Reply – Re: அபிமன்யு
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: அபிமன்யு
— by தாமரை தாமரை
போரே புகுவோரே புண்ணின்றி மீளாரே
ஆரே ஆயுனும் அவர்.

தருமன் பக்கம் தர்மம் இருந்தது. அவன் பக்கம் கடவுளே இருந்தார்.

ஆயினும் போர் என வந்தபின் அபிமன்யூ, கடோத்கஜன், இளம் பஞ்ச பாண்டவர், விராடன், துருபதன், த்ருஷ்டதுய்மன், சிகண்டி இப்படிப் பலப்பல வீராதி வீரர்களை இழந்தான். போரின் இயல்பு அப்படி.

சண்டை என்று வந்து விட்டால் சண்டையில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே இழப்புகள் வரும். அவர் யாராய் இருந்தாலும் சரி அவருக்கு யார் துணை இருந்தாலும் சரி காயம் உறுதி.

அது நான் எழுதிய குறள்.. வள்ளுவர் என்ன சொல்றார் தெரியுமா?

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

நல்லவன் ஆயிரம் நல்லது செய்தாலும் அவனது ஒரு குறை மட்டுமே நினைத்துப் பார்க்கப்படும்.
கெட்டவன் ஆயிரம் கெடுதல் செய்தாலும் அவன் செய்யும் ஒரு நன்மைக்காகவே அவன் போற்றப்படுவான்.

இதான் விதி என்பது. துரியோதனன் நல்லவன் என்றால் பீமனை மற்போருக்கு அல்லவா அழைத்திருக்க வேண்டும்?