Reply – Re: கர்ணன் பெண்களைப் பற்றி ஏன் அவதூறாகக் பேசினான்?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: கர்ணன் பெண்களைப் பற்றி ஏன் அவதூறாகக் பேசினான்?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
மஹாபாரதத்தில் பல இடங்களில் இவ்வாறு சுட்டப்பட்டிருந்தாலும். அதே போல பல இடங்களில் பெண்ணின் பெருமை பற்றியும் பேசியிருக்கிறார்கள்.

நண்பரே!

மஹாபாரதம் குறைந்தது 5000 வருடமாவது பழமையானது {இரும்புக் காலத்தில்) நடந்தது என்பதை மனதில் வைத்துக் கொண்டு இவற்றையெல்லாம் படிக்க வேண்டும்.

இன்றுகூட இது போன்ற பேச்சு நம் சமூகத்தில் உண்டு.

அதற்காக நாம் பெண்ணை மதிக்கவில்லை என்று அர்த்தமாகிவிடுமா?

மஹாபாரதம் பெண்கள் ஆதிக்கம் நிரம்பிய ஒரு காப்பியமாகும். இந்திய வரலாறில் வேறு எங்கும் பெண்களின் ஆதிக்கம் இவ்வளவு இருந்ததில்லை.

விசித்திரவீரியன் மாண்டதும், பெயருக்குத்தான் பீஷ்மர் காப்பாளரே தவிர, நாட்டின் தலைவிதி சத்யவதியின் கையிலேயே இருந்திருக்க வேண்டும். சத்தியவதி, குந்தி, காந்தாரி, திரௌபதி, சத்யபாமா, ருக்மணி, இன்னும் பலர் பலம் வாய்ந்த ஆளுமைகளாக இருந்திருக்கின்றனர்.