Reply – Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES
— by விஜய சாரதி விஜய சாரதி
சஞ்சித கர்மா என்பது அம்பறாதூணியில் இருக்கும் அம்புகள் போல. பிராரப்தம் என்பது விடுப்பட்ட அம்பு போல.

சஞ்சித கர்மாவை சென்ற பிறவியின் கர்மா என்று கொள்ள வேண்டாம். அது பல பிறவி கர்மாக்களின் தொகுப்பு. அது அத்தனையும் ஒரே ஜன்மாவில் அனுபவிக்க முடியாது. அதை கடவுள் அவர் கருணையால் பிரித்துக் கொடுக்கிறார்.

இந்த ஜன்மாவில் நாம் எங்கு பிறக்கிறோம், அதன் சூழ்நிலை என்று பல விஷயங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு விதி அமைகிறது. அதற்கேற்றபடி சஞ்சிதத்தின் ஒரு பகுதி பிராரப்தமாகிறது.

'நம்முடைய கிரிய மான கர்மா, அடுத்தடுத்த பிறவிகளில் பிராரப்த கர்மாவை மாற்றவல்லது. ' - நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் அடுத்தடுத்த பிறவிகளின் பிராரப்தத்தை (future prarabdha)  பிராரப்தம் என்று சொல்வதில்லை. அடுத்தடுத்த பிறவிகளின் பிராரப்தம் தற்போது சஞ்சிதம்தான். அடுத்த பிறவியில்தான் அது பிராரப்தம். அதாவது அது பிராரப்தம் ஆவதற்கு முன்பே, சஞ்சிதமாக இருக்கும்போதே அழிக்க வேண்டும்.

உதாரணமாக ஒருவர் ஒரு தவறிழைத்து விட்டார். கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. அவர் செய்த தவறு இப்போது சஞ்சிதம். அதற்கு தீர்ப்பு வந்துவிட்டால் பிராரப்தம். அந்த கேஸ் நடக்கும் போதே அவர் செய்த தவறுக்கு நஷ்டஈடு கொடுத்து கேஸை வாபஸ் பெற செய்தால் செய்யலாம். அந்த நஷ்டஈடு தான் க்ரியமான கர்மம்.

சற்றேறக்குறைய ஒரே விஷயத்தைதான் இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். பெயர்கள்தான் மாறுகின்றன. அதனால் இத்துடன் இந்த திரியை விட்டுவிடுகிறேன்.