Reply – Re: அஸ்வத்தாமன்
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: அஸ்வத்தாமன்
— by Ramesh Ramesh
தகவலுக்கு நன்றி நண்பரே
உபபாண்டவர்கள் கொலையும், கிருஷ்ணன் சாபமும் பற்றிய தகவல்கள் மகாபாரதத்தில் சௌப்திக பர்வத்தில் உள்ளன. இது பதினெட்டு பகுதிகள் மட்டுமே கொண்ட சிறிய பர்வம் ஆகும். மேலும் மூல மகாபாரதத்திலும் இதுபற்றி குறைவான தகவல்களே உள்ளதாகவே தெரிகிறது. அவற்றை வேண்டுமானால் நான் உங்களுக்கு சுருக்கமாக தெரிவிக்கிறேன்.

தாங்கள் குறிப்பிட்டது போல் அஸ்வத்தாமன் பதினோரு ருத்ரர்களுள் ஒருவரின் அவதாரமே, மேலும் அவன் ஒரு சிறந்த வீரனும் ஆவான். அவனை அவ்வளவு எளிதாக கொல்ல முடியாது. அதே சமயம் அஸ்வத்தாமன் துரோணர், பீஷ்மருக்கு இணையான ஒரு வீரனா என்பது எனக்கு ஐயமாகவே உள்ளது.

காரணம் அஸ்வத்தாமன் பதிநான்காம் நாள் யுத்தத்தில் மட்டுமே மிக உக்கிரமாக போரிட்டதாக தெரிகிறது. மேலும் பதினான்காம் நாள் யுத்தத்தில் வியாசரிடம் அஸ்வத்தாமன் தன்னுடைய ஆக்னேயஅஸ்திரம் ஏன் கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் எரிக்கவில்லை என கேட்கும் போது அதற்கு வியாசர் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பதரி ஆஸ்ரமத்தில் இருந்த நர மற்றும் நாராயண ரிஷிகளின் அவதாரமென்றும், அஸ்வதாமனை பதினோரு ருத்ரர்களுள் ஒருவரின் அவதாரம் என்றும் அவர்களுடைய பிறப்பு ரகசியத்தை சொல்கிறார்.

சரி இனி உபபாண்டவர்கள் கொலை பற்றியும், கிருஷ்ணன் சாபம் பற்றியும் கங்குலியின் பதிப்பில் நான் படிதவற்றை உங்களுக்கு சுருக்கமாக சொல்கிறேன்.

பதினெட்டாம் நாள் இரவில் அஸ்வத்தாமன் கிருபர், மற்றும் க்ரிதவர்மாவுடன் சேர்த்து உறங்கிகொண்டிருக்கும் பாண்டவர் படையை தாக்க செல்கிறான். அப்பொழுது கூடாரத்தின் வாயிலில் காவல் காக்கும் ஒரு ராட்சசனுடன் முதலில் யுத்தம் செய்தான். அனால் அஸ்வத்தாமனால் அந்த ராட்சசனை வெல்ல முடியவில்லை. பிறகு மனம் நொந்த அஸ்வத்தாமன் சிவபெருமானை தொழுது ஒரு தீயை மூட்டி அதில் உயிர் தியாகம் செய்ய துணிந்தான். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு ஒரு சக்தி வாய்ந்த வாளை கொடுத்து, அவரும் அவனுக்குள் பிரவேசித்தார். இதனால் சக்தி கிடைக்க பெற்ற அஸ்வத்தாமன் அதன் பிறகு பாண்டவர் படையில் இருந்தவர்களை துவம்சம் செய்ய ஆரம்பித்தான். அதன் பிறகு அவன் உபபாண்டவர்களையும், திருஷ்டத்யும்ணனையும், சிகண்டியையும் மற்றும் பல முக்கிய வீரர்களையும் கொன்றான்.

இதை சஞ்சயன் மூலமாக அப்பொழுது கேட்டுக்கொண்டிருந்த திருதிராஷ்டிரன் சஞ்சயனிடம் அஸ்வத்தாமன் துரியோதனன் இருக்கும்போது இது போன்று மகத்தான யுத்தத்தை ஏன் நிகழ்த்த வில்லை. துரியோதனன் வீழ்ந்த பிறகும் இப்படி ஏன் போரிடுகிறான் என்று கேட்டான்.
Dhritarashtra said, "Why is it that that mighty car-warrior, the son of Drona, did not achieve such a feat before although he had resolutely exerted himself for bestowing victory upon Duryodhana? For what reason did that great bowman do this after the slaughter of the wretched Duryodhana? It behoveth thee to tell me this!"
அதற்கு சஞ்சயன் பார்த்தன் மீது இருக்கும் பயத்தினால் தான் அஸ்வத்தாமன் இதவரை இவ்வாறு போரிடவில்லை, மேலும் தற்பொழுது கிருஷணனும், அர்ஜுனனும், சாத்யகியும் அங்கு இல்லாததால் தான் அவனால் இதை செய்ய முடிந்தது என்று பதில் கூறினான்.
Sanjaya said, "Through fear of the Parthas, O son of Kuru's race, Ashvatthama could not achieve such a feat then. It was owing to the absence of the Parthas and the intelligent Keshava as also of Satyaki, that Drona's son could accomplish it. Who is there, the lord Indra unexcepted, that is competent to slay them in the presence of these heroes? Besides, O king, Ashvatthama succeeded in accomplishing the feat only because the men were all asleep.  
மேலே நான் குறிப்பிட்ட திருதிராஷ்டிரன், சஞ்சயன் உரையாடல் கங்குலியின் பதிப்பில் சௌப்திக பர்வத்தில் எட்டாவது பகுதியில் உள்ளது. அஸ்வதாமனை நான் ஏன் பீஷ்மர், துரோணர், அர்ஜுனன் மற்றும் கர்ணனுக்கு நிகராக கருதவில்லை என்பதற்கு மேலே உள்ள உரையாடலே ஒரு சான்று.

பிறகு தன் மகன்கள் கொல்லப்பட்டதை கண்டு பாஞ்சாலி கதறி அழுவதை பார்த்த தர்மன் அவள் ஆறுதலை அடைய தான் என்ன செய்யவேண்டும் என கேட்டான். அதற்கு த்ரௌபதி அஸ்வத்தாமனின் தலையில் உள்ள புகழ்மிக்க மணியை பறித்து வரவேண்டும் என்று கூறினாள். இதை கேட்டவுடன் பீமன் அஸ்வத்தாமனை தேடி புறப்பட்டான். அஸ்வத்தாமனால் பீமனுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்த அர்ஜுனன் கிருஷ்ணனுடன் பீமனை தொடர்ந்து சென்றான். பீமன் தன்னை தாக்க வருவதை கண்ட அஸ்வத்தாமன் கோபம் கொண்டு பாண்டவர்களை அழிக்க பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். அதை பார்த்த அர்ஜுனன் அதை தடுக்கும் பொருட்டு தானும் பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான்.
  இவ்விரு பயங்கர அஸ்திரமும் ஒன்றோடு ஒன்று மோத வருவதை கண்ட ரிஷி நாரதரும், வியாசரும் அதை ஆகாயத்திலேயே தடுத்து நிறுத்தினர். அவர்கள் அஸ்வத்தாமனிடமும் அர்ஜுனனிடமும் அந்த அஸ்திரங்கள் மோதி கொண்டால் பெரும் வறட்சியும் அழிவும் வரும், அதனால் உலக நன்மைக்காக அவர்கள் அஸ்திரத்தை திரும்ப பெறவேண்டும் என்று வேண்டிகொண்டனர்.
அதற்கு அர்ஜுனன் ஒருவேளை நான் இந்த அஸ்திரத்தை திரும்பப்பெற்றாலும் அஸ்வத்தாமன் திரும்பப்பெறுவது சந்தேகமே ஏனென்றால் அவன் எங்களை கொல்வதில் உறுதியோடு இருக்கிறான், இருப்பினும் ரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி (அஸ்வத்தாமன் எங்களை கொன்றாலும் சரி) மூவுலகின் நன்மைக்காக நான் இதை திரும்ப பெறுகிறேன் என்று கூறி அஸ்திரத்தை திரும்ப பெற்றான்.
 If I withdraw this high weapon, Drona's son of sinful deeds will then, without doubt, consume us all with the energy of his weapon. Ye two are like gods! It behoveth you to devise some means by which our welfare as also that of the three worlds may be secured!'
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எவன் ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் பிரமச்சரியத்தையும் நல்லொழுக்கத்தையும் உறுதியாக கடைபிடிக்கிறானோ அவனால் மட்டுமே பிரம்மாஸ்திரத்தை திரும்ப பெற முடியும்.
அர்ஜுனன் நித்ய பிரம்மச்சாரி என்பதால் அவனால் திரும்ப பெற முடிந்தது (ஆம் பதிப்பில் அப்படித்தான் உள்ளது), அனால் அஸ்வத்தாமனால் அஸ்திரத்தை திரும்ப பெற முடியவில்லை(?).
  No person of uncleansed soul can bring it back after it is once let off. Only one that leads the life of a brahmacari can do it. If one who has not practised the vow of brahmacarya seeks to bring it back after having shot it, it strikes off his own head and destroys him with all his equipments.
 Arjuna was a brahmacari and an observer of vows. Having obtained that almost unobtainable weapon, he had never used it even when plunged into situations of the greatest danger. Observant of the vow of truth, possessed of great heroism, leading the life of a brahmacari, the son of Pandu was submissive and obedient to all his superiors. It was for this that he succeeded in withdrawing his weapon.
  பிறகு வியாசர் அஸ்வத்தாமனிடம், அர்ஜுனன் பிரம்மாஸ்திரம் மட்டும் அல்லாது, இன்னும் பல அடையமுடியாத சக்திமிக்க அஸ்திரங்களையும் பெற்று இருக்கிறான். இருப்பினும் மிக ஆபத்தான சூழ்நிலையிலும் கூட அவன் அதை பிரயோகிக்க வில்லை. ( அர்ஜுனன் சிவபெருமானிடம் இருந்து பெற்ற பாசுபதாஸ்திரத்தை எங்கும் பிரயோகிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது ), எனவே நீ பாண்டவர்களை கொல்ல கூடாது என்று கூறினார்.
