Reply – Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: போரின் முன்பான அமாவாசையன்றைய கிரக நிலை.
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
வானவியலும் அறிவீர்களா? அருமை நண்பரே.

வெண்கோள் என்பது கேதுதான் என்று அடைப்புக்குறிக்குள் கங்குலி காட்டுகிறார். மேலும் கும்பகோணம் பதிப்பிலோ இதே இடத்தில் கருங்கோள் என்று வருகிறது. நான் கங்குலியைப் White Planet (Ketu) பின்பற்றி வெண்கோள் என்று இட்டேன்.

மேலும் 60 டிகிரி என்பது இரண்டு ராசிகள் சேர்ந்ததுதானே. அப்படியென்றால் சூரியன் ரிஷபத்தில் இருக்கும்போது சுக்கிரன் மீனத்தில் இருப்பது இயல்பான நிலையில்லையா? சுக்கிரன் இரண்டு ராசிகள் கடந்து நிற்பதை நான் கண்டிருப்பதாக நினைக்கிறேன்.

ஆனால் இங்கே ஒரு கிரகம் ஒரு நட்சத்திலிருக்கிறதா? அல்லது அதைப் பார்க்கிறதா? என்பதில் குழப்பமே இருக்கிறது. இன்னும் சற்று விரிவாகச் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும் நண்பரே. உதவிக்கு அந்தப் பகுதியின் ஆங்கிலத்தையும் பார்க்கவும். மேலும் கும்பகோணம் பதிப்பின் அந்தப் பக்கத்தையும் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

மேற்கண்ட பகுதியின் மொழிபெயர்ப்பில் ஏதாவது திருத்தம் தேவை என்று நீங்கள் கருதினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நன்றி.


2015-08-06 21:14 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஆகவே இந்த விஷயங்களை சற்று வித்தியாசமான கோணத்தில் அணுகலாம்.

சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தில் இருக்கிறார்கள் எனக் கொள்ளாமல் சூரியனும் சந்திரனும் ரோகிணி நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள் எனக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் அனுஷம் அல்லது கேட்டை நட்சத்திரத்தில் இருப்பதாக ஆகிறது. ராகு சித்திரையில் இருப்பதால் கிரஹணம் உண்டாக வாய்ப்புண்டு

அடுத்து வெண்கோள் எனப்படுவது சுக்கிரனாகும். அதுவும் கேட்டை நட்சத்திரத்தில் இருக்கிறது என்று கொள்ளலாம்.

இது கார்த்திகை மாதத்தைக் குறிக்கும்.

அப்படியானால் தூமகேது மகரத்தில் இருந்து பூச நட்சத்திரத்தைப் பார்க்கிறது. பீடித்தல் என்பதை அஷ்டமத்தில் இருத்தல் என்று கொள்ள வேண்டி வருகிறது.

இப்படிப் பார்க்கப் போனால் சுக்கிரன் பூரட்டாதி-உத்திரட்டாதியில் இருக்க முடியாது. அது புதனாகவும் இருக்க முடியாது. ஏனெனில் சுக்கிரன் சூரியனை விட்டு அறுபது டிகிரிக்கு மேல் நகராது.

ஆனால் ராகு துலா ராசியில் இருப்பதால் கேது மேஷ ராசியில்தான் இருக்க முடியும். இராகுவும் கேதுவும் அப்பிரதட்சினமாக சுற்றி வரும் என்பதால் மீனராசியில் கேது இருப்பதாக கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

கேது இராகுவுக்கு நேர் எதிராக இல்லாத காரணம் வால் நட்சத்திரமாக இருக்க வாய்ப்புண்டு. சந்திரன் பூமியைச் சுற்றும் வேகம் வால் நட்சத்திரத்தால் மாறியது இதற்குக் காரணமாக இருக்கலாம்.



இந்த இராசிக்கட்டம் கார்த்திகை அமாவாசை மற்றும் கிரகணத்தைக் குறிக்கிறது.



If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp514p516.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML