Reply – Re: pandavarkalin pillaikalil muthavan draupadi petra pillaya allathu subath...
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: pandavarkalin pillaikalil muthavan draupadi petra pillaya allathu subathirai petra abimayu va
— by தாமரை தாமரை
திரவுபதியின் கோணத்தில் இருந்து பார்த்தால் அவளுக்கு நேர்ந்த கொடுமை மட்டுமே தெரியும். ஆனால் நாம் வேறு கோணத்தில் இருந்து பார்க்கலாம்.

பாஞ்சாலர்கள் மற்றும் குருவம்சம் இருவருக்கும் இடையே பூசல். குருவமிசத்தின் அழிவையே பாஞ்சாலம் விரும்பியது.

இன்னொரு பக்கம் யாதவர்களுக்கும் மஹாபாரதப் போருக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் இரு புறமும் உதவி கேட்கப்பட யாதவர்களின் படை இருபுறமும் இணைந்து சண்டையிட்டது,பின்னர் காந்தாரியின் சாபத்தினால் யாதவ வமிசமே அழிந்தது.

யயாதியின் வாரிசுகளே யது வம்சமும் புரு வம்சமும்.யுக முடிவுக்கு ஆரம்பமும் இவ்விரு வம்சங்களே. முழுமையாக அழிந்ததும் இவ்விரு வம்சங்களே. ஆக இவ்விரு வம்ச இரத்தமும் கலந்த பரீட்சித்து புதுயுக தலைவனாக வருவதே பொருத்தமாக இருக்குமல்லவா?