Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by தாமரை தாமரை
கர்ணன் யாரிடமும் உயிர் பிச்சை வாங்கவில்லை. உண்மைதான். ஆனால் உயிர் வாழ்வதுதான் வீரமென்றால் அஸ்வத்தாமன் கர்ணனை விட மிகச் சிறந்த வீரனல்லவா?

கர்ணன் கவசமும் குண்டலமும் இந்திரன் இரந்து பெறாமல் இருந்திருந்தால் கர்ணன் இறந்திருக்க மாட்டான். ஆனால் தோற்றிருப்பான் என்பதே உண்மை. இந்திரனைக் கொண்டு கண்ணன் கவச குண்டலங்களைப் பெற்றது கர்ணனை வீரனாக்கத்தான். விராடப் போரில் மோகன அஸ்திரத்தால் மயங்கிய கர்ணன் மேலாடையை உத்தரன் எடுத்துச் சென்றது உமது நினைவிலேயே இல்லை. என்ன செய்ய?

கர்ணன் நினைத்தாலும் சரி, பீஷ்மர் நினைத்தாலும் சரி, துரோணர் நினைத்தாலும் சரி நடந்தது என்னவோ கண்ணன் நினைத்தது மட்டுமே.   அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

மிக அடிப்படையாக நீங்கள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். மகாபாரதத்தில் வீரம் வென்றது என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? வீரம் மட்டுமே வெற்றிக்குப் போதாது என்பதை மகாபாரதம் தெளிவாகவே காட்டுகிறது.

கர்ணன் பல முறை வெல்லப்பட்டிருக்கிறான். பல விற்கள் இழந்திருக்கிறான். பல தேர்கள், பல கொடிகள் இழந்திருக்கிறான். பல சாரதிகளையும் இழந்திருக்கிறான். அர்ச்சுனன் ஒருவன் மட்டுமே மகாபாரதத்தில் வில், தேர், சாரதி என எதையும் இழக்காதவன். எதிரிகள் அவனை அதிகபட்சம் வில் நாணை அறுத்தனர்.. மயக்கம் வரும் அளவிற்கு காயப்படுத்தினர் அவ்வளவே.

அபிமன்யுவை வீழ்த்தியது துச்சாதனின் மகன். கர்ணன் செய்தது அபிமன்யுவின் வில்லை அழித்தது.

பிரச்சனை என்னவென்றால் நீங்கள் கர்ணன் மாவீரன் மாவீரன் என்று சொல்கிறீர்களே அன்றி கர்ணன் ஏன் மாவீரன் என்ற காரணத்தை அடுக்க மாட்டேன் என்கிறீர்கள். கர்ணன் எங்கெங்கு வென்றான்.. எங்கெங்கு தோற்றான் என இங்கே பட்டியலே உள்ளது. அவற்றை முழுதும் படிக்கவும். அர்ச்சுனன் கர்ணனால் எத்தனை முறை தோற்கடிக்கப்பட்டான் எனவும் பட்டியலிடவும்.

நீங்கள் சொல்லப் போவது ஐந்தாறு விசயங்கள்தான் அத்தனைக்கும் சரியான பதில் நான் கொடுப்பேன். மற்றபடி சிறு குழந்தை போல அழுது அடம் பிடிக்காதீர்கள்.

மகாபாரத யுத்தம் போர்களத்தில் ஆரம்பித்து 18 நாளில் முடியவில்லை.

சல்லியனை ஏமாற்றியது, யாதவர் படையைப் பெற்றது என துரியோதனனாலும் சகுனியாலும் மிக முன்பாகவே ஆரம்பிக்கப்பட்டது. கண்ணனும் ஆயுதம் ஏந்தாமலேயே தான் சார்ந்த படைக்காக இராஜதந்திரங்கள் செய்தார்.

கர்ணன் மாவீரன் என்றால் அர்ச்சுனனைக் கொல்ல இந்திரனிடம் சக்தி அஸ்திரம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல் நாகாஸ்திரம் அர்ச்சுனனை நான் கொல்கிறேன் என்று வந்தபோது ஏற்றுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அவையெல்லாம் யுத்தநியதி.

துரியோதனன் ஏன் பீஷ்மரை ஒதுக்கி விட்டு கர்ணனை முதல் நாளே தளபதி ஆக்கி இருக்கக் கூடாது முனியராஜ்?