Reply – Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: புத்தக திருத்த ஆலோசனைகள்.
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
//ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது..///

ஆம் நண்பரே, ஆங்கிலத்தில் அப்படித் தான் இருக்கிறது. கங்குலி சொல்லியிருக்கும் beak - அலகு, Wings - சிறகுகள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றை வாய் என்றும், விலா என்று மொழிபெயர்த்தால் குழப்பம் நேராது என்றும் நினைக்கிறேன். ஆறாம் நாளில் பாண்டவர்கள் அமைத்தது மகர வியூகம்தான் என்பது பல பதிப்புகளிலும் காணக்கிடைக்கிறது.  எனவே இப்போது அதை வாய் என்றும் விலா என்றும் மாற்றியிருக்கிறேன்.


2016-01-05 8:12 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஐந்தாம் நாள் போருக்கு பீஷ்மர் மகர வியூகம் அமைக்கிறார். அது மீன் / முதலை வடிவிலான வியூகமாகும்.

பீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.

    [1] முதலையின் சாயலில் இருக்கும் ஓர் அற்புதமான நீர்வாழ்விலங்கு என இங்கே விளக்குகிறார் கங்குலி. சிலரோ மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட ஓர் உயிரினம் என்கிறார்கள்.

- See more at: http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-069.html#sthash.oZAeKp3X.dpuf

ஆறாம் நாள் பாண்டவர்கள் மகர வியூகம் அமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது.. அலகு மற்றும் சிறகுகள் உள்ளன.

துருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் அலகாக அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.

கேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது சிறகானார்கள் {விலாவானார்கள்}. மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது சிறகில் {விலாவில்} அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓ!ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.


- See more at: http://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatha-Bhishma-Parva-Section-075.html#sthash.6AAOyVcf.dpuf

இந்த வர்ணனை  ஐந்தாம் நாள் அமைக்கப்பட்ட ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பை ஒத்திருக்கிறது.

அதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.

அதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.
- See more at: http://mahabharatham.arasan.info/2015/12/Mahabharatha-Bhishma-Parva-Section-069.html#sthash.VtI9OLsR.dpuf

ஆறாம் நாள் பாண்டவர் அமைத்தது என்ன வியூகம் என்பதைத் தெளிவாக்கவும்.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp399p630.html
To start a new topic under ஆலோசனைகள், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML