Reply – Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
Your Name
Subject
Message
or Cancel
In Reply To
Re: வஞ்சகன்--கண்ணனா, கர்ணனா?
— by தாமரை தாமரை
1.  நீங்கள் எப்பொழுது மாவீரனாகக் கருதப்பட வேண்டுமானால் மாவீரனை வெல்ல வேண்டும். ஆனால் மாவீரர்களுடனான யுத்தம் அவனுக்கு மறுக்கப்பட்டது ஆரம்பத்தில். பின்னர் மன்னனாக ஆக்கப்பட்ட பின்னரே அவனுக்குப் போர் செய்யும் வாய்ப்பே கிட்டியது. கர்ணன் அர்ச்சுனனே தனக்குச் சமமான எதிரியாகக் கருதினான்.  அதனால் அவனுடன் போட்டியிட்டான். அதனால் அவன் எப்படி வஞ்சகன் ஆக முடியும்? போட்டிகளிலேயே வீரம் வெளிப்படுத்தப்பட முடியும். அர்ச்சுனனுடன் நேருக்கு நேர் போரிட ஆசைப்பட்டது வஞ்சம் அல்ல. கோபம், விரோதம், எனச் சொல்லலாம்.

2. கோஷா யாத்திரை சகுனியின் மூளையில் உற்பத்தியானத் திட்டம். அதைத் துரியோதனன் ஆதரித்து இப்படி மன்னரிடம் பேசு என்கிறான். அதைத்தான் கர்ணன் பேசுகிறான். இங்க்கு கர்ணனே மூளை எனச் சொல்ல இயலாது. அவன் அதில் பங்கெடுத்தான்,

3. பரசுராமர் பீஷ்மருக்குக் கற்றுத்தரவில்லையா? அவர் ஷத்ரியர்தானே. கர்ணன் பிராமணன் அல்ல என எப்படி உறுதியாகச் சொல்ல முடியும். பிராம்மணத்துவம் பிறப்பால் என்றால், கஷ்யபரின் மகன் சூரியன், சூரியனின் மகன் கர்ணன். அப்படியானல் அவன் பிராம்மணன் அல்லவா? அப்படியானால் அவன் ஏன் ஷத்ரியன் எனச் சொல்லப்பட்டான்? அவன் தாய் ஒரு ஷத்ரியப்பெண் என்பதாலா?  ஆமாம் எனலாம். இடும்பியின் மகன் இராட்சஸனாகவே இருந்தான். விதுரன் சூதனாகவே கருதப்பட்டான். இதை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். திதியின் மக்கள் அசுரர்கள். அதிதியின் மக்கள் தேவர்கள் ஆனதும் தாய்வழியேதான்.  இவை விளக்கத்திற்காகத்தான் ஆனால் மச்சகந்தியின் மகன்கள் பிராமணன் வியாசனாகவும், ஷத்ரியர்கள் சித்திர வீரியன் விசித்திர வீரியனாகவும் ஆனார்கள். கர்ணனனுக்கு அவன் பிறப்பு தெரியாததால் அவன் வித்தை கற்கக் கூடாது என்பது வஞ்சனை அல்லவா? சமூகத்தின் வஞ்சனை அவன் மீது இருந்தது. அவன் ஷத்ரியன் என பரசுராமர் அறிவித்த பின்னரும் அவன் சூதனாகவே கருதப்பட்டான் அல்லவா?  பரசுராமரிடம் கற்ற வித்தையை ஷத்ரிய வம்ச பாதுகாப்பிற்கு செலவிட்டார் பீஷ்மர். அது வஞ்சனையா? அல்லது ஷத்ரியர்களுக்குச் சமமாக தன்னை உயர்த்திக் கொள்ள கண்ணன் போராடியது வஞ்சனையா?  கர்ணன் பரசுராமரிடம் பொய்சொன்னது ஏமாற்று வேலை. ஆனால் வஞ்சனை என்பது பரசுராமருக்கு இழப்பு ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதனால் அது வஞ்சகம் அல்ல. வஞ்சகத்தில் சுயலாபம் மட்டுமல்ல, யாரிடம் செய்கிறோமோ அவரிம் நஷ்டமும் இருக்க வேண்டும். வஞ்ச்சகம் என்ற வார்த்தையின் உண்மை பொருள் அதுதான். சூதாடியது வஞ்சகம், அரக்கு மாளிகை கட்டியது வஞ்சகம். பீமனுக்கு விஷம் கொடுத்தது வஞ்சகம். அனைத்து பொய்களும் ஏமாற்று வேலைகளும் வஞ்சகம் ஆகாது.

