Reply – Re: கந்தன் கதை
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: கந்தன் கதை
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நன்றி நண்பரே

விளக்கம் அருமை.

2014-09-08 16:18 GMT+05:30 R.MANIKKAVEL [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
ஓம் முருகன் துணை

வணக்கம் நண்பரே! நன்றி. நல்ல ஒரு சிந்தனைக்கு வித்திட்டதற்கும் அழைத்தற்கும்.

நண்பர் திரு.அருட்செல்வ பேரரசன் நன்றாக  சொல்லி உள்ளார். கதையை எனக்கு தெரிந்தபடி  புரிந்தபடி சற்று விளக்குகின்றேன். நானும் மாணவன்தான். பெரியோர்கள் விளக்கினால் பயன்பெறுவேன்.

சிவக்குமரன் முருகன் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்தார் என்பது நாம் அறிந்த புராணம். இங்கு அக்கினியின் புதல்வன் சுவாகவின் மூலம் ஒரு கள்ளக்காதலால் தோன்றினார் என்று உள்ளது. அதுதான் விரசம்.

மனித மனம் தான் அறிந்த ஒன்றை மட்டும்தான் நம்பும் நம்பவைக்கும். நமக்கு தெரிந்தது நாம் அறிந்தது உடல் உறவு. இல்லை என்றால் குழந்தை இல்லை என்பது.

மனிதன் உடம்பால் ஆனவன் அதனால் உடம்பு உணர்வாகத்தான் அவன் சிந்தனை இருக்கும். இறைவன் உடம்பு இல்லாதவர் உடம்பு இல்லாத உணர்வால் அதாவது கருணையால் செயல்படமுடியும். கருணையையும் அறக்கருணை, மறக்கருணை என்று இரண்டாக பிரிக்கலாம். நோயுக்கு தகுந்தமாதரி மருத்துவர் தடவியும் கொடுப்பார் இல்லை என்றால் கத்தியால் அறுத்தும் எடுப்பார்.

இறைவன் மனிதர்களுக்காக அல்லது உயிர்களுக்காக உடம்பு எடுக்கின்றார். திருவிளையாடல் புரணத்தில் சிவபெருமான் பன்றிக்குட்டிக்களுக்காக தாய் பன்றியாக அவதாரம் எடுத்தார். தாய்கருணை.

இறைவன் உருவம் அருவம் உள்ளவன் என்பதற்கு பகவான் ராமகிருஷ்ணர் ஒரு உதாரணம் சொல்கின்றார். நீர்போலவும். ஐஸ்கட்டிப்போலவும். இந்த உதாரணத்தின்படி ஒரு பெரிய கடலில் இறங்குகின்றோம் நீரில் அமிழ்கின்றோம். அதில் ஒருவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஐஸ்கட்டியை அடைகிறான் அந்த ஐஸ்கட்டி ஒரு வடிவத்தில் இருக்கிறது அதைப்பார்த்தவன் அனுபவித்தவன் சொல்கின்றான் அந்த இடத்தில் இந்த சூழலில் இந்த வெப்பநிலையில் ஐஸ்கட்டித்தோன்றுகின்றது என்கிறான் அதுதான் பக்தி. பக்தியால் இறைவன் உறைகிறான். பக்தி இல்லாதவன் அதை நம்ப மறுக்கின்றான் “போடா.. கடல்ன்னா தண்ணி மட்டும்தான், இங்க எடுத்து வந்து காட்டு” என்கிறான் எடுத்துவந்தால் இந்த இடத்தில் இந்த வெப்பநிலையில்  அது தண்ணீராகத்தான் மாறும். இதைத்தான் இறைவனைக்காட்ட முடியாது என்கிறோம்.

பகவான் ராமகிருஷ்ணரும், சுவாமி விவேகானந்தரும் அன்னைக்காளியை கண்டது அப்படித்தான். அந்த சூழலுக்கு சென்றார்கள். விவேகானந்ததை அந்த சூழலுக்கு ராமகிருஷ்ண’ர் கொண்டு சென்று காட்டினார். நம்மால் அந்த குளிரைத்தாங்க முடியுமா?

இப்போது நாம் நமது  கந்தபெருமான் கதைப்படி மார்க்கண்டேயர் கண்டது என்ன? என்பதைப் பார்ப்போம்.

சிவனுக்கு சோமன் என்ற பெயர் உண்டு. சிவனுக்கு வலது கண் சூரியன் இடது கண் சந்திரன் நெற்றிக்கண் அக்கினி.

இந்திரன் தேவசேனாவிற்கு கணவன் தோன்றும் நேரம் எப்படி என்று மார்க்கண்டேயர் சொல்கின்றார். சூரியன் அக்கினி சந்திரன் மூன்றும் சேரும் நேரம் என்று. அவை மூன்றும் சேர்த்துப்பாருங்கள் சிவன் கிடைப்பார். சிவனின் நெற்றிக்கண்ணாகிய அக்கினியில் இருந்துதான் இங்கும் முருகன் தோன்றுகின்றார்.
 
வேதம் எந்த மந்திரத்தையும் உச்சரிக்கும்போது ஏழுகோடி மந்திரத்தால் முடிக்கவேண்டும் என்று சொல்கின்றது. ஏழு கோடி என்பது ஏழு முடிவைக்குறிக்கும் அவை
போற்றி்; நம
தெறிக்க ; சிலிர்க்க; பட்
கடிதொழிக;  ஹும்பட்
நிறைக; சூழ்க; காக்க; வௌஷட்
நீங்குக ; தன்மை மாறுக; வஷட்
வருக ; எழுந்தருள்க;   ஸ்வாஹா
பெறுக; ஸ்வதா  
(நன்றி ஈகரையில் –சாமி)

இந்த மந்திரங்களால் முடியும் மந்திரங்களை அக்கினிதேவன் தனது ஏழுகைகளில் ஒவ்வொரு மந்திரத்தை ஒரு கைகளில் வாங்கி அதன் அதி தேவதையிடம் சேர்க்கின்றார்.
மீண்டும் கதைக்கு செல்வோம். கதைப்படி அசுரர்களால் இன்னல்படும்  இந்திரன் தேவர்களுக்கு தலைவன் வேண்டும்  என்று மனதில் நினைக்கிறான். தேவசேனா கணவன் வேண்டும் என்று நினைக்கிறாள்.

இந்திரனை வீரத்தின் அடையாளமாகவும். தேவசேனாவை (அபலம்) பலமில்லாதவளாகவும் காட்டுகின்றார் மார்க்கண்டேயர். இந்திரன் தேவசேனாவை கண்டது மானச மலையில் (மனமாகிய மலையில் அதாவது அகத்தில்). இந்திரனின் பலமில்லாத மனம் தேவசேனாவாகிய முருகனை அடைய விரும்புகின்றது. தேவசேனாவின் தங்கை தைத்தியசேனா அவள் பலத்தின் அடையாளம். இந்திரன் மனம் பலமாக இருந்தபோது கேசினுடன் சேர்ந்து அழிந்தது குறிப்பாக நான் என்ற அகந்தையுடன் சேர்ந்து அழிந்தது.

இந்த நேரத்தில் சுவாக என்ற மந்திரம் அக்கினியுடன் கூடி உருவாகும் சக்தி  முருகன். விந்துவிற்கு சக்தி என்றுதான் பொருள். அந்த சக்தி எங்கு விழுகின்றது மானசகுளத்தில். மனதில்தான் தோன்றுகின்றான் முருகன். மந்திரம் தவம் செய்பவர்களுக்கு இன்றும் அதுதானே நடைமுறை. ஆறுமுறை கூடியதால் ஆறுமுகம். கூடிய நேரம் சூரியன் சந்திரன் அக்கினி இணையும் காலம். சிவனின் சொருபம். இணைந்த மந்திரம் சுவாக. சுவாக என்பதற்கு வருக.. எழுந்தருள்க என்பது பொருள். இப்போது பாருங்கள் விரசம் இல்லாமல் இருக்கும்.

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரம்மமாய் நின்ற ஜோதி பிழ்பது ஓர்மேனியாக
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரெண்டும் கொண்டே
ஒருதிருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய-கந்தபுரணாம்-கச்சிப்ப சிவாச்சாரியார்.

முருகன் இங்கும் உதிக்கின்றான். நமது கதையிலும் உதிக்கின்றான். சுவாக பெற்று எடுக்கவில்லை இதை கவனிக்கவும். பிறத்தல் என்பது வேறு உதித்தல் என்பது வேறு. காலாகாலத்திற்கும் சூரியன் உதிக்கின்றது ஒவ்வொரு நாளும் உதிக்கின்றது. அப்படி என்றால் நமது பார்வையில் இருந்து மறைந்து இருந்தது மீண்டும் நமது பார்வைக்கு வருகின்றது என்று பொருள். முருகன் என்றும் உள்ளவன் இன்று மார்க்கண்டேயர் பார்வைக்கு வந்து நமது பார்வைக்கு வருகின்றான்.

பிரம்மம்தான் சுவாக மந்திரத்தால் அக்கினியுடன்கூடி ஜோதி பிழம்பாகி முருகனாகியது. யாருக்காக யாருடைய வேண்டுதலுக்காக தேவர்களின் துன்பம் துடைக்க. தேவர்களின் மகளுக்காக. அந்த முருகனின் முகம் யாது கருணை..கருணை..கருணை..கருணை..கருணை..கருணை.

முருகன் கருணை உடையவன் என்பதால்தான் முருகனிடம் தாய்மை ஸ்தானம் அடைந்தார்கள் கார்த்திகை பெண்டீர். அம்மா ஆகுவது வேறு அம்மா ஸ்தானம் அடைவது வேறு. அம்மா ஒரு குழந்தைக்கு அல்லது சில குழந்தைக்கு. அம்மா ஸ்தானம் உலகம் உள்ள அளவும் அம்மாதான். ஒரு குழந்தையாக இருக்கும் முருகன் அம்மா ஸ்தானம் கொடுப்பது அற்புதம். குழந்தையாக நடிக்கின்றார் என்றும் இருப்பர் என்பது பொருள்.

கந்தனின் கருணையில் ஏன் சில தீயசக்திகள். பகல் என்றால் இரவு. குளிர் என்றால் வெப்பம் ஆண் என்றால் பெண் அமுதம் என்றால் விஷம் என்பதை நாம் அறிந்ததுதான். மண்பானையை சுட்டப்பின்பு நதியில் முக்கி தண்ணீர் எடுக்கலாம். சுடும் முன்பு அதில் ஒரு மழைத்துளிக்கூட விழக்கூடாது. குழந்தைகள் 16வயது வரை காக்கப்படவேண்டும் அவர்கள் உடலால் உள்ளத்தால் வளரவேண்டிய கட்டத்தில் உள்ளவர்கள். வளர்தல் என்பதே எதிர்த்து செயல்படுத்தல்தான். எதிர் சக்தியை எதிர்த்து நல்ல சக்தியை நோக்கி நடக்கவேண்டும் என்பதுதான் இந்த தீயசக்தியன் விளக்கம். நல்லது இருந்தால் கெட்டதும் இருக்கும். நல்லதும் கெட்டதும் வேறுவேறு அல்ல என்பதுதான் அதன் விளக்கம்.

சிறு குழந்தையில் குழந்தைகளின் அரைஞாண் கொடியில் புங்கை காயை கட்டி தொங்கவிடுவார்கள். அதற்கு உள்ள மகத்துவம் கக்குவாம் வராது குழந்தைகளை எதிர் கிருமிகள் தாக்காது என்பதுதான். இதை கதையில் மூலம் ஒரு உருவகம் செய்கின்றார் மார்க்கண்டேயர்.
கருணை மிகுந்த கந்தனை அவரது புகழ்நாமங்களால் போற்றினால் நல்லபேறுபெறலாம் என்பதையும் உட்கருத்தாக வைத்து உள்ளார்.

மார்க்கண்டேயர் முன்னோர்கள் சொன்னவகையில் சொல்லாமல் மந்திரத்தை பெண்ணாக உருவாக்கி மந்திரத்தை ஏற்றுச்செல்லும் அக்கினியை ஆணாக உருவாக்கி முருகனை படைக்கின்றார். குழந்தைக்கடவுளாம் முருகனை வணங்கி குழந்தைகள் வளம்பெற்று அதன் மூலம் வளமான பாரதம் உண்டாகவேண்டும் என்பது அவர்கொண்ட தவத்தின் வெளிப்பாடு.
ஒரு பொழுதும் இரு சரண நேசத்தே வைத்து உணரேனே
உனது பழநி மலையெனும் ஊரை சேவித்து அறியேனே
பெருபுவிற் உயர்வரிய வாழ்வைத் தீரக்குறினே
பிறவி அற நினைகுவன் என் ஆசைப்பாடை தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக்கார பெருமாளே
தொழுது வழிபடும் அடியவர் காவற்காரப் பெருமாளே
விருது கவி விதரண விநோதக் காரப்பெருமாளே
விறன்மறவர் சிறுமி திருவேளைக்கார பெருமாளே.-திருப்புகழ்-அருணகிரிநாதர்சாமி.(நன்றி கௌமாரம்.காம் http://www.kaumaram.com/thiru/nnt0123_u.html)


தொழுது வழிபடும்அடியவருக்கு காவல்காரனாக முருகன் இருக்கிறான் அதனால்தான் முருகன் இந்திரன் கேட்டும் இந்திரப்பதவி வேண்டாம் நான் காவல்காரனாக இருக்கிறேன் என்கிறான். பக்தனுக்காக பக்திக்காக இறைவன் சேவகனா வருகிறான். அர்ஜுனனுக்கு கண்ணன் சாரதியாக வரும்முன் கந்தன் வந்தான். எங்கள் கந்தன் வாந்தான். அதனால்தான் அருணகிரிசாமி பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள் என்கிறார்.


விழி்க்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்மை குன்றா
மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே-கந்தர் அலங்காரம்


வெற்றிவேல் முருகனுக்கு அரஹரோ ஹரா
வள்ளி மணவாளனுக்கு அரஹரோ ஹரா
தேவசேனாபதிக்கு அரஹரோ ஹரா

நன்றி
வாழ்க வளமுடன்If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp347p349.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML