Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by தாமரை தாமரை
அரசியல்வாதிகள் மட்டுமே ஒரு உரையில் வரும் ஓரிரு வாக்கியங்களையும் வார்த்தைகளையும் எடுத்துக் கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக ஒரு அமைச்சர் இந்த கொலைப் பிரச்சனை மாநில அரசு கையாள வேண்டிய பிரச்சனை. நாட்டில் ஒரு நாயின் மீது யாராவது கல்லெறிந்தால் கூட மத்திய அரசுதான் காரணம் என்று கூற, எதிர்கட்சிகள் அந்த நாயை மட்டுமே பிடித்துக் கொண்டு போராட்டம் நடத்தின. அது போல் துண்டு துண்டாக எடுத்து கர்ணன் மாவீரன் என்று காட்டுவதால் கர்ணன் அர்ச்சுனனை விட மாவீரன் என நிரூபித்து விட இயலாது.

1. அர்ச்சுனனைக் கொல்ல வாசவ அஸ்திரத்தை அதாவது சக்தி அஸ்திரத்தைக் கர்ணன் இந்திரனிடமிருந்து பெறுகிறான். ஆனால் கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் எந்த தேவனையும் வேண்டி எந்த அஸ்திரமும் பெறவில்லை. அப்படியானால் மாவீரன் யார்? கர்ணனா? அர்ச்சுனனா?

2. விராடப் போரில் அர்ச்சுனன் பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன், கர்ணன் ஏனோயோரைத் தவிர்த்து நேரடியாக துரியோதனனைத் தாக்க விரைந்தது ஆரம்பம் மட்டுமே. அனைவரும் அவனுக்குக் குறுக்கே வந்து தடுத்த போது அவன் என்ன காலிலா விழுந்தான்? இல்லை அவனைக் காக்க அங்கே கண்ணன் தான் இருந்தானா? தடைகளை உடைத்து அவன் முன்னேறிக் கொண்டுதானே இருந்தான்?

இப்படி விவரிக்க, முழுமையாய் பார்க்க பார்க்கத்தான் உங்களுக்கு கர்ணனா அர்ச்சுனனா என விளங்கும். ஒவ்வொரு துண்டாய் இருக்கும் அனைத்து தகவல்களுக்கும் அடுத்த வாரம் முழுமையாய் பதில் தருகிறேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.