Reply – Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
— by தமிழ் வள்ளுவர் தமிழ் வள்ளுவர்
ஐயா வணக்கம்,

எனது எண்ணம் யாதெனில் கர்ணனுக்கு நிகரான வீரன் வேறு யாருமில்லை.

கர்ணனின் பலவீனங்கள் மற்றும் சாபங்கள் பின்வருமாறு:-

1.கர்ணனின் சாவிற்கு முதல் மற்றும் முக்கிய காரணம் முனிவர் துர்வாசா ஆவார். அபர் குந்தியை ஆசீர்வதிக்கையில் மந்திரத்துடன் அவரது விருப்பத்திற்கு எந்த கடவுளையும் அழைக்கலாம் என்று ஆசீர்வதித்த அவர், அந்த மந்திரத்தின் பின்விளைவை அவரிடம் சொல்லவில்லை. எனவே, குந்தி அந்த மந்திரத்தின் பின்விளைவைப் பற்றிய விழிப்புணர்வின்றி தனது திருமணத்திற்கு முன்னதாக சூரியனை அழைத்தார். திடீர் பயத்தாலும் தொடர்ந்த தீய வழியினாலும் குழந்தை உருவானது. தேரோட்டி அதிரதாவினால் அவர் வளர்க்கப்பட்டதால் கர்ணனை க்ஷத்ரியராக ஏற்றுக்கொள்ளல் மறுக்கப்பட்டது. அஸ்தினாப்பூரின் சிம்மாசனத்திற்குரிய உண்மையான நபர் கர்ணன், யூதிஷ்திராவோ அல்லது துரியோதனனோ அல்ல, ஆனால் அவரது பிறப்பு ரகசியமாக வைக்கப்பட்டதால் இது அறியப்படவில்லை.

2.இராட்சத தேனீ வடிவத்தில் இருந்த பகவான் இந்திரன், கர்ணனின் தொடையைக் குடைந்தார். இது குரு பரசுராமரைக் கோபப்படுத்தியது, அவர் தொடர்ந்து கர்ணனை தனது சாதி பற்றி பொய்யுரைத்ததற்காக சாபமிட்டார். பின்னர் குருக்ஷேத்திராவில் நடக்கவிருந்த படுகொலைபற்றி பரசுராமருக்கு தெரியும் என்பது வெளியிடப்பட்டது. அர்ஜூனனுடன் போரிடும் முன்னர் இரவில் அவர் கர்ணனிடம் கனவில், உறுதியாக கௌரவர்களைத் தோற்கடிக்கவே கொடூரமான முறையில் அவரை நோக்கத்தோடு சாபமிட்டதாக விவரித்தார், கர்ணன் சாபத்தை பணிவுடன் ஏற்றுக்கொண்டதால், அவர் இறப்புக்குப் பின்னரும் எக்காலத்திற்கும் அழியாத புகழைக் கொண்டிருப்பார் என்று ஆசிர்வதித்தார்.

3.பசுவின் உரிமையாளரான பிராமணனின் சாபம்.

4.பூமாதேவியின் சாபம்.

5.பகவான் இந்திரனுக்கு தனது கவசம் மற்றும் குண்டலத்தை தன்னிடமிருந்து தானமாக அளித்தல், இந்த முறை அவர் பிச்சைக்காரராக மாறுவேடமிட்டிருந்தார், ஏனெனில் அவரது அதீத பெருந்தன்மைக் குணம்.

6.ஷக்தி ஆயுதத்தை கடோட்கச்சாவின் மீது செயல்படுத்தியது.

7.அவரது தாய் குந்திதேவிக்கு அளித்த அவரது இரண்டு சத்தியங்கள்.

8.அர்ஜூனனை கர்ணனின் நாகஸ்திரத்திலிருந்து காக்க கிருஷ்ணன் தேரை அழுத்தியது

9.குந்திக்கு தான் அளித்த இரண்டாவது சத்தியத்தின் பொருட்டு "நாகஸ்திரத்தை" இரண்டாவது முறை பயன்படுத்தாதது.

10.ஷால்யா, போர் மிகமுக்கியமான கட்டத்தில் இருந்த போது நடுவழியில் கர்ணனின் தேரை விட்டுச்சென்ற தேரோட்டி.

11.மகாபாரதப் போரின் ஆரம்பத்தில் கர்ணனுக்கு பாண்டவர்கள் தனது சகோதரர்கள் என்பது கிருஷ்ணர் மூலமாகத் தெரிந்தபோது, பாண்டவர்களின் மீதான கர்ணனின் பழிவாங்கும் எண்ணம் பயனற்றதானது. பாண்டவர்களின் மீதான கர்ணனின் பகைமை மறைந்தது. ஆனால், துரியோதனனின் மீதான விசுவாசத்தின் அடிப்படையில், கர்ணன் போரில் அர்ஜூனனுக்கு எதிராகப் போரிட முடிவுசெய்தார். மாறாக, பாண்டவர்கள் யாருக்கும் கர்ணன் அவர்களின் சகோதரர் என்பது கர்ணன் இறந்த பின்னர் வரையில் தெரியாது.

12.பகவான் கிருஷ்ணர், கர்ணன் தனது தேரை சேற்றிலிருந்து வெளியே கொண்டுவரும் போது அவரைக் கொல்லும்படி அர்ஜூனனை வற்புறுத்தினார்.

