Reply – Re: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?
— by தாமரை தாமரை
இன்றைய கார்ப்போரேட் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு இதை ஒப்பு நோக்க இயலும்.

வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ நிறுவன ஊழியர்கள் அனைவரும் ஒரு நாள் முழுக்க ஒரு ரிசார்ட்டிற்கோ அல்லது பிக்னிக் ஸ்பாட்டிற்கோ சென்று முழுக்க முழுக்க விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுவார்கள். இது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் ஒற்றுமையையும் தரும்.

எதாவது ஒரு புராஜக்ட் வெற்றியடைந்தால் கூட இது நடக்கும். இது ஒரு விதக் கொண்டாட்டம். இந்த கொண்டாட்டங்களில் மது இயல்பாக இடம்பெறும். மது அருந்திவிட்டு எந்த கார்ப்பொரேட் அலுவலகங்களிலும் வேலைக்கு வரமுடியாது. மது அவர்களின் தினசரி பழக்கம் அல்ல. என்றோ ஒரு நாள் இப்படி கொண்டாட்டங்களின் போது மட்டும்.

இன்னும் வட நாட்டில் ஹோலி பண்டிகைகளின் போது பாங்க் என்னும் மது அருந்தும் பழக்கம் உண்டு. தென்னாட்டில் கள் இருந்தது. இந்திய மதுவகைகள் பழரசங்களை புதைத்து ஊறல் செய்வதன் மூலம் பெறப்பட்டவை.

இந்திர பிரஸ்த நகரை அமைத்து, பிற நாட்டு மன்னர்களை வசப்படுத்தி, யாத்திரை சென்று சுபத்ரையை மணந்து கொண்ட அர்ஜூனன் இது போன்ற ஒரு கொண்டாட்டத்திற்கே தன் அரண்மனையில் உள்ளவர்களை அழைத்துச் செல்கிறான். அவர்களை விளையாட்டுக்கள், ஆடல் பாடல்களில் ஈடுபடச் செய்து மகிழ்வித்திருக்கின்றனர். சுபத்ரையும் த்ரௌபதியும் பரிசுகளையும் வழங்கி இருக்கின்றனர். அவரவர் அவரவர் விருப்பத்திற்கு இருந்து மகிழ்ந்திருக்கின்றனர்.

வேலைக்காரர்கள் என்றால் அடிமைகள் என்று கருதப்பட்ட காலம் அது என  நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். வேலைக்காரர்களின் சந்தோஷம், இன்பம் அவர்களைப் பாராட்டல் என நடந்த இந்த சம்பவத்தை ஏன் நாம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். அதே சமயம் கார்ப்பொரேட் நிறுவனங்கள் கொண்டு வந்த இதே டீம் அவுட்டிங் கலாச்சாரத்தை ஏன் உயர்ந்ததாகப் பார்க்கிறோம்? டீம் அவுட்டிங் மகாபாரதக் காலக் கலாச்சாரம் என ஏன் பார்க்க நம்மால் முடியவில்லை. ?