Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by தாமரை தாமரை
● PART-3 : EXPOSING ERRORS OF INTERPOLATED VIRAT WAR

ARJUNA TOLD UTTAR THAT HE HAD HELD GANDIVA BOW FOR 65 YRS

And after that Varunaheld it for a hundred years. And finally Partha,
surnamed Swetavahana, 1hath held it for FIVE AND SIXTY years.

http://www.sacred-texts.com/hin/m04/m04043.htm

[ Arjun did obtain Gandiva bow in khandav-dahan Parv. Abhimanyu was born in parv which comes before Khandava-dahan. Abhimanyu was either 33 yrs old or 16 yrs old its contradictory. Even if we assume he was 16 yr old still how can Arjun held gandiva for 65 yrs. Because he obtained gandiva after birth of Abhimanyu and if abhimanyu himself was 16 yrs old then how can Arjun held gandiva for 65 yrs. LOL]

Exposing funny logic of Arjun fans-

Arjun fan admin is trying to justify this by altering sloka. As per this funny admin, Arjuna was trying to say that he held gandiva for 32 years and he will use hold gandiva for 33 years in the future. Thats why 32 (past) + 33 (future) = 65 years. LOL

சமஸ்கிருதம் என்பது ஒரு கிரிப்டட் லேங்குவேஜ் அதாவது மறைகுறியாக்க மொழி. அதனாலேயே அதன் பொருள் காண்பதற்கு குருவின் உதவி தேவைப்படுகிறது.

சிவன், இதை {காண்டீவத்தை} ஆயிரம் {1000) வருடங்கள் வைத்திருந்தான். அதன்பிறகு பிரஜாபதி, இதை ஐநூற்றுமூன்று வருடங்கள் {503} வைத்திருந்தான். அதன் பிறகு, சக்ரன் {இந்திரன்}, இதை எண்பத்தைந்து {85} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு சோமன் {சந்திரன்}, இதை ஐநூறு {500} வருடங்கள் வைத்திருந்தான். அதன் பிறகு வருணன், இதை, நூறு {100} வருடங்கள் வைத்திருந்தான். கடைசியாக ஸ்வேதவாஹனன் [1] என்ற பட்டப் பெயர் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} இதை அறுபத்தைந்து {65} வருடங்கள் [2] வைத்திருந்தான். பெரும் சக்தியும், உயர்ந்த தெய்வீகப் பிறப்பும் கொண்ட இது {காண்டீவம்}, விற்கள் அனைத்திலும் சிறந்ததாகும். தேவர்களாலும் மனிதர்களாலும் கொண்டாடப்படும் இது {காண்டீவம்} அழகிய வடிவம் கொண்டதாகும். பார்த்தன் {அர்ஜுனன்}, இந்த அழகிய வில்லை வருணனிடம் இருந்து பெற்றான்.

இதில் வைத்திருந்தான் என்ற இறந்த காலத்தைச் சொல்லும் வார்த்தையில் தொங்க்கிக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் ஸ்லோகத்தில் இந்தக் காலம் இறந்த காலமாகக் காட்டப்படுகிறதா அல்லது முழு அளவு காலமாக காட்டப்படுகிறதா என புரிந்து கொள்ளுதல் முக்கியம்.

நன்கு கூர்ந்து அலசினால் உண்மை புரியும்

http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharata-Chronology2.html

பிங்கள வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாளில் யுதிஷ்டிரன் பட்டம்சூட்டப்பட்டான். அப்போது அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} வயது சரியாக 46 வருடம்.
{பீமனுக்கு வயது 45, அர்ஜுனனுக்கு வயது 44, நகுல சகாதேவர்களுக்கு வயது 43}


28.   அர்ஜுனன் 12 வருடம் தீர்த்த யாத்திரை சென்றான். அவன் {அர்ஜுனன்} காளயுக்தி (Kalayukthi) வருடத்தில் சென்று பிரமோதூத (Pramodhoota) வருடத்தில் திரும்பினான். பிரமோதூத வருடம் வைகாசி மாத வளர்பிறை 10ம் நாளில் அர்ஜுனன் சுபத்திரையைத் திருமணம் செய்தான். அபிமன்யு பிரமோதூத வருடத்தில்தான் பிறந்தான்.
{அர்ஜுனனுக்கும் சுபத்திரைக்கும் திருமணம் நடைபெறும் போது அர்ஜுனனுக்கு சுமார் வயது 57. அபிமன்யு பிறக்கும் போது அர்ஜுனனுக்கு சுமார் வயது 57}
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்:
"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221
சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222

 பிரமோதூது வருடம்  ஆவணி மாத வளர்பிறை 2ம் நாளில் காண்டவ வனம் எரிக்கப்பட்டது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 58 வருடங்கள் 10 மாதங்கள் 15 நாட்கள். மயன் கட்டிய சபாமண்டபத்தைக் கட்டி முடிக்க 1 வருடம் 2 மாதம் ஆகியது.

