Reply – Re: வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!
— by திருவாழ்மார்பன் திருவாழ்மார்பன்
தங்கள் கேட்ட ஒரு கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலளிக்கிறேன்.

இராவணன் பிரம்மாவிடம் வரம் வேண்டும் போது, தான் இன்னாரால் சாகக்கூடாது என்ற வரிசையில் வானரமான குரங்குகளையும், நரர்களான மனிதர்களையும் விட்டுவிட்டான் என்று வால்மீகி இராமாயணத்தில் உள்ளது.  எனவே தேவர்களான இந்திரனை வென்றுவிட்டான், ஆனால் குரங்கான வாலியிடம் தோற்றுவிட்டான்.

இந்திரஜித் இந்திரனுடன் போரிட்ட போது, இராமாவதாரம் நிகழ்ந்திருக்கலாம். எனவே இவன் இராமனால் அழியப்பட வேண்டியவன் என நினைத்து இந்திரன் வேறு உதவியை நாடாமல் இருந்திருக்கலாம். இது அடியேனுடைய கருத்து. பிழையிருந்தால் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.