Reply – Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: பீமனுக்கு விஷம் கொடுத்தது கர்ணனா ?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நண்பரே,

நஞ்சு கொடுத்தபோது கர்ணன் துரோணரின் சீடனாக இருந்திருக்கமாட்டேன். ஏன் பாண்டவர்களே இல்லைதான் அவர் மறைந்து வாழ்ந்து வந்தார். ஆனால் அப்போதும் துரியோதனன் அறிந்திருக்க நிறைய வாய்ப்புண்டு...

அடுத்து நான் மொழிபெயர்க்க இருக்கும் வனபர்வம் பகுதி 307 //And it came to pass that at this time a Suta named Adhiratha, who was a friend of Dhritarashtra, came to the river Ganga, accompanied by his wife.// என்று கர்ணனின் வளர்ப்புத் தந்தை அதிரதன் திருதராஷ்டிரனின் நண்பர் என்று காட்டப்படுகிறார்.

அப்படியிருக்கும்போது, திருதராஷ்டிரனின் நண்பரின் மகனை துரியோதனன் அறியாதிருந்திருப்பானா?


கர்ணன் துரோணரின் சீடனாக இருந்திருப்பான் என்பதற்கு ஆதிபர்வம் பகுதி 134ல் வரும் வரிகளைக் கவனியுங்கள்

//

விரிஷ்ணிகள், அந்தகர்கள், மற்றும் பல்வேறு நிலங்களில் உள்ள இளவரசர்கள், சூத சாதியில் வந்த ராதையின் மகன் (கர்ணன் {சூரியமைந்தன்}) ஆகியோர் துரோணருக்குச் சீடர்களானார்கள். ஆனால் அவர்கள் எல்லோரிலும், சூதப் பிள்ளையான கர்ணன் மட்டும் அர்ஜூனன் மேல் பொறாமை கொண்டு, அவனை அடிக்கடி எதிர்த்தான். துரியோதனனின் துணை கொண்டு பாண்டவர்களை எப்போதும் அவன் அவமதித்தான்.//

என்று தெளிவாக கர்ணனை ராதையின் மகன், சூத சாதிக் காரன் எனச் சுட்டுகிறார்கள். இங்கு கர்ணனையும் துரியோதனனின் தம்பியான விகர்ணனையும் குழப்பிக் கொள்ள இயலாதே. மேலும் அடுத்த வரியிலேயே பாருகள் சூதப்பிள்ளையான கர்ணன் மட்டும் என்று பெயர் சுட்டப்பட்டிருக்கிறது. மேலும் அவன் அர்ஜுனன் மீது பொறாமை கொண்டிருந்தான் என்றும் சுட்டப்பட்டிருக்கிறது. எனவே கர்ணன் துரோணரின் மாணவனாக இருந்திருக்கவே வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.


மேலும் பல இடங்களில் கர்ணனின் பெயர்க்குறிப்புகள் வருகின்றனவே,

ராதையின் மகன் என்றும், ராதேயன் என்றும், சூத குலத்தவன் என்றும் அங்கும் இங்குக் குறிக்கப்பட்டே இருக்கிறான்.

உங்கள் ஆய்வில் இந்தக் கருத்துகளையும் கொண்டால் நன்றாக இருக்கும்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

2014-10-11 10:19 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
1. கர்ணன் துரோணரின் மாணவனாக  நஞ்சு கொடுத்த போது இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அப்பொழுது குருகுல வாசமே ஆரம்பிக்கவில்லை. துரோணர் கிருபரின் மனையில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். துரோணர் இருப்பது பீஷ்மருக்கே தெரியாத பட்சத்தில் கர்ணன் அவரிடம் குரு குலத்தவருடன் பாடம் கற்றான் என்பது இயலாத காரியம்.

2. கர்ணன் துரோணரின் மாணவனாக, குருகுலத்தில் ஏக காலத்தில் பயின்றிருந்தால், எந்த பயிற்சியிலும் அவன் பெயர் இடம் பெறாதது ஏன்? ஏகலைவனை அடையாளம் கண்ட துரோணர், கர்ணனை ஏன் அடையாளம் காணவில்லை?

3. நான் அறிந்த வரையில், அரச குலத்தவர் தவிர வேறு யாருக்கும் அஸ்திரவித்தைகளை துரோணர் பயிற்றுவிக்கவில்லை. அவர் கர்ணனுக்கு கற்றுத்தர மறுத்துவிடுகிறார். அதனால் கர்ணன் சூரியனையே குருவாகக் கொண்டு தன் விற்பயிற்சியை ஆரம்பிக்கிறான். பின்னர் பரசுராமரிடம் பிராமண வேடத்தில் சென்று கற்கிறான்.

4. கர்ணன் துரோணரின் குருகுலத்தில் கற்றிருந்தால் அவன் குல கோத்திரங்கள் கிருபர் முன்னரே அறிந்திருப்பார். அவர் கேட்டிருக்க வேண்டிய அவசியமே எழுந்திருக்காது.

5. கர்ணன் துரியோதனனுக்கு முன்பே அறிமுகம் ஆகியிருந்தால், துரியோதனனுக்கும் அவன் தேரோட்டி மகன் என்பது தெரிந்திருக்குமே.

குரு துரோணர், அரங்கேற்றத்திற்குப் பிறகு கர்ணன் அங்க மன்னன் என்ற முறையில் அவனைச் சீடனாக ஏற்று, திஷ்டதுய்மன் அவரிடன் கற்ற காலத்தில் சிறிது அஸ்திரப் பயிற்சிகள் அளித்திருக்கலாம்.

ஏனென்றால் அரங்கேற்ற வேளையில் திஷ்டதுய்மன் பிறக்கவே இல்லை. இருந்தாலும் துரோணர் அவனுக்கு குருவாக இருந்திருக்கிறார். அதனால் அரங்க்கேற்றத்திற்கு பின்னரும் துரோணர் அஸ்திரப் பயிற்சிகள் தந்து கொண்டுதான் இருந்தார் என்றே கொள்ள வேண்டும்.If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp366p378.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML