Reply – Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: தர்மம் அதர்மத்தை அநீதியால் வெல்வதால் என்ன பெருமை?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பர் மெய்யப்ப அருண் அவர்களே,

நல்ல பதில். கர்ணன் என்றால் யாராக இருந்தாலும் ஒரு Soft corner இருக்கும். அது அவனது இயல்புக்கே உரிய சிறப்பு. கீழே நான் கர்ணனை குறைத்துச் சொல்வதாக நினைக்க வேண்டாம்...

விராடப் போரில் கர்ணன் தெய்வீக வில்லைப் பயன்படுத்தவில்லையா? அல்லது அவனிடம் அந்த வில்லே அப்போது இல்லையா? பரசுராமரிடம் பெற்றதுதான் பார்க்கவ வில். கர்ணன் எப்போது பரசுராமரிடம் கல்வி பயில சென்றான்? அவன் அர்ஜுனனிடம் தோற்றுத் தோற்றே, எப்படியும் அர்ஜுனனை வீழ்த்த வேண்டும் என்ற முடிவில், பிறகே தெய்வீக ஆயுதங்களை அடைந்தான் என்றே படித்ததாக ஞாபகம்.

http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section192.html என்ற பகுதியில்

இதைக்கேட்ட பல்குணன் {அர்ஜுனன்}, "ஓ கர்ணா, நான் ஆயுத அறிவியலும் இல்லை, ஆதீத மனித சக்தி கொண்ட ராமனும் {பரசுராமனும்} இல்லை. நான், ஆயுதம் தாங்கிய வீரர்களில் முதன்மையான சாதாரண பிராமணன் மட்டுமே. எனது குருவின் அருளால், நான் பிரம்ம மற்றும் பௌரந்தர ஆயுதங்களைப் பெற்றிருக்கிறேன். உன்னைப் போரில் வெல்லவே நான் இங்கு இருக்கிறேன். அகையால், வீரனே சற்று பொறு!" என்றான்.

வைசம்பாயணர் தொடர்ந்தார், "(அர்ஜுனனால்)இப்படிச்சொல்லப்பட்டதை கேட்ட ராதையால் சுவீகரிக்கப்பட்ட மகன் கர்ணன், பிரம்ம சக்தி வெல்ல முடியாதது என்று கருதினான். ஆகையால் அந்தபெரும் பலம் வாய்ந்த ரத வீரன் போரிலிருந்து விலகினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section192.html#sthash.1K3Y3fGo.dpuf என்று வருகிறது.

மேலும், பல இடங்களில் அலட்சியத்தால் தோற்றான் என்பது ஏற்க இயலாததாக இருக்கிறது.

கர்ணன் ஜராசந்தனை விற்போரில் வீழ்த்தினான். ஆனால் கொல்லவில்லை. அவனால் கொல்லவும் முடியாது. உலகத்திலேயே மிகுந்த பலசாலி பீமனால் அவனைக் கொல்ல முடியும். ஆனால் அவனுக்கு சிறு சூட்சுமம்தான் தெரியவில்லை. அதைக் கிருஷ்ணன் சுட்டிக் காட்டியதும் ஜராசந்தனைக் கொன்றுவிட்டான். ஆனால் கர்ணன் நினைத்திருந்தாலும் ஜராசந்தனைக் கொன்றிருக்க முடியாது.

குருக்ஷேத்திரப்போரில் கர்ணனிடம் அனைத்து ஆயுதங்களும் இருக்கும் போதே, ஒரு முறை பீமன் கை ஓங்கி, கர்ணனைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அர்ஜுனனின் பகையை நாம் முடிக்க வேண்டாம் என்று விட்டான். அதே போல பீமனையும் ஒரு சந்தர்ப்பத்தில் கர்ணன் விட்டான்.

பிடிக்காத ஆசாரியன் சொன்னதால் அபிமன்யுவின் வில்லை பின்னால் இருந்து அறுத்தால் அது தவறாகாதா?

கர்ணன் 17வது போரில் வீரச்சாகசம் செய்ய வேண்டும் என்பது விதி. அணையப் போகும் விளக்குப் பிரகாசமாக எரிவதைப்போல....

நாம் ஒவ்வொருவருக்கு ஒரு அளவு கோலை வைத்துப் பார்க்கிறோம்.

அழையாத களத்தில் தன் வீரத்தைக் காட்டுவதற்காக வந்ததைச் சொல்லி பாண்டவர்களை அவமானப் படுத்தத் துணிந்தது? சபை நடுவே திரௌபதியைக் குறித்து கர்ணன் பேசி வார்த்தைகள், அபிமன்யுவைக் கொன்ற சூழ்ச்சியில் பங்கேற்றது. மேலும் கர்ணன் பல இடங்களில் பாண்டவர்களின் பிறப்பைக் கொச்சைப் படுத்துவது. இதில் கௌரவர்கள் ஆகட்டும், பாண்டவர்கள் ஆகட்டும், அல்லது கர்ணன் தான் ஆகட்டும், யாரும் முறையான வழியில் பிறந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் கர்ணனும் சரி கௌரவர்களும் சரி பாண்டவர்களை மட்டும் கொச்சைப் படுத்துவது. இன்னும் பல விஷயங்கள் ஞாபகத்தில் இல்லை.

பாண்டவர்களுக்கு வைக்கும் அதே அளவு கோலை கௌரவர்களுக்கும் கர்ணனுக்கும் வைத்துப் பார்க்க வேண்டும்.

நான் இவற்றைச் சொல்வதால் கர்ணனைக் குறைத்துச் சொல்லவில்லை. கர்ணனும் சரி துரியோதனனும் சரி மிக மிக நல்லவர்களே... திறமைசாலிகளே...

ஆனால், இருவரும் பொறாமை என்ற உணர்ச்சிக்குத் தங்களை அடமானம் வைத்திருந்தார்கள். அதுவே அவர்களது எல்லா வீழ்ச்சிக்கும் காரணம்.

கிருஷ்ணர் அர்ஜுனானிடத்தில் அர்ஜுனா நான் கர்ணனை உனக்கு சமமாகவும் கருதலாம் ஏன் உயர்வாகவும் கருதாலாம். என்று சொன்னது அர்ஜுனனின் கர்வத்தைப் பங்கப்படுத்தவே!

பூரிசிரவசு கதை நெடுநாளைக்கு முன்பு படித்தது நினைவில் இல்லை. படித்துவிட்டு, அதில் என்ன சமாதானம் சொல்லலாம் என்று பார்க்கிறேன். மேலும் தமிழ் வள்ளவர் அவர்கள் பகதத்தன் குறித்து கேட்டிருந்தார். அதுவும் எனக்கு நினைவில் இல்லை. படித்தபிறகு ஏதாவது சமாதானம் தோன்றினால் சொல்கிறேன்.