Reply – Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
இது முடியட்டும். வலைத்தள முகப்பில் வெளியிட வேண்டும்.


2015-08-07 13:59 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஜோதிடத்தில் ஸ்தான பலன் பார்வை பலன் என கிரகங்கள் இரு வகை பலன் தருவதுண்டு

கிரகங்களின் பார்வை

ஒவ்வொரு கிரகங்கத்திருக்கும் பார்வைகள் உண்டு. பார்க்கும் பார்வையினாலே கிரகங்கள் நன்மை தீமைகளை செய்யக் கூடியவை ஆகும்.

பொதுவாக எல்லாக் கிரகங்களுக்கும் 'ஏழாம் பார்வை' என்பது உண்டு. அதாவது தான் இருக்கும் இடத்திலிருந்து ஏழாவது இடத்தை பார்வையிடுவார்கள். இது போக 'சிறப்புப் பார்வைகளும்' உண்டு.

குருவுக்கு 7ம் பார்வை தவிர 5ம் பார்வை மற்றும் 9ம் பார்வைகள் உண்டு.

அதே போல் செவ்வாய்க்கு 4ம் பார்வை ­மற்றும் 8ம் பார்வைகள் உண்டு.

சனிக்கு 3ம் பார்வை மற்றும் 10ம் பார்வை உண்டு.

ஆக குரு, செவ்வாய், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் தான் 'சிறப்பு பார்வை' உண்டு.

மற்ற கிரகங்களான சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு சிறப்பு பார்வைகள் கிடையாது.

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கும் பார்வைகள் கிடையாது.

தூமகேது என்னும் வால் நட்சத்திரம் சந்துரனின் வேகத்தை மாற்றியதற்கு இன்னொரு உதாரணம் கர்ணன் சொல்லும்

சந்திர வட்டில் உள்ள கறை {களங்கம்}, தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html#sthash.LbMRXhJe.dpuf

உதாரணமாக இங்கே சனியை கவனிப்போம்..

பெரும் பிரகாசமிக்கக் கடுமையான கோளான சனைஸ்சரன் (சனிக் கிரகம்), பூமியில் உள்ள உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கச் செய்யும் வகையில், ரோகிணி நட்சத்திரக் கூட்டத்தைப் பீடிக்கிறது. - என்று கர்ணன் சொல்கிறான். See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html#sthash.LbMRXhJe.dpuf

சூரியனின் வாரிசு (சனி) பக {பூரம்} நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சென்று அதைப் பீடிக்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf

இப்பொழுது சனி பூர நட்சத்திரத்தில் இருந்தால் 10 ஆம் பார்வையாக ரோகிணி நட்சத்திரத்தைக் காண இயலும். ஆனால் ரோகிணி நட்சத்திரத்தில் இருந்தால் பூரம் நான்காம் இடமாகும். எனவே சனி பூர நட்சத்திரதில் இருந்தால் ரோகிணியை பார்க்க இயலும். கூடவே விசாக நட்சத்திரத்தையும் பார்க்க இயலும்.

 கடுங்கோள் (ராகு), சித்திரை மற்றும் சுவாதி நட்சத்திரக்கூட்டங்களுக்கிடையே தனது நிலையைக் கொண்டிருக்கிறது - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf

[2] இதே பத்தி வேறு பதிப்புகளில் "கடுங்கோளான ராகு, கோரமாகச் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தை வக்கிரகதியில் சுற்றி வருவதுடன் சித்திரை நட்சத்திரத்திற்கும், சுவாதிக்கும் மத்தியில் இருந்து கொண்டு, ரோகிணியையும் (ஒரே நட்சத்திரத்திலிருக்கிற) சந்திர சூரியர்கள் இருவரையும் பீடிக்கிறது" என்று இருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf

இங்கே கடுங்கோள் என்பதையும் சனியாக கொள்ளும் பட்சத்தில் சனியின் மூன்றாம் பார்வை விசாகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் பதிந்திருக்கிறது எனக் கொள்ளலாம். அதாவது சனி சிம்மராசியில் பூர நட்சத்திரத்தில் இருப்பதை இது உறுதி செய்கிறது. ஆக சூரியன் சந்திரன் ஆகியவை ஏழாம் பார்வையாக ரோகிணியைப் பார்க்க, சனி பத்தாம் பார்வையாக ரோகிணியைப் பார்க்கிறது. அதேசமயம் சனி 3 ஆம் பார்வையாக சித்திரை மற்றும் விசாக நட்சத்திரங்களைப் பார்க்கிறது எனக் கொள்ளலாம்.

இப்பொழுது செவ்வாயைப் பார்ப்போம்

முதலில் கர்ணன் சொல்கிறான்

ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, அங்காரகன் (செவ்வாய்) என்ற கோள், கேட்டை நட்சத்திரக்கூட்டத்தை நோக்கிச் சுழன்று, நண்பர்களின் பெரும் படுகொலைகளைக் குறிக்கும் வகையில், அனுஷத்தை {அனுஷ நட்சத்திரத்தை} {வக்ர கதியில்} அணுகுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section143.html#sthash.K6W39kyf.dpuf

பின்பு வியாசர் அமாவாசையன்று சொல்கிறார்

செவ்வாய் மகத்தை {மக நட்சத்திரத்தை} நோக்கிச் சுழல்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf

நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட சிவந்த உடல் கொண்டவன் (செவ்வாய்), சுற்றி வளைத்துச் சுழன்று {வக்கிரமாகி}, பிருஹஸ்பதியால் ஆக்கிரமிக்கப்பட்ட திருவோணம் {சிரவண} நட்சத்திரக்கூட்டத்துடன் நேர்கோட்டில் {தனது முழுப்பார்வையினால் அதை அடித்துக் கொண்டு} நிற்கிறான். - See more at: http://mahabharatham.arasan.info/2015/08/Mahabharatha-Bhishma-Parva-Section-003.html#sthash.lcv7NQj8.dpuf

ஆக சிரவணம், மகம் ஆகிய இரு நட்சத்திரங்களை  உள்ளன. சிரவணம் என்பது மகர ராசி. மகம் என்பது சிம்ம ராசி.  மகரத்தில் இருந்து சிம்மம் எட்டாம் பார்வை. எனவே செவ்வாய் மகரராசியில் இருக்க வேண்டும். கர்ணன் சொல்வது இதை உறுதிபடுத்துகிறது. கர்ணன் செவ்வாய் வக்கிரகதியில்  கேட்டையைத் தாண்டி அனுஷத்தை நோக்கி நகர்கிறது என்கிறான்.

ஆக கர்ணன் கண்டது வக்ரகதியின் இறுதிப் பகுதி எனக் கொள்ளலாம். அதன் பின் செவ்வாய் மீண்டும் முன்னோக்கி வேகமாக நகர்ந்து கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் தாண்டி திருவோணத்தில் பிரவேசிக்கிறது. செவ்வாயின் மொத்த வக்ரகதி 74 நாட்கள். இதில் கடைசி 20 நாட்கள் இந்த வித்தியாசங்கள் ஆகும். ஆக செவ்வாய் திருவோணம் நட்சத்திரத்தில் குருவுடன் மகர ராசியில் உள்ளான்.

புதன் சூரியனிடமிருந்து 30 டிகிரிக்குள் இருக்க வேண்டும்.

(---- தொடரும்-----)







If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp514p520.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML