரை} வழிபட்டு, அவரது கால்களைக் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, அமர ஆசனமும் கொடுத்தான். அந்த சிறப்புமிகுந்தவர் {வியாசர்}, விலையுயர்ந்த தங்க ஆசனத்தில் அமர்ந்து நீதிமானான யுதிஷ்டிரனிடம், "உனது இருக்கையில் அமர்" ,என்றார்.


தனது தம்பிகள் சூழ இருக்கையில் யுதிஷ்டிரன் அமர்ந்ததும், உண்மை பேசும் வியாசர், "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} நற்பேறில் வளர்ந்துவா. அடைவதற்கு கடினமான ஏகாதிபத்தியே மேலாதிக்கத்தை அடைந்துவிட்டாய். ஓ குரு குலத்தைத் தழைக்க வைப்பவனே, உன்னால் குரு குலம் வளமை அடையும். ஓ சக்கரவரத்தி {Emperor யுதிஷ்டிரா}, நான் முறையாக வணங்கப்பட்டேன். நான் உன்னிடம் விடைபெற விரும்புகிறேன்", என்றார். நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கறுத்த நிறம் கொண்ட அந்த முனிவரால் {வியாசரால்} இப்படி சொல்லப்பட்டதும், அந்தத் தனது பாட்டனின் கால்களைத் தொட்டு வணங்கி, "ஓ மனிதர்களின் தலைவரே {வியாசரே}, களைவதற்கு கடினமான சந்தேகம் எனக்குள் உதித்திருக்கிறது. ஓ மறுபிறப்பாளர்களில் {அந்தணர்களில்} காளையே {வியாசரே}, இதிலிருந்து என்னைக் காக்க உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. சிறப்பு மிகுந்த முனிவரான நாரதர், தெய்வீக, நடைமுறைச் சூழல், இம்மை என்ற மூன்று விதமான முற்குறிச் சகுனங்களை தெரிவித்திருக்கிறார். ஓ பாட்டா {வியாசரே}, சேதி மன்னனின் {சிசுபாலனின்} வீழ்ச்சியாக அந்த முற்குறிகள் முடிந்துவிட்டனவா?", என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா {ஜனமேஜயா},மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட மேன்மையான *பராசரரின் மைந்தரும், கறுத்த நிறத்தவருமான தீவில் பிறந்த வியாசர்,  பதிமூன்று வருடங்களில் {13}, ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா} அந்த முற்குறி சகுனங்கள் அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் அழிவைக் கொண்டு வரும். காலத்தின் ஓட்டத்தில், ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னை முதன்மைக் காரணமாகக் கொண்டு, ஓ பாரதா , துரியோதனனின் பாவங்களுக்காக,  பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அழிக்கப்படுவார்கள். ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, திரிபுராவைக் கொன்றவனும், நீலத்தொண்டையுடையவனுமான பவாவை {சிவனை} நீ உனது கனவில் காண்பாய். காளையைத் தனது குறியாகக் கொண்டவனை, மனித மண்டை ஓட்டை உறிஞ்சிக் குடிப்பவனை {சிவனை}, அந்தப் பயங்கரமானவனை, கடுமையானவனை, அந்த அனைத்து உயிர்களின் தலைவனை, தேவர்களுக்குத் தேவனை, உமையின் கணவனை, ஹரன் என்றும் சர்வன் என்றும் ரிஷன் என்று அழைக்கப்பட்டு, கைகளில் திரிசூலத்துடனும், பினகா என்ற வில்லுடனும், புலித் தோல் போர்த்தியிருப்பவனை நீ உனது கனவில் காண்பாய். காளையில் அமர்ந்த படி கைலாச மலை போன்ற வெள்ளை நிறத்தில், விடாமல் பித்ருகளின் உலகத்தின் பக்கமாகத் {தென் திசையாகத்} தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சிவனை நீ காண்பாய். ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, அதுதான் இன்றைய உனது கனவாக இருக்கும். அந்தக் கனவைக் காண்பதால் நீ துயருறாதே. காலத்தைவிட மேன்மையானது எதுவும் இல்லை. நீ அருளப்பட்டிரு. நான் இப்போது கைலாச மலையை நோக்கிப் போகிறேன். பூமியைக் கண்ணும் கருத்துமாக உறுதியுடன், பொறுமையாக அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஆண்டு வா!" என்றார் {வியாசர்}.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன. அந்தத் தீவில் பிறந்த சிறப்புமிகுந்த கறுப்பு நிற வியாசர், தனது சீடர்களுடன், வேதங்களின் அனைத்து விதிகளையும் கடைப்பிடித்தபடி கைலாசத்தை நோக்கிச் சென்றார். தனது பாட்டன் இப்படிச் சென்றது, துயரத்தால் உந்தப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து அந்த முனிவர் {வியாசர்} சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தான். அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனக்குள்ளேயே, "நிச்சயமாக முனிவர் {வியாசர்} சொன்னது நடந்தே தீரும். முயற்சியால் மட்டுமே விதியை வெல்ல முடியுமா?", என்று நினைத்துக் கொண்டான்,

பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்த யுதிஷ்டிரன் தனது தம்பிகளை அழைத்து, "மனிதர்களில் புலிகளே, தீவில் பிறந்த முனிவர் {வியாசர்} என்னிடம் பேசியதைக் கேட்டீர்கள். முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு நான் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன். க்ஷத்திரியர்களின் சாவுக்குக் காரணமாக இருக்கும் நான் சாவதுதான் அத்தீர்மானம். எனது அன்புக்கு உரியவர்களே, காலம் இப்படித்தான் வகுத்திருக்கிறது என்றால், நான் வாழ்வதில் பயன் என்ன?" என்று கேட்டான். மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன், "ஓ மன்னா, நினைவை அழிக்கும் இந்த பயங்கர மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர். தாங்கும் திறனை ஒன்றுகூட்டி, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, எது நன்மையோ அதைச் செய்யும்" என்றான்.

உண்மையில் உறுதியான யுதிஷ்டிரன், துவைபாயனரின் {வியாசரின்} வார்த்தைகளைச் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, தனது தம்பிகளிடம், "அருளப்பட்டு இருங்கள். இந்த நாளில் இருந்து நான் மேற்கொள்ளப்போகும் நோன்பைக் குறித்துக் கேளுங்கள். நான் எந்தக் காரணத்திற்காக வாழ்ந்தாலும், இனி வரும் பதிமூன்று {13} வருடங்களுக்கு, எனது தம்பிகளிடமோ, அல்லது பூமியின் மற்ற மன்னர்களிடமோ கடுஞ்சொல்லைப் பேசமாட்டேன். எனது உறவினர்களின் கட்டளைக்குக் கீழ் வாழ்ந்து, அறம் பயின்று, எனது நோன்புக்கு முன்மாதிரியாக வாழப் போகிறேன். எனது பிள்ளைகளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல், நான் இந்த முறையில் வாழ்ந்தால், (எனக்கும் மற்றவர்களுக்கும் இடையில்) எந்த ஒரு ஏற்பின்மையும் {முரண்பாடும்} ஏற்படாது. ஏற்பின்மையே {முரண்பாடே} உலகத்தில் போர் ஏற்படுவதற்கான காரணமாகும். போரை தூரமாக வைத்துவிட்டு, மனிதர்களில் காளைகளே, நான் அனைவருக்கும் ஏற்புடையதைச் செய்தால், உலகத்தில் என்னைக் குறித்து எந்தத் தீய கருத்தும் ஏற்படாது. தங்கள் அண்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட பாண்டவர்கள், அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்யும் அவர்கள் {பீமன்,அர்ஜுனன், நகுலன், சகாதேவன்} அவற்றை அங்கீகரித்து ஏற்றனர். நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், சபைக்கு மத்தியில் இப்படிப்பட்ட சபதத்தை ஏற்று, புரோகிதர்களைத் திருப்திப்படித்தி, உரிய சடங்குகளால் தேவர்களையும் திருப்திப்படுத்தினான். ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, அனைத்த ஏகாதிபதிகளும் சென்ற பிறகு யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன், அமைச்சர்களுடன், தனது அன்றாட நற்சடங்குகளைச் செய்து, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். ஓ மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர் அந்த மகிழ்ச்சிகரமான சபாமண்டபத்துடன் கூடிய வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தனர்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section45.html#sthash.kmPbn80u.dpuf


---------------------------------------------------------------------------------------------------------