Reply – Re: சிவன் ஏன் லிங்கமானார்?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: சிவன் ஏன் லிங்கமானார்?
— by விஜய சாரதி விஜய சாரதி
மஹாபாரதத்தில் இந்த கதை வருகிறதா என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் உலக நன்மைக்காக முனிவர்கள் யாகம் செய்ய முற்பட்டபோது, யாரை முதற் கடவுளாக கொள்வது என்ற விவாதம் எழுந்தது. பிருகு முனிவர் மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்று அறிய புறப்பட்டார்.

பிரம்ம லோகத்தில் பிரம்மன், சரஸ்வதியின் வீணை இசையில் மூழ்கி பிருகு முனிவர் வந்ததை கவனிக்கவில்லை. அதனால் கோபமடைந்த பிருகு முனிவர் பிரம்மனுக்கு பூலோகத்தில் கோயில்கள் அமையாது என்று சாபமிட்டார்.

பின் சிவனைக் காண பிருகு முனிவர் கைலாயம் சென்றார். அங்கும் சிவபெருமான் தன் தேவியையே கவனித்துக் கொண்டிருக்க, அவருக்கு பூலோகத்தில் உருவ வழிபாடு நடக்காமல், லிங்க வழிபாடு மட்டுமே நடக்கும் என்று சபித்தார்.

பின் வைகுண்டத்திற்கு சென்ற பிருகு மஹரிஷி, விஷ்ணுவும் லக்ஷ்மி தேவியைப் பார்த்துக் கொண்டு, தான் வந்ததை கவனியாமல் இருப்பதைக் கண்டு ஆத்திரத்தால் மஹாவிஷ்ணுவின் மார்பிலே எட்டி உதைத்தார். மஹாவிஷ்ணு கோபமடையாமல் அவருக்கு பாத சேவை செய்தார். அதனால் குணத்தில் சிறந்த மஹாவிஷ்ணுவே முதற் கடவுள் என்று பிருகு மஹரிஷி தீர்மானம் செய்தார்.

பிருகு முனிவரின் சாபத்தால், பிரம்மனுக்கு கோவில்கள் இல்லாமல் போனது. (புஷ்கர் என்னும் இடத்தில் பிரம்மனுக்கு கோவில் உண்டு). அதே போல் சிவனுக்கு உருவ வழிபாடு இல்லை. லிங்க வழிபாடே உள்ளது. (சிதம்பரத்தில் நடராஜ மூர்த்தம் உண்டு). பொதுவாக பிருகு முனிவரின் சாபப் படியே பிரம்மா, சிவன் இவர்களது வழிபாடு உள்ளது.

குறிப்பாக லிங்கம் ஏன் வழிபடபடுகிறது என்பது எனக்கும் தெரியாது. ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுளை லிங்கம் குறிப்பிடுவதாக பெரியவர்கள் கூறியுள்ளனர்.