Reply – Re: வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!
— by தாமரை தாமரை
வாலி வதம் ஒரு குற்றம் - ஒரு அம்பு!

வாலி வதம் மட்டுமே தனியாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் அது குழப்பமாய் இருக்கும்.

இராமாயணத்தில் நான்கு பலவான்கள் உண்டு

1. வாலி
2. இராவணன்
3. கும்பகர்ணன்
4. அனுமான்

இதில் முதல் மூவரும் பலத்தை எப்படி உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உதாரணம். அனுமான் பலத்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதன் உதாரணம்.

வாலி தன் பலத்தை எண்ணிக் கொண்ட கர்வம் அவனை அனைவரிடமும் வலுச்சண்டைக்கு போகவைத்தது.

இராவணன் தன் பலத்தை எளியவர்களைக் கொடுமைப்படுத்தி அக்கிரமங்களை அரங்கேற்றவே பயன்படுத்தினான்

கும்பகர்ணன் அண்ணனின் அத்தனை ஆட்டங்களுக்கும் துணை நின்றான்.

வாலியின் மரணத்தின் போது இராமன் இன்னொன்றையும் சொல்கிறான்.

உலகம் முழுதும் இஷ்வாகு குலத்தினரின் ஆட்சி.. அந்த குலத்தைச் சேர்ந்த பரதனின் ஆட்சியில் நடக்கும் தவறுகளை தண்டிக்கும் உரிமை பெற்றவனாக இராமன் தன்னைச் சொல்லிக் கொள்கிறான்.

குற்றவாளியை எந்த அதிகாரியும் துவந்த யுத்தத்திற்கு அழைப்பதில்லை. விலங்குகளை மறைந்திருந்தே வேட்டையாடல் உத்தமம் போன்ற பல வாதங்கள் இங்கே இருக்கின்றன