Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by தாமரை தாமரை
துரியோதனனுக்கு உரிமை உள்ளதோ இல்லையோ அத்தினாபுர அரியணை அவனுக்கே கிடைத்தது. கிடைத்ததை வைத்துக் கொண்டு திருப்தி அடையவோ அல்லது நாட்டை விரிவு படுத்தி பெரிதாக்கி திருப்தி அடைவதிலோ அவன் நின்றிருந்தால் இவ்வளவு பெரிய அனர்த்தம் நிகழ்திருக்காது.

ஆனால் அவன் ஆசையை விட பொறாமையையே அதிகம் பெற்றிருந்தான். தருமன் ஒரு பொட்டல்காட்டை பெரு நகராக்கி, நாடுகளை பணிய வைத்து பேரரசனாகியது அவனுக்கு வெறுப்பைத் தந்ததால் அல்லவா, நாட்டைப் பிடுங்கினான்.

துரியோதனனுக்கு அத்தினாபுர அரசாட்சியைக் கொடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் எனப் பெரியவர்கள் போட்டக் கணக்கு தப்பாகிப் போனது இதனால்தான்.