Reply – Re: Illegal relationship in Mahabaratha
Your Name
Subject
Message
=
Change code image
or Cancel
In Reply To
Re: Illegal relationship in Mahabaratha
— by தாமரை தாமரை
விதிமீறிய உறவுகள் என்று வரும்பொழுது, முதலில் கேட்க வேண்டியது விதி என்ன?

யார் உண்டாக்கியது?

புத் என்னும் நரகத்தில் இருந்து விடுபட புத்திரபாக்கியம் அவசியமாகிறது. அந்தப் புத்திரப் ப்ராப்தி  உண்டாக்கிக் கொள்ள தேவ சம்பந்தம், ரிஷி சம்பந்தம் என இரு வழிகள் சாத்திரங்களில் காட்டப்படுகின்றன.

தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் பிரஜாதிபத்தியக் கடமை தரப்பட்டிருக்கிறது. அதன் மூலம் அவர்களை பிரார்த்திப்பவர்களுக்கு புத்ரசம்பத்து தரக்கடமைப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே அனைத்து மனிதர்களும் ஒரு ரிஷியின் கோத்ரத்தாராகவே கருதப்படுகிறார்கள்.

பராசரர், தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள மச்சகந்தியைச் சேரவில்லை. உலகிற்கு வியாசர் போன்ற ஒரு மகானை உருவாக்க வேண்டி சேர்ந்தார். கலியுகத்திற்கு வேதங்களைப் பிரித்து எழுத அவசியம் இருந்ததால் செய்தார்.

வியாசரும், சந்திர வம்ச விருத்திக்காகவே அதைச் செய்ய வேண்டி வந்தது. குந்தியும் அப்படி வம்ச விருத்திக்காகவே செய்ய வேண்டி வந்தது.

மற்றபடி கள்ளத் தொடர்பு என்ற வார்த்தை இவ்விடத்தில் தவறானதாகும்.

இன்றும் இது உண்டு. கணவனுக்கு உயிரணுக்குறைபாடு இருக்கும் பொழுது விந்து தானம் பெறுவது விஞ்ஞானப்படி உண்டாக்கப்படுகிறது.

இதுவும் சரிதான் அதுவும் சரிதான்.