Reply – Re: அஸ்வத்தாமன்
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: அஸ்வத்தாமன்
— by சதீஷ் சண்முகம் சதீஷ் சண்முகம்
வணக்கம்.

அஸ்வத்தாமன் பிறப்பே சிறப்புமிக்கது. சிவபெருமானின் மறு உருவமென்று கருதப்படும் ருத்ரனால் தோற்றுவீக்கபட்ட 11 ருத்ரர்களில் 1 ருத்ரரின் அவதாரமாவான் அஸ்வத்தாமன்.

துரோணர், சிவனை போன்றே சிறப்பம்சங்கள் மிக்க ஒரு புதல்வனை வேண்டி பல ஆண்டுகளாக சிவபெருமானை நோக்கி புரிந்த கடுந்தவத்தின் பயன் தான் அஸ்வத்தாமன். எந்த வகையான ஆயுதத்தாலும் மரணம் நேராதபடி  பிறக்கும்போதே நெற்றியில் மாணிக்கதோடு சிரஞ்சிவியாவதறகு  பிறந்தானே ஒழிய சிரஞ்சிவியாக பிறந்தவனல்ல.

மேலும், 7 வது மனுவந்தரம்  29 வது மகாயுகத்தில் வேதத்தை தொகுப்பவன் என்று கருதபட்டவன்.  

பீஷ்மர், துரோணர், கிருபர், கர்ணன், மற்றும் அர்ஜூனன் போல், தனுர்வித்தை வீரனாவான். பரசுராமர், மகரிஷி துர்வாசர், மகரிஷி வேத வியாசர், பீஷ்மர், கிருபா துரோணர் ஆகியோரிடத்தில் 18 விதமான வித்தை மற்றும் ஆய கலைகள் 64 க்கும் பயின்றவன்.

மகாபாரத போருக்கு முன், போரின்போது அஸ்வதாமனை  யாராலும் கொல்ல முடியாது என்று பீஷ்மரே  உரைத்திருக்கிறார்.

உபபாண்டவர்களின்  கொலைகளும், கிருஷ்ணனின் சாபமும் பல பதிப்புகளில்  குறைவான  தகவல்களே  உள்ளன. அதை பற்றி யாராவது  இங்கு பதிவு செய்தால் உபயோகமாக  இருக்கும்.

நன்றி.