Reply – அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்
— by விஜய சாரதி விஜய சாரதி
பீஷ்ம பர்வம் 91-லே அரவான் பிறப்பு பற்றிய குறிப்பு வருகிறது. வரிகளை அப்படியே தருகிறேன்

//அர்ஜுனனின் வீர மகன் {அரவான்}, புத்திசாலியான பார்த்தனால் {அர்ஜுனனால்}, நாகர்களின் மன்னனுடைய மகளிடம் {உலூபியிடம்} பெறப்பட்டவனாவான். கருடனால் அவளது கணவன் கொல்லப்பட்டதும், ஆதரவற்றவளாகவும், மகிழ்ச்சியற்ற ஆன்மா கொண்டவளாகவும் அவள் {உலூபி} ஆனாள். குழந்தையற்ற அவளை {உலூபியை}, உயர் ஆன்ம {நாக மன்னன்} ஐராவதன் அவனுக்கு (அர்ஜுனனுக்கு) அளித்தான். ஆசையின் {காமத்தின்} ஆதிக்கத்தில் தன்னிடம் வந்த அவளைப் பார்த்தன் {அர்ஜுனன்} தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான். இப்படியே அந்த அர்ஜுனன் மகன் {இராவான்}, வேறொருவன் மனைவியிடத்தில் பெறப்பட்டான் [3].//

ஆதி 216-லே அர்ஜுனனை உலூபி நாகலோகத்திற்கு இழுத்துச் செல்கிறாள். அங்கே அர்ஜுனன் அவள் யார் என்று வினவுகிறான்.
//அர்ஜுனனின் இந்த வார்த்தைகளைக் கேட்ட உலூபி, "ஐராவதனின் {Airavata} குலத்தில் பிறந்த கௌரவ்யன் என்றொரு நாகன் இருக்கிறான். ஓ இளவரசரே, நான் அந்தக் கௌரவ்யனின் மகள். எனது பெயர் உலூபி. ஓ மனிதர்களில் புலியே, சுத்திகரிப்பு காரியங்களுக்காக நீரோடையில் இறங்கிய உம்மை நான் கண்டு, காம தேவனால் மதியிழந்தேன். ஓ பாவமற்றவரே, நான் திருமணமாகாதவள். நான் உமது நிமித்தமாக காம தேவனால் துன்புறுகிறேன். ஓ குரு குலத்தில் வந்தவரே, உம்மைக் கொடுத்து இன்று என்னைத் திருப்திப்படுத்தும்", என்றாள் {நாகக் கன்னி உலூபி}.//

அதாவது பீஷ்ம பர்வத்திலே விதவையாக சொல்லப்படுபவள், ஆதி பர்வத்திலே தன் வாயாலேயே தான் திருமணமாகாதவள் என்று கூறுகிறாள். கங்குலி, கும்பகோணம் இரண்டு பதிப்புகளுமே இதில் ஒத்துப்போகின்றன. இரண்டு பாடங்களிளுமே அரவான் பரக்ஷேத்திரத்தில் பிறந்தவன் என்று இருக்கிறது.

இரண்டு கேள்விகள் இதிலிருந்து எழுகின்றன -

ஒன்று - உலூபி உண்மையில் திருமணமாகாதவளா அல்லது விதவை மறுமணம் அந்த காலத்திலேயே நடந்துள்ளதா?

இரண்டு - அப்படி மறுமணம் நடந்திருந்தால் அரவான் எப்படி பரக்ஷேத்திரத்தில் பிறந்தவன் ஆவான்?

இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்தால் தெளிவேன். நன்றி!