Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by Ramesh Ramesh
தங்களின் பதிவுக்கு நன்றி திரு விஜயன் அவர்களே,

                     தங்களின் நீண்ட பதிவிற்கு உடனடியாக என்னால் முழுதும் படித்து பதில் அளிக்க முடியவில்லை. இருப்பினும் திரு.அருட்செல்வன் பேரரசன் அவர்கள் கூறியது போல் நேரம் கிடைக்கும் பொது ஆராய்ந்து என் கருத்தை தெரிவிக்கலாம் என்று நினைக்கிறேன்.
                     
                      முதற்கட்டமாக பீஷ்மபர்வம் பகுதி 91இல் வரும் வரிகளை உங்களுக்கு தெரிவிக்கிறேன். துரியோதனன் கர்ணனை போரிட அனுமதிக்குமாறு கேட்கும்போது பீஷ்மர் அவனிடம் கர்ணன் அர்ஜுனனிடம் தோற்ற சம்பவத்தை எடுத்து சொல்லி பாண்டவர்கள் வெல்லமுடியாதவர்கள் என்று கூறுகிறார்.

//ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, பாண்டுவின் அதே மகன் {அர்ஜுனன்}, கந்தர்வர்களால் சிறைபிடிக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட்ட உன்னை மீட்டானே, அதுவே போதுமான அறிகுறியாகும். - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-099

அந்தச் சந்தர்ப்பத்தில், ஓ தலைவா {துரியோதனா}, துணிச்சல்மிக்க உன் உடன் பிறந்த தம்பிகள் அனைவரும், சூத சாதியைச் சேர்ந்த அந்த ராதையின் மகனும் {கர்ணனும்} தப்பி ஓடினார்கள். (அர்ஜுனனால் நீ மீட்கப்பட்ட) அதுவும் {அந்த நிகழ்வும்} போதுமான அறிகுறியே. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-099

அவன் {அர்ஜுனன்}, விராடனின் நகரத்தில் ஒன்றுகூடியிருந்த நம் அனைவரின் மீதும் தனியாளாகவே பாய்ந்தான். அது போதுமான அறிகுறியே. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-099

அவன் {அர்ஜுனன்}, சினத்தால் தூண்டப்பட்டிருந்த துரோணரையும், என்னையும் போரில் வென்று, எங்கள் ஆடைகளை எடுத்துச் சென்றான். அது போதுமான அறிகுறியே. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-099

தன் ஆண்மையைக் குறித்துப் பெரிதாகத் தற்பெருமை பேசும் கர்ணனையும் தோல்வியடைச் செய்த அவன் {அர்ஜுனன்}, பின்னவனின் {கர்ணனின்} ஆடைகளை உத்தரனுக்குக் கொடுத்தான். அது போதுமான அறிகுறியே. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-099//

 மேற்கண்ட வரிகளில் பீஷ்மர் கர்ணன் புறமிதுகிட்டு ஓடியதையும், விராட போரில் கர்ணன் அர்ஜுனனிடம் தோற்றதையும் எடுத்துக்கூறுகிறார். பீஷ்மர் எந்த காலத்திலும் பொய் பேசாதவர் என்பதால் மேற்கண்ட வரிகளை பொய்யாக நினைக்க முடியாது.

 அதே போல கர்னபர்வத்திலும் சல்லியன் கர்ணனை இகலும் போது விராட போரில் அவன் தோற்றத்தை எடுத்து சொல்லும் வரிகள் உள்ளன. கர்ணனும் அவற்றை மறுக்கவில்லை.

 மேலும் ஆதி பர்வத்தில் திர்திராஷ்டிரன் சஞ்சயனிடம் எப்பொழுது அர்ஜுனன் தனி ஒருவனாக விராட போரில் வென்றானோ அப்பொழுது எனக்கு வெற்றியில் நம்பிக்கை இல்லை என்று கூறினான்.
//எப்பொழுது, எனது மூத்த வீரர்கைளயும் அர்ஜுனன் தன்னந்தனியாக
விராடத்தில்வென்றான், என்று அறிந்தேனா அப்பொழுேத எனக்கு
வெற்றியில் நம்பிக்கையில்லை.// ஆதி பர்வம் பகுதி ஒன்று ஆ.

இப்படி நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்த்தல் பல இடங்களில் விராட போர் குறித்த தகவல் உங்களுக்கு கிடைக்கும்.