Reply – Re: ஐவரின் பத்தினி திரௌபதி
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: ஐவரின் பத்தினி திரௌபதி
— by தாமரை தாமரை
திரௌபதி தான் மணக்காத யாருடனும் கள்ள உறவு கொள்ளவில்லையே. அப்படி இருக்க அவள் பத்தினி அல்ல என எதை வைத்துச் சொல்வீர்கள்?

எதிர்காலத்தில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து போனால் எப்படி ஓருத்தியை பலர் மணந்து சச்சரவின்றி வாழலாம் என்ற ஒரு முழு நெறியையே திரௌபதி மூலம் காட்டி இருக்கிறார் வியாசர்.

ஆத்மா பல பிறவிகளை எடுக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொருவரை மணக்கிறோம். அப்படிப் பார்த்தால் உலகில் பத்தினிகள் என்று யாருமே கிடையாது.

அதையே வியாசர் ஒரே வாழ்க்கையில் திரௌபதிக்கு உருவாக்கிக் காட்டுகிறார். அதை ஒப்புக் கொள்பவர் இதையும் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். நினைவில் வையுங்கள் உங்கள் மனைவி போனபிறவியில் வேறொருவரின் மனைவி.

கற்பு என்பது கற்பிக்கப்பட்ட நெறியின் வழி ஒழுகுதல் ஆகும். வியாசரும், நாரதரும் கற்பித்த நெறியின்படி அவள் ஒழுகினாள். கணவர்களை அவள் ஏமாற்றவில்லை. ஒவ்வொரு கணவனுக்கும் அவருக்குரிய பொழுதில் உண்மையாய் இருந்தாள். ஒருவருக்கு பத்தினியாய் இருப்பது கடினம் என்றால் ஐவருக்கு பத்தினியாய் இருத்தல் எவ்வளவு பெரிய தவம் என்பதை உணரவேண்டும்.

எனவே பதிவிரதாத் தன்மையில் திரௌபதி  சீதையை விட ஐந்துமடங்கு உயர்ந்தவள்.