Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by Ramesh Ramesh
கர்ணனை ஒரு மாவீரனாக என்னால் நிச்சயம் கருதமுடியாது. காரணம் உண்மையான வீரன் உயிர் போகும் நிலை வந்தாலும் புறமுதுகிட்டு ஓட மாட்டன். பீஸ்மாரோ துரோணரோ அர்ஜுனனோ புறமுதுகிட்டு ஓடியதாக தெரியவில்லை. மேலும் வீரம் என்பது ஒருவருடைய துணிச்சலை வைத்து முடிவு செய்ய வேண்டுமே தவிர அவனிடம் உள்ள தெய்விக ஆயுதங்களையும், கவசங்களையும் வைத்து அல்ல.
பாஞ்சாலி கர்ணனிடம் அஸ்திரம் பறிப்பது, கர்ணன் சிறுவயதில் பீஷ்மர் வைத்த போட்டியில் ஜெயிப்பது போன்ற காட்சிகள் வியாசருடைய மகாபாரதத்தில் இல்லை. அவை விஜய் டிவி மகாபாரதத்தில் ஏற்படுத்தப்பட்ட இடைசொருகல் ஆகும். நண்பர் முனியராஜ் அவர்கள் மூல மகாபாரதத்தை பார்க்காமல், தொலைக்காட்சி மற்றும் திரைபடத்தை மட்டும் பார்த்து வாதிடுவதகவே தோன்றுகிறது. எனவே நண்பரே தாங்கள் வாதிடுவதற்கு முன்பு மகாபாரதத்தை இந்த வலைத்தளத்தில் pdf மூலம் பதிவிறக்கம் செய்து நன்கு ஆராய்ந்து பார்த்துவிட்டு தாங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.