Reply – Re: சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: சபையின் நடுவே திரௌபதியின் துகிலுரிப்பு உண்மைதானா?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே

இது ஏற்கனவே பல தளங்களில் விவாதிக்கப்பட்டு வருவதுதான். இது சம்பந்தமாக ஏற்கனவே நனது விவாதே மேடையில் திரு.மெய்யப்பன் அருண் அவர்கள் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

http://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section67.html மானம் காத்த மாயவன் சபாபர்வம் பகுதி 7அ என்ற பகுதியில் திரௌபதியின் துகிலரிப்பு சம்பவம் வருகிறது.

http://mahabharatham.arasan.info/2013/11/Mahabharatha-Vanaparva-Section12b.html கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா! வன பர்வம் பகுதி 12 ஆ என்ற பகுதியில் சபையில் நடந்த சம்பவங்களைப் பற்றி கிருஷ்ணனிடம் பாஞ்சாலி விவரிக்கிறாள். அதில் துகிலுரிப்பு குறித்து அவள் பேசவில்லை.

இது தவிரவும் பல இடங்களில் பழிதீர்க்கும் வசனங்கள் பேசப்படும்போதெல்லாம் திரௌபதியின் துகிலுரிப்பு பேசப்படவில்லை.

இது சம்பந்தமாக ஆங்கிலத்தில் ஒரு சுட்டியைக் கவனிக்கவும் :Was Draupadi Disrobed in the Dice Hall of Hastinapura? - See more at: http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=1766

இதனால் மகாபாரதத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது என்பதற்கு வேறு ஆதாரம் இல்லை என்று ஒரு தரப்பு வாதிடுகிறது. அதில் ஓரளவு நியாயம் இருந்தாலும்,  சபைக்கு வராத ஒரு பெண்ணை அவளுடைய மாதவிடாய்க்காலத்தில் இரத்தக் கறையுடன் அழைத்து வந்தது; அல்ல அல்ல இழுத்து வந்தது கௌரவர்கள் பாண்டவர்களுக்கு இழைத்த பெரும் அநீதியும் அவமதிப்புமே ஆகும்.

2014-10-30 22:16 GMT+05:30 ஜெயவேலன் [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ

சபாபர்வத்தில் வரும் மேற்கண்ட பகுதியில்

கர்ணனின் கட்டளையின் பேரிலேயே துச்சாதன் திரௌபதியின் துகிலுரிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதாக வருகிறது. இச்சம்பவத்தினைப் பற்றி மகாபாரதத்தில் வேறெங்கும் எவரும் பேசுவதாகக் குறிப்பு காணோமே.

அருட்செல்வபேரரசன் அவர்களே தாங்களே, எனது சந்தேகத்தினை போக்க வேண்டுகிறேன்.  தக்க பதில் அளியுங்கள்.



If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp393.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML