Reply – Re: பாண்டவர்கள் - பாண்டியர்கள் என்ன தொடர்பு?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பாண்டவர்கள் - பாண்டியர்கள் என்ன தொடர்பு?
— by தாமரை தாமரை
பீஷ்மரின் ஒற்றை வாக்கியமே பாண்டியர்களுக்கான தொடர்பாக காட்டப்படுகிறது.

அந்தக் காண்டீவந்தாங்கி {அர்ஜுனன்}, தனியனாகவே தேரில் வடபகுதி சென்று, வடக்குக் குருக்களை வீழ்த்தி, அவர்களுடைய செல்வங்களையெல்லாம் எடுத்து வந்தான். திராவிட நிலத்தைச் {Dravida land}சார்ந்த மக்களை, தனது படையின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்டான்.

மற்றபடி பாண்டியர்களுக்கும் அர்ஜூனனுக்கும் எப்படி உறவு ஏற்பட்டது என்பது மூலத்தில் கிடையாது. ஆனால் இதற்கு பதில் தமிழ் நாட்டு நாடக மேடைகளில் இருக்கின்றது.

அல்லிராணி, பாண்டியன் மலையத்துவஜனின் மகள் (பாண்டிய மன்னன் என்றாலே புராணங்களில் மலையத்துவஜன் தான், மதுரை மீனாட்சியின் தந்தையும் மலையத்துவஜனே)

அல்லிராணிக்கும் அர்ஜூனனுக்கும் திருமணம் நடந்தது. அவர்களின் மகன் புலந்திரன். பாண்டியனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் அல்லி ராணியானாள். (இதே போன்ற கதை மணிப்பூர் இளவரசி சித்ராங்கதா, அவள் மகன் பப்ருவாஹனன் கதை மஹாபாரதத்தில் உள்ளது)

புலந்திரன் பவளத்தால் ஆன தேருக்கு ஆசைப்பட, பவளம் கொண்டுவர அர்ஜூனன் பவள நாட்டுக்குச் செல்கிறான். அங்கு பவள நாட்டு இளவரசி பவளக்கொடி மீது காதல் பிறக்கிறது.

இதைத் தெரிந்து கொண்ட அல்லி, கணவன் மீது கடும் கோபம் கொண்டு, அவனைக் கொல்ல அலைகிறாள். கண்ணனின் ஆதரவுடன் அல்லியின் கோபத்தைத்தணித்து  பவளக் கொடிக்கு அர்ச்சுனன் மாலையிடுவதுதான் கதை.

ஆற்று மணலை வேண்டுமானால் எண்ணிவிடலாம் ஆனால் அர்ச்சுனன் மனைவிகளை எண்ண முடியாது என்ற பழமொழியும் தமிழ்நாட்டுடையதே...

புலந்திரனின் வம்சாவழி பாண்டிய நாட்டை ஆண்டதால் பாண்டியர்கள் சந்திர குலத்தவர் என்று அறியப்படுகின்றனர். அதேபோல் சிபிச் சக்ரவர்த்தியின் வழியில் தோன்றியதால் சோழர்கள் சூரிய வம்சத்தவர் ஆவர்.

பீஷ்மரின் கூற்றை நோக்கும் பொழுது, அல்லிராணிக் கதை உண்மைதானோ எனத் தோன்றுகிறது. அல்லிராணியின் தந்தையே பாண்டியமன்னனாக இருந்திருக்கவும் கூடும். ஏனெனில் பலமன்னர்கள் தங்கள் மகன்களுடன் போரில் கலந்து கொள்ள பாண்டியன் தனித்தே கலந்து கொண்டான்.

பவளக்கொடி 1934

“காளிதாஸ்’ படம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கழித்து வெளிவந்த படம் “பவளக்கொடி’. அந்தக் காலத்தில் புகழ் பெற்ற ராஜா சாண்டோ போன்ற இயக்குநர்களிடம் சிறிது காலம் பயிற்சி பெற்ற கே. சுப்பிரமணியம், “பவளக்கொடி’ நாடகத்தை திரைப்படமாக்க விரும்பினார்.

காரைக்குடியில் “பவளக் கொடி’ ஸ்பெஷல் நாடகத்தைப் பார்த்த உடனே அந்த நாடகத்தை சுப்பிரமணியம் டைரக்ஷனில் படமாகத் தயாரிப்பது என்றும், நாடகத்தில் நடித்த நாயகன், நாயகியையே படத்திலும் ஹீரோ, ஹீரோயினாகப் போடுவது என்றும் முடிவு செய்தனர்.  நாடகத்தில் அர்ச்சுனனாக நடித்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர் (ஆம். பிற்காலத்தில் சூப்பர் ஸ்டாராக ஆனவர்தான்). பவளக்கொடியாக நடித்தவர் எஸ்.டி. சுப்புலட்சுமி (பின்னாளில் கே. சுப்பிரமணியத்தின் துணைவியானவர்). 18 வயது பாகவதரையும், 15 வயது சுப்புலட்சுமி யையும் புக் செய்து பவளக்கொடி  உருவானது. படத்தின் நாயகன்,நாயகிக்கு மட்டுமின்றி இயக்குநருக்கும் அழியாத விலாசம் ஏற்படுத்திக் கொடுத்தது. 1934ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாரானார் பாகவதர். பின்னாளில்  1949  ஆம் ஆண்டு டி.ஆர்.மகாலிங்கம் நடிப்பில் மற்றொரு பவளக்கொடி வெளியானது.