31.   பாண்டவர்கள் மயசபைக்குள் பிரசோத்பத்தி (Prajopatthi) வருடம் ஐப்பசி மாத வளர்பிறை 10ம் நாளில் நுழைந்தனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 60 வருடம் 5 நாள் ஆகும்.

32.   பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை 16 வருடங்கள் ஆண்டு வந்தனர். அதாவது சர்வஜித்த (Sarvajit) வருடம் ஐப்பசி மாதம் வளர்பிறை 10ம் நாள் வரை ஆண்டனர். யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 5 நாட்கள் ஆகும்.

--------------------------------------------------------------------------------------------------

மேற்கண்ட காலக்கணக்குபடி காண்டவ வனம் எரிக்கப்பட்ட போது தர்மனின் வயது 58 + 10 மாதங்கள்.

குருஷேத்திர யுத்தத்தின் போது

13 வருட வனவாசத்திற்குப் பிறகு குருஷேத்திரப் போர் நடைபெற்றபோது
யுதிஷ்டிரனுக்கு வயது   :89
பீமனுக்கு வயது         :88
அர்ஜுனனுக்கு வயது    :87
நகுல சகாதேவர்களுகு   :86
துரியோதனனுக்கு வயது :88
கர்ணனுக்கு வயது       :105
கிருஷ்ணனுக்கு வயது   :87

ஆக காண்டீபம் பெற்று 30 ஆம் வருடம் அந்த உரையாடல் நடைபெற்றது. மஹாபாரதப் போருக்கு பின் 34 ஆண்டுகள் தர்மன் ஆண்டான். காண்டீபம் அர்ச்சுனன் கையில் இருந்தது. அதன் பின் அர்ச்சுனன் காண்டீபத்தை தியாகித்தான். காரணம் கிருஷ்ணன் இருந்தபின் காண்டீபத்தின் சக்தி நீங்கியது.

அதாவது இப்பொழுது அதே செய்யுளைக் கவனியுங்கள்.

கடைசியாக ஸ்வேதவாஹனன் [1] என்ற பட்டப் பெயர் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} இதை அறுபத்தைந்து {65} வருடங்கள் [2] வைத்திருந்தான்.

இதில் வைத்திருந்தான் என்பது தவறான மொழிபெயர்ப்பு.

இந்தக் காண்டீபம் சிவன் கையில் ஆயிரம் {1000) வருடங்கள் இருந்தது. அதன்பிறகு பிரஜாபதி கையில் இதை ஐநூற்றுமூன்று வருடங்கள் {503} இருந்தது. அதன் பிறகு, சக்ரன் {இந்திரன்} கையில் எண்பத்தைந்து {85} வருடங்கள் இருந்தது. அதன் பிறகு சோமன் {சந்திரன்}, கையில் ஐநூறு {500} வருடங்கள் இருந்தது. அதன் பிறகு வருணன் கையில் நூறு {100} வருடங்கள் இருந்தது. கடைசியாக ஸ்வேதவாஹனன் [1] என்ற பட்டப் பெயர் கொண்ட பார்த்தன் {அர்ஜுனன்} கையில் அறுபத்தைந்து {65} வருடங்கள் [2] இருக்கும். பெரும் சக்தியும், உயர்ந்த தெய்வீகப் பிறப்பும் கொண்ட இது {காண்டீவம்}, விற்கள் அனைத்திலும் சிறந்ததாகும். தேவர்களாலும் மனிதர்களாலும் கொண்டாடப்படும் இது {காண்டீவம்} அழகிய வடிவம் கொண்டதாகும். பார்த்தன் {அர்ஜுனன்}, இந்த அழகிய வில்லை வருணனிடம் இருந்து பெற்றான்.

இப்படி வில்லின் கதையை சொல்லியதை, தன்மை - முன்னிலை - படர்க்கை கோணத்தில் மாற்றி எழுதியதால் உண்டாகிய குழப்பம் அது.

அர்ச்சுனன் கையில் அறுபத்தைந்து ஆண்டு காலம் காண்டீபம் இருக்கும் என்பது விதி. அதையே அர்ச்சுனன் குறிப்பிடுகிறான்.

காண்டீபத்தின் கதையை அர்ச்சுனனுக்கு யார் சொன்னார்கள்? அது இல்லவே இல்லையே.. அர்ச்சுனனுக்கு எப்படி தெரிந்தது என புதிதாக ஒரு கேள்வி வேண்டுமானல் எழுப்பிக் கொள்ளுங்கள். காண்டீபத்தின் உதவியால் முன்னோர்கள் யாரும் ஒரு சாதனையும் செய்யாத போது அர்ச்சுனன் மட்டும் எப்படி சாதித்தான்? அப்படியானால் சக்தி காண்டீபமா? இல்லை அர்ச்சுனனா?????