Reply – Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
மாற்றியிருக்கிறேன். சரிபாருங்களேன்...😊


2016-03-10 21:28 GMT+05:30 செ. அருட்செல்வப்பேரரசன் <[hidden email]>:
சரிதான் நண்பரே... பகுதி 113ல் உள்ள குறிப்புகளைச் சற்று மாற்றுகிறேன்.


2016-03-10 20:41 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஆரம்ப வியூகம் இது...

பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.


    [1] ஒன்பதாம் நாள் வியூகத்தையே பத்தாம் நாளிலும் கௌரவர்களும், பாண்டவர்களும் அமைத்துக் கொண்டதாக வில்லி பாரதம் கூறுகிறது. முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே, அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே, {வில்லி பாரதம் 3:ப.போ.ச.3}. அப்படியெனில், கௌவர்கள் அமைத்த வியூகமானது மீண்டும் சர்வதோபத்திர வியூகமாகவும், பாண்டவர்கள் அமைத்தது மண்டல {வில்லியின் படி பத்ம} வியூகமாகவும் இருத்தல் வேண்டும்.


அவனுக்குப் {சிகண்டிக்குப்} பின்னால் திரௌபதியின் மகன்களும், வீர அபிமன்யுவும் இருந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சாத்யகியும், சேகிதானனும் {சிகண்டியின்} இறுதிப் பாதுகாவலர்கள் ஆனார்கள் [2]. அவர்களுக்குப் பின் பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் இருந்தான். திருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் அடுத்து, ஓ பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அரசத் தலைவனான யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} துணையுடன், காற்றைச் சிங்க முழக்கங்களால் நிறைத்த படி அணிவகுத்தான். அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அடுத்து தன் துருப்புகளால் சூழப்பட்ட விராடன் இருந்தான். அவனுக்கு {விராடனுக்கு} அடுத்து, ஓ வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, துருபதன் இருந்தான். கைகேயச் {கேகயச்} சகோதரர்கள் ஐவர், வீர திருஷ்டகேது ஆகியோர், ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படையின் பின்புறத்தைப் பாதுகாத்தார்கள் [3].
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-109.html#sthash.oCncXF5V.dpuf

//போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.//

இப்பொழுது துரோணர் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் எங்கே இருந்திருக்க முடியும்?  இவர்களுக்கு ஒருபுறம் பீஷ்மரை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் சிகண்டி, பீமன், அர்ச்சுனன் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருக்கிறார்கள். பீஷ்ம பர்வம் பகுதி 114 ல்

Sanjaya said, "Hearing these words of the high-souled Drona, Bhagadatta and Kripa and Salya and Kritavarman, and Vinda and Anuvinda of Avanti, and Jayadratha the ruler of the Sindhus, and Chitrasena and Vikarna and Durmarshana and others, these ten warriors of thy army, supported by a large host consisting of many nationalities, fought with Bhimasena, desirous of winning high renown in the battle for Bhishma's sake.

என்றே ஆரம்பிக்கிறது. இதில் பீமனுக்கு உதவியாக அர்ச்சுனன் வருகிறான்,

சல்லியனும் சுசர்மனும் பீமார்ச்சுனர்களுடன் போரிட ... கிடைத்த இடைவெளியில் பீமசேனனை துரோணரும் தாக்குகிறார்.

Meanwhile Drona, noticing an opening, pierced Bhimasena, O bull of Bharata's race, with eight keen shafts furnished with heads shaped after the frog's mouth. Bhima, however, ever delighting in battle, pierced the preceptor, who was worthy of paternal reverence, with five broad-headed arrows, and then, O Bharata, with sixty.

அதன் பின் அர்ச்சுனன் பீமன் ஆகியோரைத் தொடர்ந்து செல்ல திருஷ்டத்துய்மன் வருகிறான்.

Then Dhrishtadyumna, O king, commanded all the troops, saying, 'Rush against the son of Ganga. Do not fear, ye best of car-warriors. Hearing those words of their generalissimo, the army of the Pandavas quickly advanced against Bhishma, ready to lay down their lives in that dreadful battle. Bhishma then, that foremost of car-warriors, received that large host rushing towards him, like the continent receiving the surging sea."

இப்பொழுதுதான்

Then diverse kings, of great might, urged by thy son, and accompanied by Drona and his son and a large force, and the mighty Dussasana at the head of all his uterine brothers, proceeded towards Bhishma staying in the midst of that battle.

அதாவது துரோணர் மற்றும் அஸ்வத்தாமன் ஆகியோர் பீஷ்மரை நோக்கி விரைகிறார்கள். அவர்களைக் கடந்து சென்றுவிட்டவர்கள் பீமார்ச்சுனர்கள், சிகண்டி, அபிமன்யு ஆகியோர். அவர்களருகே வந்து விட்டவர்கள் சாத்யகியும் திருஷ்டதுய்மனும்.

ஆகவே பர்வம் 113 இல் இருந்த நிலை வேறு. அஸ்வத்தாமனிடம் பீமனையும் சிகண்டியையும் தாக்கு என்று சொன்ன உடனே சுற்றி இருந்தோர் பீமனுடன் போர் செய்யச் சென்று விட்டனர். அஸ்வத்தாமன் முடிவெடுத்து நகர்வதற்குள் சாத்யகி வந்து விட்டான் ஏனென்றால் பீமார்ச்சுனர்களுக்குப் பின்னர் அவன் வந்து கொண்டிருந்தான். யுதிஷ்டிரன் நோக்கிச் செல்ல வேண்டிய துரோணர் திரும்பி திருஷ்டத்யும்னனுடன் போரிடுகிறார்.

சாத்யகிக்கு முன்னால் இருந்த அபிமன்யு பீஷ்மருக்குப் பின்னால் இருந்த துரியோதனனை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்தான்.

இதிலிருந்து புரிவது, துரோணரும், அஸ்வத்தாமனும் ஆரம்பத்தில் யுதிஷ்டிரனை நோக்கி முன்னேறிய பின் துரோணர் பீஷ்மரைக் காக்க அஸ்வத்தாமனை அனுப்புகிறார். அதற்கு அவன் அர்ச்சுனனையோ பீமனையோ ஓவர் டேக் செய்து செல்ல வேண்டும். அவனை பீமன் செல்லும் பகுதி வழியாகச் செல்லச் சொல்கிறார். அதற்கு முன்னால் சாத்யகியும் திருஷ்டதுய்மனும் அருகில் வந்துவிட்டனர் அதனால்  அஸ்வத்தாமன் சாத்யகியுடனும் திருஷ்டதுய்மன் துரோணருடனும் போரிடுகின்றனர்

எனவே பர்வம் 113 ல் பேசியது திட்டம். அதன் இலட்சியம் பீஷ்மரைக் காப்பது என்பதால் சிகண்டி, பீமனுடன் போரிடு என்றே சொல்லி இருப்பார் துரோணர். ஏனென்றால் பீமனையும், திருஷ்டத்துய்மனையும் தாக்குவதால் பீஷ்மரைக் காப்பாற்ற முடியாது என அவருக்குத் தெரியும்.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p733.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML