Reply – Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
கும்பகோணம் பதிப்பில் தெளிவாக இது திருஷ்டத்யும்னன் என்ற குறிப்பு கிடைக்கிறது நண்பரே...

மேலும், //போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.// என்ற வரிகளில் சாத்யகி எங்கே இருக்கிறான் பாருங்கள்.

பீஷ்ம பர்வம் பகுதி 113ல் காணப்படும் அஸ்வத்தாமன் அடுத்து பகுதி 116ல்  சாத்யகியுடன் போரிட்டதாகக் குறிப்பு இருக்கிறது... அதன் பிறகு அவன் சாத்யகியின் அருகில் இருந்த திருஷ்டத்யும்னன் மற்றும் பீமனுடன் போரிட்டிருக்கலாம் அல்லவா?


2016-03-10 12:19 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஒ கடும் நோன்புகளைக் கொண்டவனே {அஸ்வத்தாமா}, அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு [7], (பீஷ்மரின் வெற்றிக்காகப்) போருக்குச் செல்வாயாக. இன்று இந்தப் பயங்கரப் போரில் பெரும் படுகொலைகளை நீ காண்பாய். துணிவுமிக்க வீரர்களின் தங்கதால் அலங்கரிக்கப்பட்ட, விலையுயர்ந்த, அழகிய கவசங்கள் நேரான கணைகளால் துளைக்கப்படும். கொடிமரங்களின் நுனிகள், தோமரங்கள், விற்கள், கூர்முனை கொண்ட பளபளப்பான வேல்கள், தங்கத்தால் பிரகாசிக்கும் ஈட்டிகள், யானைகளின் முதுகில் உள்ள கொடிமரங்கள் ஆகியன அனைத்தும் கோபம் கொண்ட கிரீடியால் {அர்ஜுனனால்} வெட்டப்படும்.

    [7] வேறொரு பதிப்பில் இந்த வரி, “போரில் எதிரிகளை எதிர்த்துச் செல்பவனும், பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டவனுமான அர்ஜுனனைக் கண்டு, அவன் வரும் வழியை விட்டு விலகி, நீ போருக்குச் செல்வாயாக” என்று இருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பில், “அவனது {அர்ஜுனனின்} பாதையைத் தவிர்த்துவிட்டு, ஒழுங்கான நோன்புகள் கொண்ட பீஷ்மரிடம் செல்வாயாக” என்று இருக்கிறது.

- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-113.html#more

போ, பாஞ்சால மன்னனின் வாரிசுடன் {திருஷ்டத்யும்னன்} [8] மோதுவாயாக. என்னைப் பொறுத்தவரை, நான் யுதிஷ்டிரனை எதிர்த்துச் செல்வேன். மன்னன் யுதிஷ்டிரனுடைய பலமிக்க வியூகத்தின் இதயப்பகுதியை அடைவது கடினமாகும். அதிரதர்களால் அனைத்துப் புறங்களிலும் காக்கப்படும் அது {அந்த வியூகம்}, கடலின் உட்பகுதியைப் போன்று அடைவதற்குக் கடினமானதாகும். சாத்யகி, அபிமன்யு, திருஷ்டத்யும்னன், விருகோதரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரே {ஆகிய அந்த அதிரதர்களே}, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் யுதிஷ்டிரனைக் காக்கிறார்கள்.

    [8] இது சிகண்டியைக் குறிப்பதாக இருந்தால்…. முன்பு அர்ஜுனனுடன் மோதாதே என்பது போலத் துரோணர் சொல்கிறார். பின்பு அர்ஜுனனுக்கு முன்பு இருக்கும் சிகண்டியுடன் மோது என்கிறார். அஃதாவது இங்கே குறிப்பிடப்படுபவன் சிகண்டியாக இருந்தால், அஸ்வத்தாமனிடம் துரோணர், சிகண்டியைத் தனியாகப் பிரித்துச் சென்று போரிடச் சொல்கிறார் என நினைக்கிறேன். ஆனால் கங்குலி the heir of the Panchala king என்று சொல்வதால் இது திருஷ்டத்யும்னனாகத் தான் இருக்க வேண்டும். எனினும் பின்வரும் ஒரு பத்தியில் அடைப்புக்குறிக்குள் இது சிகண்டி என்றே சொல்கிறார் கங்குலி.


இந்திரனின் தம்பியைப் போன்று கருமையானவனும், சால மரத்தைப் போன்று உயரமாக எழுந்தவனுமான அபிமன்யு, இரண்டாவது பல்குனனைப் {அர்ஜுனனைப்} போல (பாண்டவப்) படையின் தலைமையில் நின்று முன்னேறிச் செல்வதைப் பார். உன் வலிமைமிக்க ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, உன் பெரிய வில்லைக் கையில் கொண்டு, பிருஷதனின் அரச மகனையும் (சிகண்டியையும்) {திருஷ்டத்யும்னனையும்} [9], விருகோதரனையும் எதிர்த்துச் செல்வாயாக. தன் அன்புக்குரிய மகன் பல வருடங்கள் வாழ வேண்டும் என்று விரும்பாதவன் எவன் இருக்கிறான். எனினும், க்ஷத்திரியக் கடமைகளை என் முன் கொண்டே, நான் உன்னை (இந்தப் பணியில்) ஈடுபடுத்துகிறேன் [10].


    [9] முன்பு துரோணர் சொன்னதும் சிகண்டியைத் தான் என்பதையே இங்குக் கங்குலி உறுதி செய்கிறார். ஆனால் வேறொரு பதிப்பில் இங்கு “பெரிய வில்லை எடுத்துக் கொண்டு, நல்ல ஆயுதங்களைப் பூட்டி திருஷ்டத்யும்னனையும், மன்னனையும், விருகோதரனையும் எதிர்த்து நீ போரிடுவாயாக” என்று இருக்கிறது. அஸ்வத்தாமனிடம் அர்ஜுனனைத் தவிர்க்கச் சொன்ன பீஷ்மர், அர்ஜுனனின் முன்பு இருக்கும் சிகண்டியை எதிர்க்கச் சொல்லியிருக்க மாட்டார். எனவே இங்கேயும் சரி, குறிப்பு [8]லும் சரி, திருஷ்டத்யும்னனையே துரோணர் சொல்வதாகவே தெரிகிறது.

    [10] துரோணர் சிகண்டியைச் சொன்னாரா, திருஷ்டத்யும்னனைச் சொன்னாரா என்ற குழப்பத்தை இன்னும் அதிகமாக்குகிறது இந்த வரி. இந்தப் பகுதி முழுக்க ஆய்வுக்குரிய பல நுணுக்கமான செய்திகள் இருக்கின்றன.


அதே போல, பீஷ்மரும், இந்தப் போரில், அதோ வலிமைமிக்கப் பாண்டவப் படையை எரித்துக் கொண்டிருக்கிறார். ஓ மகனே {அஸ்வத்தாமா}, போரில் அவர் {பீஷ்மர்}, யமனுக்கோ, வருணனுக்கோ இணையானவர் ஆவார்” என்றார் {துரோணர்}” {என்றான் சஞ்சயன்}.
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-113.html#more


இந்தப் பகுதியில் துரோணர் அஸ்வத்தாமனிடன் சொன்னது இதுதான்.

நீ பீஷ்மரை நோக்கிச் செல். செல்லும் வழியில் அர்ச்சுனனைக் கவனமாய் தவிர்த்து விட்டுச் செல். அப்படி அர்ச்சுனனைக் கடந்து பீஷ்மரிடன் சென்று விட்டு, அவர் அருகில் இருந்து சிகண்டியுடன் போரிடுவாயாக. அதாவது அர்ச்சுனனுக்கும் பீஸ்மருக்கும் இடையில் சிகண்டி நிற்காமல் தடுப்பாயாக. இதனால் அர்ச்சுனன் பாணங்களைத் தடுத்து பீஷ்மர் போர் புரிய இயலும் எனச் சொல்கிறார்,


வியூகத்தை நன்கு கவனித்தால் அஸ்வத்தாமன் எதிர்த்தது பீமனையும் சிகண்டியையும் எனப் புரியும்.

ர். ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டி துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்றான். பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.
- See more at: http://mahabharatham.arasan.info/2016/03/Mahabharatha-Bhishma-Parva-Section-109.html#sthash.r4B8LP05.dpuf

அதாவது சிகண்டி மையத்தில் இருக்க ஒரு பக்கம் அர்ச்சுனன், மறுபக்கம் பீமன் பாதுகாவலாக வருகின்றனர். துரோணர் பீமன் பக்கமிருந்து சிகண்டியை தாக்கச் சொல்கிறார். திருஷ்டத்துய்மன் யுதிஷ்டிரனுக்கு பாதுகாவலாக அவன் முன் இருந்தான்.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p724.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML