Reply – Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பரசுராமரிடம் கர்ணன் பெற்ற சாபம்
— by தாமரை தாமரை

பீஷ்மர் கங்கைக்குப் பிறந்து, கங்கையால் வளர்க்கப்பட்டவர். அவர் கங்கையின் மகன் என்றே அறியப்பட்ட அவர் பரசுராமர், கங்கையின் வேண்டுகோளுக்கிணங்க பீஷ்மருக்கு குருவாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். மற்றபடி கர்ணனை கண்ட போதிலேயே அவன் மீது அவர் பிரியம் கொண்டு கேள்விகள் கேளாமலேயே அவனை சீடனாக்கிக் கொண்டார்.

இப்பொழுது இதே விஷயத்தைப் பின்னிருந்து பார்ப்போம்.

பாரதப் போரில் மூன்று முக்கியமானவர்கள்

1. பீஷ்மர் - பரசுராமரின் சீடர்
2. துரோணர் - பரசுராமரிர் அனைத்து அஸ்திரங்களையும் தானமாகப் பெற்றவர்
3. கர்ணன் - பரசுராமரின் சீடர்.

இவர்கள் மூவரையும் நம்பியே போரில் இறங்கினான் துரியோதனன். இதனால் துவாபர யுகத்திலும், திரேதா யுகத்தைப் போன்றே பரசுராமரால் மிகப்பெரிய ஷத்ரியப் பேரழிவு நிகழ்ந்தது. இவர்கள் மூவரும் இல்லாமலிருந்தால் போரில் இறங்க துரியோதனன் முடிவு செய்திருக்க மாட்டான். பாண்டவர் பக்கமிருந்து பல மாவீரர்களின் வதமும் நடந்திருக்காது.



அதாவது இம்மூவரையும் பரசுராமர் தனது முக்கால அறிவால் தேர்ந்தெடுத்தே தமது வித்தையைக் கொடுத்திருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.  அவரது வித்தை ஷத்ரிய அழிவுக்கே இங்கும் பயன்பட்டது என்பதே சூட்சமம் ஆகும்.