  அதற்கு சம்மதித்த அஸ்வத்தாமன் பாண்டவர்களை கொல்ல மாட்டேன், அனால் அவர்களின் கடைசி வாரிசான உத்தரையின் கற்பத்தில் உள்ள சிசுவை கொல்வேன் என்று கூறி பிரம்மாஸ்திரத்தை உத்தரையின் கற்பத்தின் மீது செலுத்தினான். இதை கண்டு கோபமுற்ற கிருஷ்ணன் அஸ்வத்தாமனிடம் அந்த சிசு உயிருடன் இருக்கும் என்று கூறினான். பிரம்மாஸ்திரத்தை எய்த பிறகும் சிசு எப்படி உயிர் பிழைக்கும் என்று அஸ்வத்தாமன் கேட்க, அதற்கு கண்ணன் பிரம்மாஸ்திரம் ஒரு போதும் வீணாகாது, இருப்பினும் இறந்த சிசுவிற்கு நான் மீண்டும் உயிர்கொடுப்பேன் அந்த சிசு பரீட்சித் என்ற பெயரில் பூமியில் அறுபது ஆண்டுகள் மன்னனாக ஆட்சி செய்வான் என்று கூறினார்.
        பிறகு கிருஷ்ணன் அஸ்வத்தாமனை நோக்கி “ கருவில் இருக்கும் சிசுவை வதைத்த குற்றத்திற்காக நீ பூமியில் 3000 வருடங்களுக்கு மனிதர்களின் துணையின்றி தனித்து வாழ்வாய். எந்த மனிதர்களுடனும் இனி உன்னால் பேசமுடியாது இனி நீ மனிதர்களுக்கு மத்தியில் வாழ மாட்டாய், உன் உடம்பு முழுவதும் சீல் பிடித்து ரத்தம் வடியும், துர்நாற்றம் வீசும். மேலும் இந்த நோயுடனே நீ உலகம் முழுவதும் சஞ்சரித்து கொண்டு இருப்பாய், கொடிய மற்றும் இருண்ட காடுகளே இனி உனக்கு வசிப்பிடமாக இருக்கும்.” என்று சபித்தார்.
 As regards thyself, all wise men know thee for a coward and a sinful wretch! Always engaged in sinful acts, thou art the slayer of children. For this reason, thou must have to bear the fruit of these thy sins. For 3,000 years thou shalt wander over this earth, without a companion and without being able to talk with anyone. Alone and without anybody by thy side, thou shalt wander through diverse countries, O wretch, thou shalt have no place in the midst of men. The stench of pus and blood shall emanate from thee, and inaccessible forests and dreary moors shall be thy abode! Thou shalt wander over the Earth, O thou of sinful soul, with the weight of all diseases on thee.
பிறகு அஸ்வத்தாமன் தனது தலையில் உள்ள மணியை பண்டவர்களிடம் கொடுத்துவிட்டு கானகம் நோக்கி சென்றான். பின் தர்மன் கிருஷ்ணனிடம் அஸ்வத்தாமன் எப்படி நேற்று இரவு மட்டும் இவ்வளவு அற்புதமாக யுத்தம் செய்தான் என்று கேட்க அதற்கு கிருஷ்ணன் சிவபெருமானின் பெருமைகளையும், தட்சனின் யாகத்தை பற்றிய கதைகளையும் கூறி, சிவபெருமான் துணையினால் தான் அஸ்வத்தாமன் இவ்வாறு செய்ய முடிந்தது என்று கூறினார்.
        நண்பரே சௌப்திக பர்வம் முழுவதும் தட்டச்சு செய்ய அவகாசம் இல்லாத காரணத்தினால் நான் அவற்றை சுருக்கமாக மேலே குறிப்பிட்டிருக்கிறேன். இவை நான் கங்குலியின் பதிப்பில் படித்தவையின் சுருக்கம் ஆகும். வேறு பதிப்புகள் கிடைக்கததால் அவற்றை மட்டும் குறிப்பிட்டுளேன்.
குறிப்பு: இங்கே கிருஷ்ணன் அஸ்வதாமனை சிரஞ்சீவியாக இருப்பாய் என்று சபிக்கவில்லை, மூவாயிரம் வருடங்கள் இருப்பாய் என்றே சபித்தார். ஆகவே அஸ்வத்தாமன் சிரஞ்சீவியாக பிறந்தவனா என்பதை பதிப்பை நன்கு ஆராய்ந்த பின்னே தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும். வேறு யாரேனும் இதுபற்றி தெரிவித்தால் உபயோகமாக இருக்கும், முடிந்தால் அது எந்த பர்வத்தில் எந்த பகுதியில் வருகிறது என்பதையும் சேர்த்து தெரிவியிங்கள்.
மேலும் அர்ஜுனன் பல திருமணம் செய்தவன், பல மகன்களை பெற்றவன், அவன் எப்படி பிரம்மச்சாரியாக கருதப்பட்டான் என்பதையும் யாருக்கேனும் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!