Reply – Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: எது சிறந்த இதிகாசம்? இராமாயணமா? மஹாபாரதமா?
— by தாமரை தாமரை
மிகச் சிறந்த தலைப்பு விவாதிப்பதற்கு. ஆனால் தலைப்பை சற்று மாற்றினால் இன்னும் மிகவும் நன்றாக இருக்கும்.

இராமாயணம் மற்றும் மகாபாரதம் இரண்டும் இரு வேறு மனிதர்களால் எழுதப்பட்டாலும் இரண்டும் ஒன்றிற்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஒரு இதிகாசத்தை ஒதுக்கி விட்டு இன்னொரு இதிகாசத்தை மட்டுமே படித்தால் நிறைவு கிட்டாது.

மகாபாரதத்தின் பல முடிச்சுகளை இராமாயணம் அறியாமல் திறக்க முடியாது.

இராமாயணம் ஒரு கோணத்தில் வாழ்க்கையைச் சொல்கிறது, மகாபாரதம் இன்னொரு கோணத்தில் சொல்கிறது.

மஹாபாரதம் எழுதிய வியாசர் மஹாபாரதத்தின் காலம் முழுதும் பயணித்தவர். பல முடிச்சுகளை இட்டவர் இவரே.

இராமாயணம் எழுதிய வால்மீகியோ மனக்கண்ணிலேயே எல்லாவற்றையும் கண்டு எழுதுகிறார். அதனால் மகாபாரதம் அளவிற்கு இராமாயணம் விரிவில்லாமல் இருப்பதாக தோன்றும்.

இராமாயணத்திலும் சரி, மஹாபாரதத்திலும் சரி பல நுட்பமான தர்ம விளக்கங்கள் உண்டு.

இராமன் முற்றிலும் நேர்மையானவனாக கருதப்படுகிறான்

கிருஷ்ணன் விவேகத்தில் வல்லவனாக கருதப்படுகிறான்

இராமாயணத்தில் இராமன் நேரடியான தலைவன்.

மஹாபாரதத்து கிருஷ்ணன் ஒரு வழிகாட்டி.

///இராம இராவண யுத்தத்தின் போது இராமனின் சைனியத்தில் எந்த ஒரு முக்கிய தளபதியும் மரணமடையவில்லை. நளன், நீலன், அங்கதன், ஜாம்பவான், அனுமன் முதலிய யாவரும் மரணமடையவில்லை. இறந்த மற்ற சாதாரண குரங்குகளும் மீண்டும் உயிர் பெற்றுவிட்டன. ஆனால் பாரத யுத்தத்தில் பாண்டவர்களைத் தவிர பாண்டவ சைனியம் முழுவதுமே முடிந்தது. இதைக் கொண்டு பாண்டவர்க்ளின் பக்கத்திலும் அதர்மம் இருந்தது என்பது உறுதியாகிறது. ///

இதை நாம் விரிவாக  நோக்க வேண்டும். இராம இராவண யுத்தத்தின் நோக்கம் இராமன் என்ற மனிதனுக்கும் இராவணன் என்ற அசுரனுக்கும் நடந்தது, வானரர்கள் இராமனுக்கு உதவினர். அரசன் என்ற முறையில் இராவணனுக்கு அசுரர் உதவினர். அது ஒரு நோக்குப் போர்.

மஹாபாரத யுத்தம் அப்படியில்லை. அதில் போரிட்ட ஒவ்வொரு பெருந்தலைக்கும் தனித்தனிப் போர் இருந்தது. அது ஒரு கூட்டுப் போர்.

சிகண்டி - பீஷ்மர், துரோணர், அஸ்வத்தாமன் - திருஷ்டத்துய்மன், துருபதன், கௌரவர் - பீமன், அர்ச்சுனன் - கர்ணன், விராடன்-சுசர்மன், கடோத்கஜன் - அலம்புசன், சாத்யகி - பூரிஸ்வரவசு சகுனி - சகாதேவன் இப்படி தனித்தனியே பல நோக்கங்கள்.

இராமாயணம் நேரடியாக இது தர்மம். இப்படிச் செய் எனச் சொல்வதாக இருக்கும்.

ஆனால் மஹாபாரதம் இதெல்லாம் தர்மம் போன்றே தோன்றும், இவற்றில் எப்படி தர்மத்தை பிரித்தரிவது? என சற்று மேலே சென்று சொல்வதாகும்.

அதாவது இதுதான் தர்மம் என்று சொல்வதோடு நின்றது போதவில்லை. தர்மம் என்ற போர்வையில் அதர்மம் எப்படியெல்லாம் நிகழும். இடம் பொருள் நேரம் இவற்றிற்கேற்ப தர்ம முரண்களை எப்படிக் களைவது என்பதை மஹாபாரதம் விளக்கும்.

ஆக இராமாயணம் படிக்காமல் மஹாபாரதம் படித்தாலும் பயணில்லை. அடிப்படை தர்மங்கள் புரியாது.

இராமாயணம் படித்து விட்டு மஹாபாரதம் படிக்காமல் விட்டாலும் தர்மசிக்கல்களை விடுவிக்க முடியாது.

விதுரனையும் விபீஷணனையும் ஒப்பிட்டும், கர்ணனையும் கும்பகர்ணனையும் அலசியும், இராமாயண சகோதரத்துவம் மகாபாரதச் சகோதரத்துவும் ஒப்பிட்டு கூட்டுக் குடும்பமும் வாலி மரணம், இந்திரஜித் மரணம் பீஷ்ம,துரோண,கர்ண, துரியோதன மரணம் ஆகியவற்றை ஒப்பிட்டு தர்ம அறிவும் பெறலாம். மஹாபாரதத்தின் புரியாத விஷயங்களை இராமாயண இணைகாட்சிகளுன் சேர்த்து ஆராய்ந்தால் மிகுந்த தெளிவு கிட்டும். அதனாலேயே இராமாயணம் எளிமையாகவும் மகாபாரதம் சிக்கலானதாகவும் இராமன் எளிமையானவனாகவும், கிருஷ்ணன் சிக்கலானவனாகவும் இருக்கிறபடி அமைந்துள்ளது.

ஆகவே எது உயர்ந்தது என வாதிடுவது கடுமையான காரியமாகும்.

இவ்விடம் பல அரிய அறிவுடை பெருமக்கள் கூடி உள்ளதால் இது சரியான இடம்தான் விவாதிக்க!!!