Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by தாமரை தாமரை
துரியோதனன் தன் மனைவிக்கு உண்மையாக இருந்தான் என சொல்கிறீர்கள். பானுமதி மட்டும்தான் அவன் மனைவி. என்றாலும் அவனுக்கு அவள் மூலமாக லக்ஷ்மணா என்ற பெண் குழந்தையும் இலக்ஷ்மண குமாரன் என்ற மகனும் இருந்தார்கள். ஆனால் பெயர் தெரியா இன்னொரு பெண்ணின் மூலம் துர்ஜெய் என்ற மகனும் உண்டு.

கிருஷ்ணனின் தங்கை சுபத்ரா துரியோதனனுக்கு நிச்சயிக்கப்பட்டாள். ஆனால் அர்ச்சுனனை அவள் காதல் மணம் புரிந்தாள்.

திரௌபதி சுயம்வரத்திற்கு துரியோதனன் ராக்கி கட்ட வரவில்லை. அவளை மணந்து கொள்ளவே வந்தான்.

அவன் துரதிர்ஷ்டம் அவன் மணந்து கொள்ள விரும்பிய பெண்கள் யாருக்குமே அவனைப் பிடிக்கவில்லை.

திரௌபதியை அரசசபையில் துகிலுரியச் சொன்னதன் மூலம் அவன் அவமானப்படுத்தியது பாண்டவர்கள், திரௌபதியை மட்டுமல்ல..

அத்தினாபுர அவையை
தாய் காந்தாரியை
தந்தை திருத்ராஷ்டிரனை
பாட்டன் பீஷ்மரை
சித்தப்பன் விதுரரை
தன் சகோதரன் விகர்ணனை
தன் குருக்கள் கிருபர் மற்றும் துரோணரை

தர்மப்படி அப்போதே த்ருதராஷ்டிரன் துரியோதனனை தண்டித்திருக்க வேண்டும். அரசவையில் துரியோதனன் தனக்கு திரௌபதி மீதான அதிகாரத்தைக் காட்ட அவனுக்கு அதிகாரமில்லை. அவனுடைய அடிமையே அவள் என்றாலும் அவளை அவன் அரசவையில் தண்டிக்க முடியாது. அரசவையில் அரசன் மட்டுமே தண்டனை தர இயலும்.

எனவே துரியோதனனின் அகங்காரம் அவன் யாரையும் அவமானப்படுத்த துணிவு கொள்ளச் செய்தது. துரியோதனனின் வீழ்ச்சிக்குக் காரணம் இந்த உச்ச கட்ட நிகழ்வுதான். அவன் பீமனைக் கொல்ல முயற்சித்தது, பாண்டவர் ஐவரையும் கொல்ல முயற்சித்தது, நாட்டைக் கவர்ந்தது என அனைத்துமே மன்னிக்கப்பட்டது.

எனவே துரியோதனன் ஆகவே இருந்து பார்த்தாலும் துரியோதனின் அகங்காரமும் த்ருதராஷ்டிரனின் இயலாமையும்தான் துரியோதனனின் வீழ்ச்சிக்கே காரணம்.

இராஜசூய யாகத்தையோ அஸ்வமேத யாகத்தையோ பாண்டவர் இந்திரபிரஸ்தம் சென்ற உடன் த்ருதராஷ்டிரன் செய்திருந்தால் துரியோதனான் பேரரசனாகி இருப்பான். தர்மன் சிற்றரசன் ஆகி இருப்பான். அங்கே கோட்டை விட்டு விட்டு தனிப்பட்ட விரோதத்தில்தான் துரியோதனன் குறியாக இருந்தான். அதனால் அவனுக்கு அரசனாகத் தகுதி உண்டா என்பதே கேள்விக்குறி.