Re: அக்கால அறவழிக் கோட்பாடுகளும் இக்கால அறவழிக் கோட்பாடுகளும் வெவ்வேறானவையா?
அன்று பல மனைவியரை மணந்ததிற்கு காரணங்கள்
1. சந்ததி விருத்தி.
அக்காலங்களில் இளம் குழந்தைகள் மரணம் அடைவது சகஜமான ஒன்று. அதே போல் மருத்துவ வசதி குறைந்திருந்ததால் மனைவி பிரசவத்தில் இறப்பதும் அதிகம். அதனால் சந்ததி வளரவேண்டுமெனில் அதிக குழந்தைகளை பெற்றாக வேண்டும்.
பிறவி எடுப்பதே பிறருக்கு உதவத்தான் என்பது சனாதன தர்மக் கோட்பாடு. இல்லறம் என்பதே இந்த தர்மத்தை செய்ய உதவும் வாழ்க்கை தர்மம். தான் மட்டும் பிறருக்கு உதவவுவதில்லை தர்மம் என்பது. வழி வழியாக அந்த தர்மத்தை தொடர வைக்க வேண்டும். அதனால்தான் பிள்ளைகள் இல்லாதோர் புத் என்னும் நரகத்துக்கு ஆட்படுவர் எனச் சொல்லி வைத்தனர்.
2. ஆண்களின் எண்ணிக்கை குறைவு.
போர், வேட்டையாடுதல், தொழில் செய்யும்பொழுது அகாலமாக மரணமடைதல் இத்யாதி காரணங்களால் ஆண்கள் அதிகம் மரணித்துக் கொண்டே இருப்பர். அதனால் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
3. இனக்கவர்ச்சி
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான இனக்கவர்ச்சி இயல்பானது. அறநெறி என்பது இயல்பான இருவருக்கும் இடையிலான இனக்கவர்ச்சியை ஒப்புக் கொள்ளுதலே ஆகும். வலுக்கட்டாயமாக பிடிக்காத ஒருவரை அடைதலே அதர்மம் எனச் சொல்லப்பட்டது.
இன்று அன்று போல் ஆண்களின் எண்ணிக்கை இல்லை. பெண்களின் எண்ணிக்கையை விட அதிகம். குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்து விட்டது. அன்று அவ்வளவு ஏழ்மையில் குழந்தைகளை எளிதாக வளர்க்க முடிந்தது, இன்று பேராசை, ஆணவம், ஆடம்பரம் காரணமாக சில குழந்தைகளுக்கு மேல் வளர்க்க இயல்வதில்லை. பலபேருக்கு குழந்தை பெற்றுக் கொள்ளவே ஆசை இல்லை.
பெண்களை அடக்குதல் என்பது கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக மட்டுமே இங்கே இருக்கிறது. அது நம் கலாச்சாரத்தை சார்ந்தது அல்ல.
இன்று ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கம் இல்லாவிட்டால் பல ஏழை ஆண்களுக்கு திருமணமே ஆகாமல் அவர்களின் வம்சமே பூண்டற்று போய்விடும். அன்று ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளா விட்டால் பல பெண்களுக்கு திருமணமே ஆகி இருக்காது. வலிமை மிக்க சந்ததிகளை பெற்றிருக்க மாட்டார்கள். ஆக திருமணம் என்பதின் 5 ஒப்புக் கொள்ளப்பட்ட வகைகள் அன்றும் சரி இன்றும் சரி ஒன்றாகவே இருக்கிறது, மிச்சம் இரு திருமண வகைகள் குற்றங்களாக பார்க்கப்படுகின்றன.
""
அடுத்ததாக மது அருந்தி கும்மாளம் போட்டதாக நீங்கள் சொல்லி இருப்பது.
இதை நீங்கள் பாகவத புராணத்தில் படித்தீர்களா? மகாபாரதத்தில் படித்தீர்களா? இல்லை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஏதேனும் ஒருவர் எழுதிய புத்தகத்தில் படித்தீர்களா?
காரணமிருக்கிறது.
பாகவதத்தில்தான் இப்படி ஒரு காட்சி வரும்.
1. யாருமே கள் அருந்தி தன் இயல்பு நிலையிலிருந்து மாறி இருக்க மாட்டார்கள். அவர்கள் அங்கே செய்தது அவர்களின் இயல்பு நிலையே.
2. அந்த நிகழ்விலே ஒரு மிகப்பெரிய வாழ்க்கை உண்மை விளக்கத்தை த்ரௌபதி - சத்யபாமா உரையாடல் தரும். அதை நீங்கள் படித்ததாகவே தெரியவில்லை. இதை முழுமையாக படித்து உங்களுக்குத் தருகிறேன்.
தேனும் மதுதான், பழரசமும் மதுதான். இன்று ஒரு பிக்னிக் போய் நாம் விளையாடுவது போலவே அன்று அவர்கள் சென்றதும் ஒரு பிக்னிக் தான்.
மது என்றால் போதை தருவது என்றால் தாய்ப்பால் ஒரு சிறந்த மது. அது தெரியுமா உங்களுக்கு?