Reply – Re: வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வாலி மற்றும் கர்ணனின் மரணங்கள் ஓர் ஒப்பீடு!
— by திருவாழ்மார்பன் திருவாழ்மார்பன்
நண்பர் திரு. தாமரை அவர்களுக்கு,

எதிர்பார்த்ததை விட விரிவான, கருத்தாழமிக்க பதிவாக குடுத்தமைக்கு நன்றிகள் எவ்வளவு உரைத்தாலும் தகும். இருப்பினும் இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு, இந்த இணையத்தின் அனைத்து அன்பர்கள் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் பதிவினை படித்தவுடன் ஒரு சிறு சந்தேகம் ஏற்பட்டது. கண்ணன் கீதையில் கர்மங்கள் தன்னை தீண்டாது என்று அர்ஜூனனுக்கு உரைக்கிறான். அப்படி இருக்கையில் கர்ம வசத்தினால் வேடன் கையால் அடிபட வேண்டிய அவசியம் என்ன? கடந்த பிறவியின் கர்மங்களை இந்த பிறவியில் நம்மைப் போன்ற ஜீவாத்மாக்கள் அனுபவிக்க வேண்டும் என்பது உண்மை. ஆனால் பரமாத்மாவான கண்ணன் ஏன் வாலி வதத்திற்கு இந்த பிறவியில் பலனை அனுபவிக்க வேண்டும்?  கண்ணன் நினைத்திருந்தால் வேறு வகையில் கூட புறப்பட்டு போயிருக்கலாம் அல்லவா?

மீண்டும் விளக்கத்திற்கு தங்களையே நாடுகிறேன்…