Reply – சந்திர வம்சமா? குரு வம்சமா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
சந்திர வம்சமா? குரு வம்சமா?
— by தாமரை தாமரை


இரண்டும் ஒன்றுதானே என்று ஆரம்பத்திலேயே சலித்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்லும் குரு துஷ்யந்தனுக்கு முந்தைய அரசன் குரு அல்ல. தேவகுரு பிரஹஸ்பதி.

சந்திர வம்சம் உண்டான கதை இதோ...

சந்திர குலத் தோற்றம்

சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.

தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துசென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.

ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். பரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.

தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். பரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.

-----------------------------------------------------------------------------------------

புதனின் தந்தை யார் என்பதுதான் என் கேள்வி.

புதனின்  தந்தை உயிரியல் முறைப்படி பார்க்கப்  போனால் சந்திரன் தான். ஆனால் அப்படிப் பார்க்கப் போனால் பாண்டவர்கள் என்று  நாம் அழைக்க முடியாதே....
கண்ணன் கர்ணனுக்குச் சொல்வதைக் கவனியுங்கள்

'ஒரு கன்னிகைக்கும், அந்தக் கன்னிகையை மணந்த தங்கள் தந்தைக்கும் காநீகன், சகோடன் என்று இருவகையான மகன்கள் பிறக்கிறார்கள்' என்று சாத்திரங்களை நன்கு அறிந்தோர் சொல்கின்றனர். ஓ! கர்ணா, நீயும் இவ்வழியிலேயே பிறந்திருக்கிறாய். {சாத்திரங்களை அறிந்தோர், ஒரு கன்னிகைக்குப் பிறக்கும் காநீகன் மற்றும் சகோடன் என்ற இருவகைப் பிள்ளைகளுக்கு, அந்தக் கன்னிகையை மணந்தவனே தந்தை என்று சொல்கிறார்கள்}. எனவே, தார்மீக அடிப்படையில் நீயும் பாண்டுவின் மகனே. வா, சாத்திரங்களின் கூற்றுப்படி நீ மன்னனாவாயாக. உனது தந்தையின் {பாண்டுவின்} வழியில் பிருதையின் {குந்தியின்} மகன்களையும் {பாண்டவர்களையும்}, தாயின் வழியில் விருஷ்ணிகளையும் {சொந்தங்களாகக்} கொண்டவன் நீ. ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இந்த இருவரையும் உனக்குச் சொந்தமானவர்களாக நீ அறிவாயாக.

இப்போதே என்னுடன் வந்து, ஓ! ஐயா, யுதிஷ்டிரர் பிறப்புக்கு முன்பே குந்திக்குப் பிறந்தவன் நீ என்பதைப் பாண்டவர்கள் அறியச் செய்வாயாக. சகோதரர்களான ஐந்து பாண்டவர்கள், திரௌபதியின் மகன், சுபத்திரையின் ஒப்பற்ற மகன் {அபிமன்யு} ஆகிய அனைவரும் உனது பாதத்தைத் தழுவுவார்கள் {உனது காலைப் பிடிப்பார்கள்}. பாண்டவக் காரணத்திற்காகக் கூடியிருக்கும் மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவரும் கூட உனது பாதத்தைத் தழுவுவார்கள்.
- See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section140.html#sthash.nC9aTMWs.dpuf

தர்மத்தின் விதிகள் முதல் ஆறு {6} வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு {6} வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தற்போதுள்ள வழக்கத்தின்படி நான் அதைச் சொல்கிறேன். ஓ பிருதா {குந்தி}, நான் சொல்வதைக் கேள்.

{1}அவை, தானே, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை,
{2} அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,
{3} பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,
{4} கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை,
{5} திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,
{6} கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,
{7} சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,
{8} சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,
{9} தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,
{10} கற்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,
{11} சகோதரன் மகன் பதினோராவது வகை,
{12} தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section120.html#sthash.HmT6yJUQ.dpuf

இவ்வழியில் பார்க்கப் போனால் என்னதான் சந்திரன் உயிரியல் தந்தை என்றாலும் "தேவகுரு"வே புதனின் தந்தை. எனவே அதை "குரு வம்சம்" என்று சொல்வதல்லவா முறை?

பின்னும் ஏன் சந்திர வம்சம் என்று சொல்கிறோம்???