13.கர்ணன் ஆரம்பத்திலிருந்தே தனது தெய்வீக அம்பான விஜயாவை பயன்படுத்தவில்லை.

14.கிருஷ்ணர் அர்ஜூனனை கர்ணனிடமிருந்து மூன்று முறை ஷக்தி, பார்கவா அஸ்திரா மற்றும் நாகாஸ்திரா ஆகியவற்றிலிருந்து காப்பாற்றினார்.


கர்ணனின் பக்கம் இத்துணை பலவீனங்கள் இருந்தும், தருமனை கர்ணன் தன் பாணங்களால் வதைத்துப் பாசறைக்கு அனுப்பிய பின் அவர் மீண்டும் அருச்சுனனால் தேற்றப்பட்டு, அருச்சுனன் கர்ணனை எதிர்க்கக் கிளம்பும் சமயம் " அர்ச்சுனா, நீ போரிடப் போகும் கர்ணனுக்கு நிகரான வீரன் வேறு யாருமிலர். நீ சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் கர்ணனால் கொல்லப்படுவாய்" என கண்ணன் உரைத்த போது அருச்சுனனுக்குப் பயத்தால் முகம் வியர்த்தது என வியாசர் கூறுகின்றார். இதனின்று கர்ணன் அருச்சுனனுக்கே எவ்வளவு பயங்கரமான சிம்ம சொப்பனமாய் விளங்கியுள்ளான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து கர்ணன் தேரை மேலெழுப்ப முயற்சிக்கும் சமயம், ஒரு பாணத்தை அருச்சுனன் மேல் விடுவதும் அதனால் அவன் நிலை குலையும் போது "அர்ச்சுனா முதலில் போய் முறையாக போர் பயிற்சியைக் கற்றுக் கொண்டு வா" என ஏளனம் பேசுவதுமாக இருந்தான் என வியாச பாரதம் உரைக்கின்றது. இதனின்று கர்ணனின் பராக்கிரமத்தை உணரலாம்.

தொடர்ந்து பாண்டவ வீரர்களை வதம் செய்த எண்ணிக்கைப் பட்டியலில் வீடுமர் மற்றும் துரோணரைப்  போல் இரு மடங்கு சேனையை கர்ணன் கொன்று குவித்திருக்கிறான். அவனது பராக்கிரமத்துக்கு ஈடு இணையும் உள்ளதோ?

Bhishma killed nearly 1.27 Akshouhinis
Drona killed nearly 1.00 Akshouhinis
Karna killed nearly 2.37 Akshouhinis
Salya killed nearly 0.29 Akshouhinis
Ashwatthama killed nearly 0.09 Akshouhinis
Rest of the warriors 1.98 Akshouhinis

ஆக அவனோடு யார் அறவழி நின்று போர் புரிந்திருப்பினும் வெற்றி கொள்ள முடியாதவன் என்பது வெள்ளிடை மலை. அவனுக்கு நிகர் அவனே!

அடுத்து, திரு.அருட்செல்வ பேரரசன் அவர்களே,

சென்ற பதிவில் தாங்கள் அசுவத்தாமனின் இரவு நேரத் தாக்குதல் இகழத்தக்கது என கூறியிருந்தீர்கள். கருவினின்ற சிசுவைக் கொன்ற பாதகன் என உரைத்திருந்தீகள். அதைப் பற்றிய எனது கருத்து.

தொடக்கம் தொட்டே போரைத் தவிர்க்க போராடியவனும் பாண்டவருக்காக வாதாடியவனுமாகிய அசுவத்தாமன், துரியோதனன் காட்டு நரிகளுக்கு இரையாகிக் கொண்டிருப்பதைக் கண்டு எத்துணை மனம் வருந்தியிருந்தால்; பொங்கியிருந்தால் அவன் அத்துணை ஆவேசத் தாக்குதலை நடத்தியிருப்பான். உண்மையில் கூறப் போனால் துரியோதனனின் பால் கொண்ட விசுவாசத்தில் எள்ளளவேனும் குறையாதிருந்தவர்களுள் அசுவத்தாமனே முதலிடம் வகிக்கிறான்.

இரவு தாக்குதலுக்குச் சென்ற அசுவத்தாமனுக்குச் சக்தியும் வாளும் அளித்தது யார்? அந்த சர்வேசுவரனன்றோ? ஆக இக்குற்றத்தை அசுவத்தாமன் மேல் எவ்வாறு சொல்ல முடியம்?

அடுத்ததாக, அதரும வழியில் போர் புரிந்த பாண்டவருக்கு என்ன தண்டனை என்ற கேள்விக்கு எனக்கொரு பதில் கிடைத்தது. போருக்குப் பிறகு சொந்தங்களை இழந்து அனைத்துமிருந்தும் தனிமையில் வாழந்தனரே, அதுவே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்று நான் கருதுகிறேன். தனிமையின் இன்னலில் தருமர் எத்துணை துயருற்றிருந்தால் தவமியற்ற காடு செல்வோமென அவர் முடிவு கட்டியிருப்பார்? சுற்றம் அனைத்தையும் இழந்து வாழ்வதைக் காட்டிலும் பெரிய துன்பமும் உள்ளதோ?