4. கர்ணன் நல்லவன் அல்ல என்பதும் கர்ணன் வஞ்சகன் என்பதற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது. வெற்றிக்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்து தன் விரோதியை பல்வீனனாக்கி அதன் இலாபத்தைப் பயன்படுத்திக் கொள்பவன் வஞ்சகன் ஆகிறான். தன்னை சூத புத்திரனென்று இகழ்ந்த திரௌபதியின் மேல் உள்ள குரோதம் அவனை அப்படிப் பேச வைத்தது. திரௌபதியின் ஐவர்மணம் புரியாத ஒன்றாகவே இருந்தது. மற்றபடி அவனுக்கு வன்மம் இருந்தது. வஞ்சம் இல்லை.

கோஷா யாத்திரையின் போது  நடந்த போரின் விவரனம் படியுங்கள். கௌரவர்கள் போருக்கு ஆயத்தமாகச் செல்லவில்லை. அது மனித தர்மங்களுக்கு உட்பட்ட யுத்தம் அல்ல. கூட்டம் கூட்டமாக கந்தர்வர்கள் வந்து அலைஅலையாக மாயங்கள் புரிந்து போரிடுகிறார்கள். யாரும் யாரையும் தாக்குகிறார்கள். இறுதிவரை போராடிய கர்ணன் தேரிழந்து, வில்லிழந்து விகர்ணனின் தேரில் ஏறிப் பிழைக்கிறான்.  கர்ணன் திரும்ப ஆயுதங்களோடு போருக்குச் செல்லும் வாய்ப்போ, பீஷ்மர் துரோணர் போன்றோர் வரும் வாய்ப்போ உண்டாகவில்லை. உடனடியாகப் பாண்டவர்கள் உதவிக்கு வருகிறார்கள். ஏனென்றால் அவர்கள்தான் அருகில் இருந்தனர்.  சித்திரசேனன் நண்பன் என்பதால் பெரும்போர், சிறுபோராகவே முடிந்தது.அதனால் ஏற்பட்ட பீஷ்மரின் அவ நம்பிக்கையை திக்விஜயம் செய்து கர்ணன் போக்க நினைக்கிறான். கர்ணனும் சிறைபட்டு இருந்தால்??? இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும். அதுவும் வஞ்சனை அல்ல.

உலகில் எதுவும் பூரண நல்லதும் அல்ல. பூரணக் கெட்டதும் அல்ல. ஒவ்வொன்றிற்கும் அதற்கு உரிய இடமும் செயலும் உண்டு. அது ஆகாத இடமும் செயலும் உண்டு. நம் அறிவுக்கு சரியான உபயோகம் தெரிந்தால் அது நல்லபொருள் என்கிறோம். நம் அறிவுக்கு தவறான உபயோகம் தெரிந்தால் அது கெட்டபொருள் என்கிறோம். குப்பைகள் கூடத் தவறான இடத்தில் உள்ள மூலப்பொருட்கள்தான். மனிதர்கள் ஆறறிவு பெற்றவர்கள். அவர்களின் மனம் மட்டுமே நல்லது மட்டும் கெட்டதுகளைத் தீர்மானிக்கிறது. விஷம் கெட்டது அல்ல. அதை உயிரைக் கொல்ல பயன்படுத்துபவன் தவறானாகிறான். மருந்து நல்லதும் அல்ல. அதன் உபயோகம் எப்படிப்பட்டது என்பதைப் பொருத்தே அதன் பயன் இருக்கிறது.

அப்படிப் பார்க்கப் போனால் நாட்டின் மனமாகச் செயல்பட வேண்டிய த்ருதராஷ்டிரனே அத்தனைக்கும் பொறுப்பேற்க வேண்டியவன்.