Reply – Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: பட்டத்திற்குரியவன் துரியோதனன்தானே?
— by Arul Selva Perarasan Arul Selva Perarasan
நல்ல விளக்கம் நண்பரே


2014-08-28 11:34 GMT+05:30 தாமரை [via முழு மஹாபாரதம் விவாதம்] <[hidden email]>:
சந்ததியரில் மூத்தவன் அல்ல.. அரசனின் மூத்த மகனுக்கு.. இந்த தர்மம் கூட மஹா பாரதத்தில் உள்ளது. யயாதி தன் புதல்வர்களில் கடைசி மகனான புருவுக்கே அரசாளும் உரிமையைத் தருகிறார். புருவின் வாரிசுகளே ஆண்டனரே தவிர யதுவின் வாரிசுகளுக்கு நாடு போகவில்லையே. சந்தனுவும் தலை மகனல்ல. சிறந்தவனுக்கேப் பட்டம் என அவனது தந்தை பிரதாபன் சந்தனுவுக்குப் பட்டம் சூட்டுகிறார். சந்தனுவின் அண்ணன் சன்னியாசம் பூண்டு காட்டுக்குப் போய்விடுகிறார். பீஷ்மரே மூத்த மகன். அவனுடைய பட்ட உரிமை தியாகம் செய்யப்பட்டு அல்லவா, விசித்திர வீரியன் மன்னன் ஆனான். விசித்திர வீர்யனுக்குக் குழந்தை இல்லாத பொழுது வியாசர் மூலம் குழந்தைகள் பிறக்க பாண்டு அரசனானான்.

த்ருதராஷ்டிரன் ஒரு பாதுகாவலன். பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மன்னன் அல்ல. பாண்டுதான் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மன்னன். கார்டியன் சொத்துக்களை அமுக்கிக் கொள்ளத் திட்டம் போடலாமா?

ஆக வாரிசுரிமை எனப் பார்த்தாலும் சரி, தகுதி உரிமை என்று பார்த்தாலும் சரி, துரியோதனனுக்கு உரிமை இல்லை என்பதே சரி.


If you reply to this email, your message will be added to the discussion below:
http://x.2334454.n4.nabble.com/-tp22p343.html
To start a new topic under முழு மஹாபாரதம் விவாதம், email [hidden email]
To unsubscribe from முழு மஹாபாரதம் விவாதம், click here.
NAML