Reply – Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
— by தாமரை தாமரை
- See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-017.html#sthash.j9zm2WfI.dpuf

[1] "Magha Vishayagas Somas என்பது சோமன், அல்லது சந்திரன் மக நட்சத்திரக்கூட்டத்தில் நுழைந்ததாகச் சொல்லவில்லை என்று ஒரு நீண்ட குறிப்பில் நீலகண்டர் விளக்குகிறார். போர் தொடங்கிய நாள் எது என்ற கேள்விக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மகாபாரதத்தில் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற சுலோகங்களை மேற்கோளாக இட்டு, அவை அனைத்தும் வேறு ஒரு தீர்மானத்திற்கு வழிவகுப்பதாகவே அவர் காட்டுகிறார். பித்ருக்களின் உலகை அணுகும் நிலவு என்பதன் பொருள் என்னவென்றால், போரில் விழுவோர் உடனடியாகச் சொர்க்கத்திற்கு உயர்வார்கள்; நிச்சயமாக, அவர்கள் பித்ருக்களின் உலகத்திற்கே முதலில் செல்ல வேண்டும். அங்கே இருந்து அவர்கள் தெய்வீக உடல்களை அடைய சந்திர மண்டலத்திற்குச் செல்ல வேண்டும். இவை அனைத்தும் ஒரு சிறிய தாமதத்தையே குறிக்கிறது. எனினும் இங்கே, குருக்ஷேத்திரக் களத்தில் விழுவோரின் வழக்கில், அவர்கள் அத்தகைய ஒரு சிறிய தாமதத்தைக்கூடப் பெற மாட்டார்கள். விழுந்த வீரர்கள் மிக விரைவில் தெய்வீக உடலைப் பெறுவதற்காகவே சந்திரன், அல்லது சோமன் பித்ருக்களின் உலகத்தை அணுகினான். உண்மையில் {அங்கே வீழ்ந்த வீரர்கள்}, பிரகாசமிக்கத் தங்கள் உடல்களுடன் சொர்க்கத்திற்கு உயர்வதற்கு முன்னர்ச் சந்திரலோகப் பயணத்தில் அவர்கள் எந்தத் தாமதத்தையும் அடைய வேண்டிய அவசியமில்லை என்பதே இங்கே பொருள்" என்கிறார் கங்குலி.

[2] புராண வானியல்கள் அனைத்திலும் ஒன்பது கிரகங்களே உள்ளன. அவற்றில் ராகுவும், கேதுவும் உபக்கிரகங்களாகும். எனவே, மொத்தம் ஏழு கிரகங்கள் மட்டுமே உண்டு. இவ்வாறு இருக்க, நீலகண்டரும், பர்துவான் பண்டிதர்களும் இந்த வரியை மிகவும் குழப்பிவிட்டனர் என்கிறார் கங்குலி.

------------------------------------------------------------------------------------------------------

போர் கார்த்திகை மாதம் துவங்கியது எனக் கொண்டால் மட்டுமே இந்தக் குழப்பம் வரும்.

களப்பலி ஆனி மாத அமாவாசை (அதாவது சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்த நாளில்) நடந்தது எனில், ஒவ்வொரு நாளை ஒவ்வொரு நட்சத்திரமாகக் கணக்கிட,

மிருகசீரிடம்,
திருவாதிரை,
புனர்பூசம்.
பூசம்,
ஆயில்யம்.
மகம்

ஆக 6 நாட்கள் ஆகிறது என்பதையே இவ்வரி உணர்த்துகிறது.

மகத்தில் ஏற்கனவே சனி இருப்பதைப் பார்த்தோம். சந்திரன் சனியுடன் சேர்வது என்பதையே இது குறிக்கிறது. சனி ஆயுள் காரகனாவான். சனியின் அதிதேவதை யமதர்மன். ஆக சந்திரவம்சம் ஆயுள் முடிந்து யமனிடம் சென்று சேரப்போகிறது எனவும் இது குறிப்பால் உணர்த்துகிறது. சந்திரன் பித்ருலோகம் அடைந்தான் என்பது அப்படியாக பொருளாய் வந்து தானாய் இங்கு சேரும்.

ரோகிணியில் அமாவாசை வருகிறது. அங்க்கிருந்து அனுஷம் எத்தனை நாட்கள்?

1.மிருகசீரிடம்,
2.திருவாதிரை,
3.புனர்பூசம்.
4.பூசம்,
5.ஆயில்யம்.
6.மகம்
7.பூரம்
8.உத்திரம்
9.அஸ்தம்
10.சித்திரை
11.சுவாதி
12.விசாகம்
13.அனுசம்

ஒரு நட்சத்திரம் என்பது ஒரு நாளுக்கும் சற்றே அதிகம் என்பதால் 14 ஆம் நாளே ஆனி மாதப் பௌர்ணமி வந்ததைக் காணலாம். இதையும் வியாசர் முன்பே குறிப்பிட்டிருக்கிறார்