Reply – Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: KARMA VS VITHI NEED EXPLAIN AND EXAMPLES
— by தாமரை தாமரை
இடுக்கண் வருங்கால்  நகுக.

காரணம் இருக்கிறது. சென்ற பிறவியின் அவுட் புட்டான கர்மங்கள் இந்தப் பிறவியின் விதியாக அமைகின்றன.

ஒரு துன்பம் வருகின்றது என்றால், அது ஒரு தீய கர்மத்தினால் விளைந்த விதி என உணர்க. ஆக ஒரு துன்பத்தை அனுபவிப்பதன் மூலம் ஒரு தீய கர்மத்தைத் தொலைக்கிறோம். அதற்கு நாம் மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்?

பல பக்தர்கள் இப்பிறவியில் பலப்பல துன்பங்கள் அனுபவிக்கக் காரணம் அவர்களின் தீயகர்மங்கள் விரைவில் தொலையவே என்பதைச் சிந்தித்தோமானால், பக்தியினால் ஒருவன் விரைவில் இறைவனை அடைவதை காணலாம்.

அதே சமயம் தீயவர்களின் நற்கருமங்கள் விரைவில் தீர்ந்தாலே அவர்கள் தீய கருமங்களுக்கான பலனை முழுதாகப் பெற முடியும். ஆக தீயவர்கள் சுகிப்பது தம் நற்கருமங்களை விரையமாக்கவே....

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் எண்ணப் படும்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் - நற்கருமங்களைத் தொலைக்கும். தூக்கி எறியப்போகின்ற சட்டையில் விலையுயர்ந்த பொத்தான்கள் பதிக்கப்பட்டிருந்தால் எடுத்து வைப்பதைப் போல..

செவ்வியான் கேடு - சற்றே அடிபட்ட பழத்தில் பாதிக்கப்பட்ட சிறு பகுதியை நீக்கி உண்பது போல...

அங்கே சட்டை எறி்யப்பட்டது. இங்கே பழம் உண்ணப்பட்டது. முழுமையாகப் பார்க்கும் பொழுது மாத்திரமே நமக்கு விவரங்கள் புரிகின்றது. இல்லையென்றால் பழத்தை வெட்டி வீசுகிறான் என்றும் சட்டையைப் பத்திரப்படுத்துவதாகவும் தோன்றும்.

விதியை மதியால் மாற்ற முடியும் என்பது இதனால்தான். இன்றைய கருமங்கள் நாளைய விதியை உருவாக்கவல்லவை. இன்று மரம் வளர்த்தால் மழை ஒழுங்காகும். மரம் வெட்டினால் மழை தாறுமாறாகும். நீர் தேக்கினால் நிலத்தடி நீர் பெருகும். இப்படி இன்றைய செயல்களின் விளைவு நாளைய விதி ஆகும். இன்று என்ன நடக்கிறது என்பது விதி. நாளை என்ன நடக்கும் என்னும் விதி கருமங்களால் விளைகிறது. அதனால் நம் மதியால்  நாளை என்பதை கருமங்களைக் கொண்டு நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

ஒரு முயற்சி என்பது பலன் தராமல் போகவே போகாது.

விதியை யாரோ எழுதுவதில்லை.  நம் விதியை நம் கர்மங்களால் நாமே எழுதிக் கொள்கிறோம்.